பக்த கனகதாசர் குறும்பர்

பக்த கனகதாசர்
கனகதாசர் ஜெயந்தி: 
ஐப்பசி 29 (நவ. 15 )

கண்ணபிரானை முழுமுதற் கடவுளாக கொண்டு, தமிழகத்தில் பன்னிரண்டு ஆழ்வார்கள் பாடி பத மலர் போற்றி பரவசமடைந்துள்ளனர். அதுபோல் சிவபிரானையும் போற்றி, புகழ்ந்து வழிபட வழிகாட்டிய மகான்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள். அதுபோல் குறும்பர் குலக்  கோமான் கனகதாசரும் தலைசிறந்த இறையடியவராக இன்றளவும் போற்றப்படுகிறார்.

இவர்,  400 ஆண்டுகளுக்கு முன், கர்நாடகாவின்   துங்கபத்திர நதிக்கரையும் ஆணைகெந்தி சமஸ்தானத்தைச்  சார்ந்த சிற்றரசர் பீரேகவுடா- பத்தியம்மையார் தம்பதிக்கு திருப்பதி வெங்கடேசப்பெருமாள் அருளால் காகிநிலை எனும் ஊரில் அவதரித்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் திம்மப்பன். அவர் பிறந்த பின் பொன், பொருள், தனம், தான்யம் பெருமளவில் சேர்ந்தபடியால் அவர் கனகன் (தங்கம்) என்று செல்லப்பெயரில் அழைக்கப்பட்டார்.

அவர் ஐந்து வயதில் தந்தையை இழந்தார். 16ம் வயதில் ஆணைகெந்தி அரசருடைய பிரபுவாய் பங்காபுரத்து அரசரானார். கனகன் தெய்வாம்சமாகப்  பிறந்தவராதலால் தர்மம் செய்து மக்களை தன் பிள்ளைகளைப் போல் பாவித்தார். அவருக்கு கனகப்பதுரை, கனகப்பநாயக்கர் என்ற பெயரும் வழங்கப்பட்டது.

அவர் நெடுங்காலம் அரசராக இருந்து சுகபோகங்களிலும் மூழ்கியும் இருந்தார். ஒருநாள் இரவில் வெங்கடேச பெருமாள் அடியவர் உருவில் வந்து நிலையற்ற போகங்களைத்   தவிர்த்து நிலையான பக்தி மேலிட ஆணையிட்டார். அதனால், அரசபோகத்தை தொடர்ந்து பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டு துறவு நிலையில் உடுப்பியில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்குள் வழிபட நுழைந்தார்.

அவரை கோவிலுக்குள் செல்லவிடாமல் தவிர்த்து சிலரால் வெளியே தள்ளப்பட்டார்.  அப்போது கோவில் பிரகாரத்தின் பின்புறமாக வந்து ஒரு பாடலைப் பாடினார். கோவில் சுற்றுச்சுவர் இடிந்து இறைவன் ஒரு பக்கம் திரும்பி காட்சி அளித்தார். அதனை கண்ட அனைவரும், இவரைப் போற்றிப் புகழ்ந்தனர். அதுமுதல் இவரது புகழ் நாடெங்கும் பரவியது. சுவர் இடிந்த இன்றளவும் ‘கனகன் திட்டிவாசல்’, ‘கனக கிண்டி’ என அழைக்கப்படுகிறது.

அவர் தமிழகத்தில் வாழ்ந்த பட்டிணத்தாரை போல் ஞானியாகவும், பக்திப் பாடல்கள் பலவும் பாடியுள்ளார். பள்ளிப் பாடங்களிலும் ஆன்மீகத்  துறையிலும் இப்பாடல்கள இடம் பெற்றுள்ளன. அவர் பாடல்களை அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து, ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர்.  அவரது   பாடலிலேயே, தான் ஒரு சாரணமான குரும்பா எனக் கூறும் பாடல்களும் சில உண்டு. காளிதாசர் போன்று குறும்பர் இனத்துக்கு பெருமையளிக்கும் இச்சான்றோர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். 

கர்நாடக இசைக் கீர்த்தனைகளை வழங்கிய முன்னோடிகளில் கனகதாசர் முக்கியமானவர். இறைவனுக்கு முன் ஜாதி வேற்றுமைகள் நில்லாது என்பதையும் இவரது வாழ்விலிருந்து காண்கிறோம்.

————————–
காண்க:
Kanagadasa  
யமதவம்  புரிந்த ஞானி
தாசர் வாழ்வில் 
சித்திரக்கதை (ராமகிருஷ்ண விஜயம்)
கவி பாடிய கன்னட நந்தனார் – ஜடாயு

கனகதாசர்

கனகதாசர் 15ம் நூற்றாண்டைச் (1509 – 1609) சேர்ந்த வைணவ பக்தர் மற்றும் இசைக் கலையில் சாதனை படைத்தவர். கர்நாடக இசைக் கலையில் சாதனை படைத்தவர்களுள் குறிப்பிடத் தக்கவர் . கன்னட பக்தி இலக்கியத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கியவர். உடுப்பி கிருஷ்ணர் கோயில்கிருஷ்ணர் மேற்கு நோக்கி காட்சி தர காரணம் இவரே.

