சங்ககால மன்னன் பிண்டன்

சங்ககால மன்னன் பிண்டன்
:::::::::::::::::::::::::::
சங்க காலத்தில் சேர,சோழ,பாண்டியர்கள் மட்டுமே அரசர்கள் அவர்கள் புகழ்மட்டுமே தமிழக மக்கள் மனதில் தினித்து விட்டனர், இவர்களை எதிர்த்து போர் செய்த சிற்றரசு களின் வீரத்தை மறைத்து கூறுவது ஏன் என்று தொரியவில்லை. அப்படி மூவேந்தர்கள் ஆட்சி காலத்தில் வீரம் செறிந்து வாழ்ந்த மன்னர்களை பார்ப்போம்
அழிசி,சேந்தன், அகுதை, அஞ்சி,அதிகன், அறுகை, அதியமான் நெடுமானஞ்சி, அட்டணத்தி, ஆய்,ஆய்எயினன், ஆரியப்பொருநன்,எயினன், எவ்வி,ஐயை,ஓரி,கட்டிகணையன்,கழுவுள், குறும்பியன், ஞிமிலி, தழும்பன், ததியன், தித்தன், வெளியன்,நள்ளி,நல்லடி,நன்னன்,நன்னன் ஆய்,நன்னன் உதியன்,நெடுமிடல்,பழையன், பாணன்,பிண்டன், போகன்,மத்தி,மருதி,மலையன், மிஞிலி,மோகூர்,வல்லங்கிழான்,நல்லடி, விச்சியர்,பெரு மகன்,விரான், வெளியன்,புல்லி, மருதன்,வேங்கைமுகன்.

* இவர்கள் அனைவரும் சங்ககால தமிழ் என்று குறிக்கப்படும் நூல்கள்

தாய்மொழி இலக்கிய வரலாறு, தமிழகத்தில் கோசர்கள்,அகநானுறு மனிமிடைபவளம் மூலமும் உறையும்,நற்றினை, அன்போடு புணர்ந்த ஐந்தினை, நாற்பெரும் புலவர்கள், சங்கால அரசர் வரிசை.

சரி நாம் நம் வரலாற்றை சற்று புரட்டுவோம். சங்ககால மன்னர்கள் தங்களை சங்கபாடல்கள் மற்றும்  கல்வெட்டுகளில்  குறும்பர்  என்றும் ஆயர் (புல்லினத்து ஆயர்  குறும்பர் )கூறியுள்ளார்கள் அவர்கள் பிண்டன், கழுவுள், மருதன்,வேங்கைமுகன் போன்றவர்கள் ஆவார்கள், இதில் நாம் பிண்டனை பற்றி பார்க்க பின்னோக்கி செல்வோம்.

பிண்டன்
::::::::::::::::::::::
                       * குறும்பர்  குடிதலைவருள் ஒருவன், இவன் பாழி நகரை ஆண்ட நன்னன் நாட்டை பிடிக்கும் விதமாக போர்களை தொடர்ந்து  கொண்டு  இருந்தான் என்று  நூல்களில் குறிக்கப்படுகிறது.
  
                    * பிண்டன் அழகு பொருந்திய பிரிந்த பிடரி மயிரையுடையவன் ,வழுத்ததோளும்,நீண்டமார்பையும்,கருத்தமேனியையும் உடையவன்.

                * பிண்டன் வலிமையான குதிரைகள் உடையவன் அப்படியானால்  பிண்டன் நெடுந்தூரம் பயணம் செய்யது போர் செய்ய கூடிய  திறன் பெற்றவன் என்பது விளங்குகிறது.

                 * பிண்டன் படை தங்கம் மற்றும் பொருள் சுமந்து வரும் கப்பலை தாக்கி அழிக்க வல்ல சுராமீனை போலது என்று கவிகள் கூறுகின்றனர்.பிண்டனின்  முழுபடையின் வீரத்தை அறிய அவனை  எதிர்த்து போரிட வந்த நன்னனின் படைகளை நாம்  பார்த்தோமானால்  பிண்டனின்  வீரம் தெறியவரும், நன்னன் நால் வகை படையையும்  தனிமிக கொன்டு இருந்தான்"இயல் தேர் நன்னன்"(அகம்) "பொலந்தேர் நன்னன் "(பதிற்றுபத்து)"எதை தேர்படையும்மையும்,சூழியானை சுடர்பூண் நன்னன் கறையடி யானை  நன்னன் "(அகம்)"என யானை படையுடைமையும்,வென்வேல் நன்னன்  (அகம் )வேற்படையுடைய நன்னன் இத்தனை ஆற்றலை கோண்டு போரிடசென்றான் என்றால். பிண்டனின் படை வீரத்தையும்,ஆற்றல் யும்  நினைத்தால்  உடல் சிலிர்க்கிறது.

       * இப்படி பெரும்படை திரட்டி நன்னன்  வருவதை அறிந்த பிண்டன் முன் தாக்குதலை நடத்தி வீரத்தை வெளிபடுத்தினான்,எதிர்க்கும் துனிவு பெற்றவன் பிண்டன் ஒருவனே என்று நன்னன்  கூறுவதும் பிண்டனின் வீரத்தை பறைசாற்றும்  இப்படி  பட்ட மன்னர்கள்  வரலாற்றை  வெளிக்கொண்டு வராது இருந்தது வருத்தம்  அளிக்கிறது

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

மருதநிலத்தின் மக்கள்