கனகதாசர் 240 கர்நாடக இசைப் பாடல்கள் இயற்றியுள்ளார் இவரது பாடல்கள் பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 100 பாடல்கள் கன்னடத்திலும், 60 பாடல்கள் ஆங்கிலத்திலும் பிரபலமான புத்தகங்களில் வெளியாகியுள்ளன.

கனகதாசர்

பதினாறாம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தின்தார்வாட் மாவட்டத்தில் உள்ள பாடா என்னும் கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தை படைத் தளபதியாகப் பணியாற்றியவர். குழந்தைச் செல்வம் வேண்டி வெங்கடேசப் பெருமானுக்கு சிறந்த வழிபாடுகள் செய்தவர். அதன் பயனாகப் பிறந்த குழந்தைக்கு திம்மப்பா என்று பெயர் வைத்தார். திம்மப்பா சிறந்த தளபதி ஆனார். ஒரு சமயம் திம்மப்பா போரில் கடுமையாகத் தாக்கப்பட்டு நினைவு இழந்தபோது கிடைத்த வெங்கடேசப் பெருமாளின் தரிசனத்தால் பக்தி மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தார். தன் செல்வம், போர் வாழ்க்கை அனைத்தையும் ஒதுக்கினார். இறைப் பணியிலேயே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தனக்குக் கிடைத்த பொருளைக் கொண்டு சொந்த ஊரான பாடாவுக்கு அருகில் கேசவனுக்கு ஒரு கோயில் கட்டினார். இந்தக் காலகட்டத்தில் தான் திம்மப்பாவின் பெயர் கனகப்பாவாக மாறியது.

தாசகூடம் என்னும் அமைப்பு கன்னட பக்தி இலக்கியத்தைப் பொறுத்த வரை மிகச் சிறப்பான இடம் வகிக்கிறது. அதில் வியாசராயனின் சீடனாக கனகப்பா தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தாசகூடம் அமைப்பு அவரை கனகதாசராக்கியது. தனது மாணவர்களில் மிகச் சிறந்தவர் கனகதாசரே என வியாசராயனே குறிப்பிட்டு உள்ளார். ஒரு மனிதனின் உயர்வுக்குச் சாதியும், அவனது மத நம்பிக்கைகளும் காரணமாக முடியாது என்பது அவருடைய கொள்கையாகும். இதை அடிப்படையாகக் கொண்டுதான் அவர் பாடல்கள் அமைந்தன.

படைப்புகள்

மோகன தரங்கிணிநள சரித்ரேராமதான்ய சரித்ரே ஆகியவை அவருடைய படைப்புகளில் சிலவாகும்.

மோகனதரங்கிணிஇந்த நூல் பாணாசுரனின் மகள் உஷா, பிரத்யும்னாவின் மகன் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள காதலை வெளிப்படுத்துவது ஆகும். கேசவனின் பக்தனான பாணாசுரனிடம் சிவ பக்தனான பிரத்யுமனா அமைதி உடன்படிக்கை செய்து கொண்டு இளம் காதலர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று சொல்வதாக ஒரு காட்சி உள்ளது. இங்கு சைவம் வைணவத்துடன் சேரும் நிலையில் அமைந்த கனகதாசரின் மனப்போக்கைப் பார்க்க முடிகிறது. மோகன தரங்கிணி பலராலும் போற்றப்படுவதற்கு இது ஒரு காரணமாகும்.ராமதான்ய சரித்ரேஇது நாட்டுப்புறக் கதை அமைப்பில் ஆனது. ஏறத்தாழ ஐம்பத்தி எட்டு பாடல்களைக் கொண்டது. ராமபிரான் நீதிபதியாக அரச சபையில் இருக்கும்போது கேழ்வரகுக்கும்,அரிசிக்கும் இடையே சண்டை யார் உயர்வானவர்கள் என்று. வழக்கை நடத்தும் ராமன் இரு தானியங்களையும் தனித்தனியாக ஒரு குறிப்பிட்ட கெடு வரை அடைத்து வைக்கச் சொல்கிறான். கெடு முடிந்ததும் அவை எடுத்து வரப்படுகின்றன. பல நாட்களுக்குப் பிறகும் ராகி தன் சக்தியை இழக்காமல் அப்படியே இருக்கிறது. அரிசி தன் சக்தி முழுவதையும் இழந்திருந்தது. ராமன் கேழ்வரகின் தன்மையைப் புரிய வைத்ததாக கதை. கேழ்வரகை ஏழைகளின் வடிவாகவும், அரிசியைப் பணம் உடையவர்களின் வடிவாகவும் உள்ளுறையாகக் காட்டி உள்ளார்.[1]நளசரித்ரேநளனின் வரலாற்றைக் விரிவாகக் கூறுவதாகும்.ஹரிபக்தி சாரா என்ற பெயரில் நூற்றுக்கும் மேலான பாடல்களைப் பாடி உள்ளார். மூட நம்பிக்கைகளை வெறுத்து கண்டனமாகப் பாடி உள்ளார்.

அங்கீகாரங்கள்

இவரைப் போற்றும் விதமாக கர்நாடகாவில்நவம்பர் 20 ஆம் தேதியை கனகதாசர் ஜெயந்தி நாளாக போற்றப்படுகிறது. இந்த நாளை மாநில விடுமுறை நாளாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

திரைப்படம்

பக்த கனகதாசர் என்ற கன்னட திரைப்படம் இவரது வாழ்க்கை வரலாறு கூறும் திரைப்படமாக 1960 ஆம் ஆண்டு வெளிவந்து விருது பெற்றது[5].கனக-புரந்தரா (1988) எனும் ஆங்கில ஆவணத் திரைப்படம் இவரது வரலாற்றையும், புரந்தரதாசரது வரலாற்றையும் கூறும் திரைப்படம்[6][7].

சான்றுகள்

↑ 1.0 1.1http://www.tamilhindu.com/2010/11/kannada-nandhanar-kanakadasa/ Kanakadasa-The Golden servant of Lord Hari (2001) by Basavaraj Naikar, National Book Trust ISBN 81-237-3664-9 Kanaka Daasara Padagalu (1997) By S Rudramurthy Shastri, Bhagya Laksmi Publishers, Bangalore Songs of Three Great South Indian Saints by William J. Jackson (2002), Oxford India Paper, ISBN 0-19-566051-X [1] Kanaka-Purandara IMDB' AWARDS: The multi-faceted playwrightFrontline (magazine), Vol. 16, No. 03, January 30 - February 12, 1999.

கவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்

ராமனுடைய அரசவைக்கு ஒரு வினோதமான வழக்கு வருகிறது. அரிசி, கேழ்வரகு (ராகி) ஆகிய இரண்டு தானியங்களுக்கும் நடுவில் யார் பெரியவர் என்பது வழக்கு. இரண்டு தானியங்களும் தங்கள் பெருமைகளைக் கூறி வாதம் செய்கின்றன. இரண்டையும் ஆறு மாதம் சிறைக்கு அனுப்புகிறான் ராமன். ஆறு மாதத்திற்குப் பிறகு அரிசி உளுத்துப் போய்விடுகிறது. கேழ்வரகு உறுதியாக நிற்கிறது. கஷ்டங்களைப் பொறுக்கும் சக்தி படைத்த கேழ்வரகே உயர்ந்தது, அதற்கே என் அனுக்கிரகம் என்று ராமன் தீர்ப்பு வழங்குகிறான்.

கன்னடத்தில் கனகதாசர் எழுதியிருக்கும் ‘ராமதான்ய சரித்ரே’ என்ற குறுங்காவியத்தின் கதை இது. அரிசி உயர்குடி மக்களின், செல்வந்தர்களின் உணவு. கேழ்வரகு கீழ்சாதிக் காரர்களின், உழைக்கும் மக்களின் உணவு. இந்த இரண்டையும் குறியீடுகளாகப் பயன்படுத்தி சமூகத்தின் அடித்தட்டு மக்களே மன உறுதி வாய்ந்தவர்கள், கடவுளின் அருள் அவர்களுக்கும் உண்டு என்ற கருத்தை அவர் அறிவுறுத்துகிறார் என்பது கன்னட இலக்கியவாதிகள் கூறும் கருத்து. சமூக விமர்சனத்தை அழுத்தமாக முன்வைத்த ஒரு பக்தி இலக்கியப் பிரதி என்று இந்த நூலை அவர்கள் சிறப்பித்துக் கூறுகிறார்கள்.

கர்நாடகத்தில் அடித்தட்டு மக்களின் சமூக, ஆன்மிக எழுச்சிக்கு ஒரு குறியீடாகவே கனகதாசர் விளங்குகிறார் என்று சொல்லலாம். அவரது காலம் 15ம் நூற்றாண்டு (1506 – 1609). உன்னதத்துடனும், செல்வச் செழிப்புடனும் விளங்கிய விஜயநகரப் பேரரசு மறையத் தொடங்கியிருந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். கர்நாடகத்தின் மத்தியப் பகுதியில் உள்ள ஹவேரி மாவட்டத்தில் காகினேலே என்ற சிற்றூரில் கௌடர்களின் ஒரு பிரிவான குறும்பர் குலத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் திம்மப்ப நாயக்கர். அவர் ஒரு குறுநிலமன்னரிடம் போர்த் தளபதியாகப் பணியாற்றுகையில் ஒரு போரில் உயிர்போகும் சமயம் தெய்வாதீனமாகக் காப்பற்றப் பட்டதாகவும், அதன்பின் உலக வாழ்க்கையைத் துறந்து ஆன்மிகப் பாதையில் திரும்பியதாகவும் கூறப் படுகிறது. அவரது பல பாடல்களில் தனது சொந்த ஊரில் குடிகொண்ட பெருமாளின் பெயரான “காகினேலே ஆதிகேசவா” என்ற முத்திரையையும் பதித்துள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் உடுப்பியில் வாழ்ந்து வந்த மத்வ சம்பிரதாய மடாதிபதி வியாசராஜ தீர்த்தர். தனது ஆன்மிக குருவாக இவரைக் கனகதாசர் ஏற்றுக் கொண்டிருந்தார். ஒருமுறை சீடர்கள் வேதாந்த விசாரம் செய்து கொண்டிருந்தபோது, மோட்சத்திற்குப் போக அதிகாரி யார் என்று விவாதம் வந்தது. அப்போது‘நானு ஹோதரே ஹோதெனு’ (நான் போனால் போகலாம்) என்று சொன்னார் கனகதாசர். என்ன ஆணவம் இந்த கீழ்ச்சாதிக் காரனுக்கு என்று மற்ற சீடர்களும், பண்டிதர்களும் கூச்சலிட்டனர். குரு அவர்களை அமைதிப்படுத்தி, அதன் பொருளை விளக்குமாறு கனகதாசரைக் கேட்க, ‘நான்’ என்ற அகங்காரம் போனவன் தான் மோட்சத்திற்குப் போக அதிகாரி என்று அவர் விளக்கமளித்தார். பிறகு சீடர்களின் கர்வம் அடங்கியது. இது ஒரு சம்பவம்.

இன்னொரு சம்பவம் கனகதாசர் அக்காலத்திய சாதிய அடக்குமுறையினால் எந்த அளவு அவமதிக்கப் பட்டார் என்பதையும் பதிவு செய்கிறது. ஒருமுறை அவர் உடுப்பிக்குச் சென்று அங்குள்ள கிருஷ்ணர் கோயிலில் நுழைந்து தரிசனம் செய்ய விரும்பினார். சிறுமதி படைத்த பிராமண பூசாரிகள் தடுத்தனர். எனவே கோயிலின் பின்புற வாயிலுக்குச் சென்று அங்கிருந்தே மனமுருகிப் பாட ஆரம்பித்தார். அவரது பக்திக்கு இரங்கினார் பரந்தாமன். அவருக்கும் கிருஷ்ண விக்கிரகத்திற்கும் இடையே இருந்த சுவரில் கீறல் விழுந்து பிளந்து அதில் ஜன்னல் அளவு பெரிய இடைவெளி தோன்றியதாம். அதே நேரத்தில் கிருஷ்ண விக்கிரமும் அரைவட்டமாகத் திரும்பி அந்த துவாரத்தின் வழியே தாசருக்குத் தரிசனம் தந்ததாம். பிறகு சுவரை சீர்படுத்தி அதில் அந்த இடைவெளியை அப்படியே விட்டுவிட்டார்களாம். இன்றும் உடுப்பி கோயிலின் வாயிலில் ‘கனகன கிண்டி’ (கனகனது சாளரம்) என்று ஒரு ஜன்னல் இருக்கிறது. சம்பிரதாயத்தின்படி கிழக்கு நோக்கி வீற்றிருக்காமல், கிருஷ்ண விக்கிரம் மேற்கு நோக்கி இருப்பதற்கும் இதுவே காரணம் என்று கூறப் படுகிறது.

கனகதாசர் குறும்பர் குலத்தினராக இருந்தும் இளம்வயதிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்தும், கவி பாடும் திறன் பெற்றவராகவும் இருந்ததார். ஹரிபக்திசாரம், நரசிம்ஹஸ்தவம் ஆகிய துதிப்பாடல்களும், மேற்சொன்ன ராமதான்யசரித்ரே தவிர நளசரித்ரே, மோகனதரங்கிணி ஆகிய காவியங்களும், நூற்றுக் கணக்கான தனிப் பாடல்களும் அவர் இயற்றியவை என்று கருதப் படுகிறது. மோகனதரங்கிணி என்ற காவியம் கிருஷ்ணன் ருக்மிணி இருவருக்கும் மகனாகப் பிறந்த பிரத்யும்னன், பாணாசுரனின் மகள் உஷையைக் காதலித்து மணம் புரியும் புராணக் கதையின் காவிய வடிவம். இக்காவியத்தில் துவாரகை நகரை வர்ணிக்கும்போது, முத்தும் மணியும் தெருவில் கூறுகட்டி விற்கும் அகன்ற கடைவீதிகள், பேரம் பேசும் பல நாட்டு வணிகர்கள், மது மயக்கத்தில் திளைக்கும் கிராமத்து மள்ளர்கள் என்று தமது ராஜ்யத்தின் தலைநகரான விஜயநகரத்தையே (இன்றைய ஹம்பி) விரிவாக வர்ணித்திருக்கிறார்.

கனகதாசருக்கு கர்நாடக சங்கீதத்தின் இசையமைப்பு பற்றிய அடிப்படை ஞானம் இருந்தது. கிராமிய இசைவாத்தியமான எளிய தம்புராவை மீட்டிப் பாடும் வகையில் எளிய சொற்களிலேயே அவரது பெரும்பாலான பாடல்கள் அமைந்துள்ளன. பல பாடல்கள் தத்துவார்த்தமானவை. ஒரு பாடல் –

கன்னடம்:

நீ மாயெயொளகொ நின்னொளு மாயெயொ
நீ தேஹதொளகொ நின்னொளு தேஹவொ

பயலு ஆலயதொளகொ, ஆலயவு பயலொளகொ
பயலு ஆலயவெரடு நயனதொளகொ
நயன புத்தியொளகொ புத்தி நயனதொளககொ
நயன புத்திகளெரடு நின்னொளகொ ஹரியெ

ஸவியு ஸக்கெரெயொளகொ சக்கரெயு ஸவியொளகொ
ஸவியு ஸக்கரெயெரடு ஜுஹ்வெயொளகொ
ஜிஹ்வெ மனஸினொளகொ மனஸு ஜிஹ்வெயொளகொ
ஜிஹ்வெ மனஸுகளெரடு நின்னொளகொ ஹரியெ

குஸுமதொளு கந்தவொ கந்ததொளு குஸுமவொ
குஸும கந்தகளெரடு ஆக்ரஹணதொளகொ
அஸம்பவ காகினெலெ ஆதிகேசவராய
உசுரலென்னளவல்ல எல்ல நின்னொளகொ ஹரியெ.

தமிழில்:

நீ மாயையினுள்ளா அன்றி நின்னுள் மாயையா
நீ தேகத்தினுள்ளா அன்றி நின்னுள் தேகமா

வெளி வீட்டினுள்ளா வீடு வெளியினுள்ளா
வீடும் வெளியும் இரண்டும் விழியிலேயோ
விழி அறிவினுள்ளா அறிவு விழியினுள்ளா
விழி அறிவு இரண்டும் உன்னிலேயோ ஹரியே

இனிமை சர்க்கரையினுள்ளா சர்க்கரை இனிமையினுள்ளா
இனிமை சர்க்கரை இரண்டும் நாவிலேயோ
நா மனதினுள்ளா மனம் நாவினுள்ளா
நா மனம் இரண்டும் உன்னிலேயோ ஹரியே

மலரினுள் மணமா மணத்தினுள் மலரா
மலர் மணம் இரண்டும் நாசியிலேயோ
சொல்ல வல்லேன் அல்லேன் காகினெலெ ஆதிகேசவராயா
ஒப்பற்றவனே, எல்லாம் உன்னிலேயோ ஹரியே

மேலும், பல பாடல்களில் சமூக ஏற்றத் தாழ்வுகளைக் கடுமையாக விமர்சித்தும் பாடுகிறார். ‘குல குல குலவெந்து’ என்று தொடங்கும் ஒரு பாடல்.

குலம் குலம் குலம் என்று சண்டையிடாதீர்
உம் குலத்தின் ஆதிமூலம் என்ன என்றாவது அறிவீரோ

நாம் பிறக்காத யோனிகளும் இல்லை நடக்காத நிலங்களும் இல்லை
இப் பிறவிகளில் நாம் உண்ணாத பொருளே இல்லை
இறுதிச் சொட்டு நீருக்காகத் துடிக்கும் நேரத்தில் கீழ் மேல் என்று பார்ப்பாயா
இதனை உணர்; சர்வக்ஞனான ஹரியையே நினை.
இது ஏன் உனக்குப் புரியவில்லை மானிடா?

தண்ணீரே அனைத்துக் குலங்களுக்கும் தாயல்லவோ
தண்ணீரின் குலம் என்ன என்று தெரியுமோ?
நீர்க்குமிழி போன்று நிலையில்லாதது இத்தேகம்
நீர் புரிந்து கொள்ளும் இதனை மானிடரே

ஹரியே சர்வோத்தமன் ஹரியே சர்வேஸ்வரன்
ஹரிமயம் இதெல்லாம் என்று அறிந்து தெளிந்து
ஸ்ரீ காகினெலெ ஆதி கேசவராயனின்
சரண கமலத்தைப் புகழ்ந்து பாடுபவனே நற்குலத்தான்.

பகவான் தரிசனம் தந்து விட்டார். ஆனால் தன் வாழ்நாளின் கடைசிவரை கனகதாசர் கோயிலுக்குள் நுழையவே இல்லை. இத்தனைக்கும் நந்தனார் போன்றோ, திருப்பாணாழ்வார் போன்றோ அவர் கடைநிலைச் சாதியினர் கூட இல்லை. போர்வீரராக ‘நாயக்கர்’ என்ற பட்டத்துடன் வாழ்ந்திருக்கிறார். இருந்தாலும் அவர் உடுப்பி கிருஷ்ணர் கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. சாதியக் கட்டுப் பாடுகள் கெட்டிப் பட்டு கடுமையாகி, மிகவும் இறுகிய நிலையை அக்காலகட்டத்தில் அடைந்திருந்தன என்ற சித்திரத்தையே இது அளிக்கிறது. தன் வாழ்நாளின் இறுதிக் காலத்தைக் கனகதாசர் திருமலையில் கழித்தார் என்று சொல்லப் படுகிறது. பிறப்படிப்படையில் மனிதருக்கு மனிதர் வேறுபடுத்திப் பார்த்து, அதையே சமூக நடைமுறையாக்கி, சில மக்கள் சமூகங்களின் சமூக, வழிபாட்டு உரிமைகளையே முழுவதுமாக முடக்கி வைத்திருந்த ஆதிக்கவாதிகளுக்கு, தன் ஆன்மிக அற உணர்வின் அடியாழத்திலிருந்து புறப்பட்ட எளிய பாடல்கள் மூலம் வாழ்நாளின் இறுதிவரை அவர் உபதேசம் செய்து வந்தார்.

உடுப்பியில் அவர் நின்று பாடிய வீதியில் கோயிலுக்கு வெளியே அவருக்கு ஒரு சிறு நினைவு மண்டபம் உள்ளது. அதில் கனகதாசரின் திருவுருவச் சிலைக்கு மாலை போட்டு வைத்திருக்கிறார்கள். கோயிலுக்குள் அவரது சிலையோ திருவுருவப் படமோ எதுவும் இல்லை. அவருக்கு பகவான் தரிசனம் தந்த நுழைவாயிலில் எழுப்பப் பட்ட கோபுரம் கனக கோபுரம் என்று சம்பிரதாயமாக அழைக்கப் பட்டதாம். ஆனால் சில வருடங்கள் முன் மத்வ மடாதிபதி சுவாமிகள் அதன் பெயர் கனக கோபுரம் அல்ல, நவக்ரக கோபுரம் என்று சொல்லி நிறைய சர்ச்சையையும், கனகதாசரது அடியார்களின் கடுப்பையும் சம்பாதித்துக் கொண்டார். கனகதாசரைப் போன்றே புரந்தர தாசர், விஜயவிட்டலதாசர், ரங்கவிட்டலதாசர் என்று பல ஹரிதாசர்கள் கன்னடத்தில் எளிமையான மொழியில் பக்திரசம் ததும்பும் பாடல்களைப் பாடியுள்ளார்கள். இவர்களது பாடல்களை ஒட்டுமொத்தமாக ‘ஹரிதாஸ சாகித்யம்’ என்று அழைக்கிறார்கள். ஹரிதாசர்களின் பாடல்கள் எல்லா மக்களாலும் பக்தியுடன் பாடப்படுகின்றன. ஆனால் மத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்த குருமார்களைப் போல கோயில்களும் பிருந்தாவனங்களிலும் வைத்து இவர்களைப் பூஜிப்பதில்லை என்று அறிய வருகிறேன். தேசந்தோறும் பாஷை வேறு, சம்பிரதாயம் வேறு.

அந்த விதத்தில் நாயன்மார்களும், ஆழ்வார்களும், அவர்களின் அடியார்களும் பாக்கியசாலிகள். ’திருநாளைப் போவாரையும், திருப்பாணாழ்வாரையும் பார்ப்பார் கோயிலிலே வைத்துப் பூசை செய்யவில்லையா?’ என்று பாரதியார் ஒரு கட்டுரையில் கேட்டது ஞாபகம் வருகிறது. ஆகம முறைப்படி கட்டப் பட்ட தமிழகக் கோயில்களில் அடியார்களது திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்து, அவர்களுக்கு விழாக்களும் கொண்டாடும் நல்மரபு சைவ, வைணவ சமயாசாரியார்களாலும், பண்டைத் தமிழ் அரசுகளாலும் ஏற்படுத்தி வைக்கப் பட்டிருக்கிறது.

ஆனால் கர்நாடக அரசுக்குத் தான் இந்தக் கட்டுரைக்காக நான் நன்றி தெரிவிக்க வேண்டும். கனகதாசரைப் பற்றி நான் அறிந்து கொள்ள வாய்ப்பளித்தது அவர்கள் தான். போன வார இறுதியில் பள்ளி நாளேட்டைப் பார்த்து ஆகா என்று சந்தோஷத்தில் குதித்தாள் அருமை மகள். என்ன சமாசாரம் என்று கேட்டால், 24-நவம்பர் புதன்கிழமை பள்ளி விடுமுறை! பண்டிகை ஒன்றும் இல்லையே எதற்காக விடுமுறை என்று பார்த்தால் “கனகதாஸ ஜயந்தி” என்று போட்டிருந்தது.

ஆம். கனகதாசரின் பிறந்தநாள் கர்நாடகத்தில் மாநில அரசு விடுமுறை. அதே பட்டியலில் இன்னொரு நாளும் வருகிறது – பஸவ ஜயந்தி. கர்நாடக வீரசைவ சமயப் பிரிவின் குருநாதரான பசவண்ணர் எனப்படும் பசவேஸ்வரரின் பிறந்த நாள்.

அடித்தட்டு மக்களின் சமய, ஆன்மீகக் குரலாக எழுந்த இரு பெரும் சைவ, வைணவப் பெரியார்கள். அவர்கள் இருவரது பிறந்த நாளையும் அரசு விடுமுறையாக அறிவித்ததோடு, அவர்களின் புனித நினைவைப் போற்றி, அவர்களது மனிதநேய ஒருமைப்பாட்டுச் சிந்தனைகளைப் பரப்பும் வகையில் பல நிகழ்ச்சிகளையும் நடத்த மாநில அரசு ஆதரவு தருகிறது என்று கேள்விப் படுகிறேன்.

உத்தமமான காரியம். கர்நாடக அரசின் இச்செயல்பாட்டை மனம்திறந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை.



                                                                                  

            

தென்னகத்து மதுரா எனப்படும் உடுப்பி என்றதுமே நம் நினைவிற்கு வருபவர் கிருஷ்ணபக்தர் கனகதாசர்.

கனகதாசரின் காலம் 15ம் நூற்றாண்டு (1506 - 1609). என்கிறார்கள். , செல்வச் செழிப்புடன் விளங்கிய விஜயநகரப் பேரரசு மறையத் தொடங்கியிருந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். 

கனகதாசர் குறும்பர் குலத்தினராக இருந்தும் இளம்வயதிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்தும், கவி பாடும் திறன் பெற்றவராகவும் இருந்தார். ஹரிபக்திசாரம், நரசிம்ஹஸ்தவம் ஆகிய துதிப்பாடல்களும், ராமதான்யசரித்ரே , நளசரித்ரே, மோகனதரங்கிணி ஆகிய காவியங்களும், நூற்றுக் கணக்கான தனிப் பாடல்களும் அவர் இயற்றியவையாகும்.

. கனகதாசர் உடுப்பிக்குச் சென்று அங்குள்ள கிருஷ்ணர் கோயிலில் நுழைந்து தரிசனம் செய்ய விரும்பினார். அதனை சில பிராமண பூசாரிகள் தடுத்தனர். கோயிலின் பின்புற வாயிலுக்குச் சென்று அங்கிருந்தே மனமுருகிப் பாட ஆரம்பித்தார். அவரது பக்திக்கு இரங்கினார் பரந்தாமன். அவருக்கும் கிருஷ்ண விக்கிரகத்திற்கும் இடையே இருந்த சுவரில் பிளவு உண்டானது. அதில் ஜன்னல் அளவு பெரிய இடைவெளி தோன்றியது. அதே நேரத்தில் கிருஷ்ண விக்கிரமும் அரைவட்டமாகத் திரும்பி அந்த துவாரத்தின் வழியே தாசருக்குத் தரிசனம் தந்தது!. .

பகவான் தரிசனம் தந்து விட்டார். ஆனால் தன் வாழ்நாளின் கடைசிவரை கனகதாசர் கோயிலுக்குள் நுழையவே இல்லை. கன்னட நந்தனார் என்று இவரைக்கூறினாலும் நந்தனார் போன்றோ, திருப்பாணாழ்வார் போன்றோ அவர் கடைநிலைச் சாதியினர் கூட இல்லை. போர்வீரராக ‘நாயக்கர்’ என்ற பட்டத்துடன் வாழ்ந்திருக்கிறார். இருந்தாலும் அவர் உடுப்பி கிருஷ்ணர் கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. சாதியக் கட்டுப் பாடுகள் அந்த நாளில் மிகவும் ஆளுமையாக இருந்திருக்கின்றன என்று இதனால் தெரியவருகிறது.

இன்றும் உடுப்பி கோயிலின் வாயிலில் ‘கனகன கிண்டி’ (கனகனது சாளரம்) என்று ஒரு ஜன்னல் இருக்கிறது. சம்பிரதாயத்தின்படி கிழக்கு நோக்கி வீற்றிருக்காமல், கிருஷ்ண விக்கிரம் மேற்கு நோக்கி இருக்கிறது நாமும் கனகதாசர் வழிபட்ட அந்த ஜன்னல்துவாரத்தின் வழியேதான் கிருஷ்ணரைக்காணவேண்டும்.ஆண்டிற்கு ஒருமுறை விஜயதசமி உற்சவத்தின்போது கிழக்குநுழைவாயில் திறக்கப்படும்.அப்படிக் கதவுதிறந்ததும் முதலில் புதிதாக விளைந்த நெல் போன்ற தானியங்கள் இந்த வாயில்வழியாக சந்நிதிக்கு உள்ளே செல்லப்படுகிறது
.

கனகதாசருக்கு கர்நாடக சங்கீதத்தின் இசையமைப்பு பற்றிய அடிப்படை ஞானம் இருந்தது. கிராமிய இசைவாத்தியமான எளிய தம்புராவை மீட்டிப் பாடும் வகையில் எளிய சொற்களிலேயே அவரது பெரும்பாலான பாடல்கள் அமைந்துள்ளன. பல பாடல்கள் தத்துவார்த்தமானவவை.
.
உடுப்பியில் அவர் நின்று பாடிய வீதியில் கோயிலுக்கு வெளியே அவருக்கு ஒரு சிறு நினைவு மண்டபம் உள்ளது. அதில் கனகதாசரின் திருவுருவச் சிலைக்கு மாலை போட்டு வைத்திருக்கிறார்கள். கோயிலுக்குள் அவரது சிலையோ திருவுருவப் படமோ எதுவும் இல்லை. ,ஆண்டுதோறும் நவம்பர் 24ம்தேதியன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடுகிறார்கள் “கனகதாஸ ஜயந்தி” என்று கொண்டாடுகிறார்கள்.. கனகதாசரின் பிறந்தநாள் மட்டுமல்ல பசவண்ணா எனும் கன்னடப்புலவரின் பிறந்தநாளுக்கும் கர்நாடகத்தில் மாநில அரசு விடுமுறை. அளிக்கிறது. கர்நாடக வீரசைவ சமயப் பிரிவின் குருநாதர் தான். பசவண்ணர்
அடித்தட்டு மக்களின் சமய, ஆன்மீகக் குரலாக எழுந்த இரு பெரும் சைவ, வைணவப் பெரியார்களின் பிறந்த நாட்களை அரசு விடுமுறையாக அறிவித்ததோடு, அவர்களின் புனித நினைவைப் போற்றி, அவர்களது மனிதநேய ஒருமைப்பாட்டுச் சிந்தனைகளைப் பரப்பும் வகையில் பல நிகழ்ச்சிகளையும் நடத்த மாநில அரசு ஆதரவு தருகிறது. 

ஆலயவளாகத்தில் ஐம்பத்திற்கும் மேல் கறவைமாடுகள் கட்டப்பட்டுள்ளன.

உடுப்பியில் எட்டுமடங்கள் உள்ளன. பல உன்னத ஆசாரியார்களின் சிஷ்யபரம்பரையினர் அவைகளை இன்னமும் சிரத்தையுடன் பாதுகாத்துவருகின்றனர். இந்த எட்டுமடங்களைத்தவிரவும் மேலும் பலமடங்கள் தினந்தோறும் அன்னதானம் செய்துவருகின்றன. உடுப்பி சென்றால் நாம் மடங்களில் தங்கிக்கொள்ளலாம். பரந்துவிரிந்த விசாலமான அறைகளும் நடுமுற்றமும் அதில் சிறுகோவில்மண்டபமும் அத்துடன் பழையகாலபாணியில் கட்டப்பட்ட மரத்தூண்களும் நிலைகளுமாய் ஒவ்வொரு மடமும் நம்மை பரவசப்படுத்தும். அரண்மனைவளாகம்போல காணப்படும். ரதத்தெரு(தேரடிவீதி) சென்று காலாறநடக்க்லாம்..ஊரெங்கும் கிருஷ்ணவாசனையை நுகரலாம்!

கிருஷ்ணனின் திருவிடத்திற்கு அருகில் ஏறக்குறைய ஐந்துகிலோமீட்டர் அருகே அரபிக்கடலின் அழகிய மால்பே கடற்கரை அமைந்துள்ளது. கடல்நடுவே செயிண்ட்மேரீஸ் தீவு இருக்கிறது.கையில் பணம் அதிகமிருந்தால் அங்கே போய் ஓர் இரவு இளைப்பாறலாம்!

உடுப்பி ஸ்பெஷல் பல உண்டு அதில் பத்ர அடை என்பது அங்கேதான் அதிகம் கிடைக்கும்!. சேப்ப இலையைசுருட்டி தயாரிக்கும் சிற்றுண்டி இது,சுவையறிந்தால் விடமுடியாது!

ஆனாலும் உடுப்பிகோயிலின் சின்னக்கண்ணனின் மந்திரதொனி அழைப்பும், அந்தக்கள்ளச்சிரிப்பும் ஊரைவிட்டு நகர்ந்தபின்னும் நம் உள்ளத்திலேயே நின்றுகொண்டிருக்கும்!

த்ருடபக்தி நின்னல்லி பேடி
நான் அடிகெரகுவேனய்ய அனுதின ஹாடி
கடெகண்ணிலே நன்ன நோடி
பிடுவே கொடு நின்ன த்யானவ மனசுசி மாடி (தாஸன)

எப்போதும் மாறாதிருக்கும் திடமான பக்தியை உன்னிடத்தில் வேண்டி,
நான் உன் பாதத்தில் தினமும் விழுந்து உன் நாமத்தை பாடிக்கொடிருப்பேன்.
உன் கடைக்கண்ணால் என்னை பார்த்து
நான் என்றென்றும் உன்னை தூய மனதோடு நினைத்துக்கொண்டிருக்குமாறு அருள்புரிவாய்




Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!