அகநாநூறு- 141ல் ஆரியக்குறும்பரைப் பயிற்றுவித்துக் குடியமர்த்தியதைப் புலவர் நக்கீரர்:

அகநாநூறு- 141ல் ஆரியக்குறும்பரைப் பயிற்றுவித்துக் குடியமர்த்தியதைப் புலவர் நக்கீரர்:
====================
"நெடுங்கால் மா அத்துக் குறும்பரைப் பயிற்றும் செல்குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால் வெள்போர்ச் சொழன் இடையாற்று அன்ன நல் இசை வெறுக்கை தருமார்.......... தேம்கமழ் நெடுவரை பிறங்கிய வேங்கட வைப்பிற் கரன் இறந்தோரே" எனக்குறிப்பிடுகிறார். பெரியபுராணத்தில் சேத்கிழார் புராணவடிவில் " தீது நீங்கிடத் தீக்கலியாம் அவுணர்க்கு..........பொற்பினால் விளங்கும்" எனவும்; "குன்றுபோலு மாமதில்புடைபோக்கி குடியிருத்தின கொள்கையின்" எனவும் சிலதகவல்களை மறைத்துக் குறிப்பிடுகிறார். அனைவரும் ஒன்றுகூடிப் பல்லவராக்கப்பட்டுத் தொண்டைநாட்டைக் கரிகால்சோழன் ஒப்படைத்த போது, பிற தென்னக ஆட்சியாளர் எதிர்ப்புத் தெரிவித்திருப்பர். இதுகுறித்த பாடல்களும் காரணங்களும் மறைந்துவிட்டபோதிலும் சேத்கிழாரின் பெரியபுராணத்தில் மட்டுமே சில தகவல்கள் உள்ளன. பல்லவரின் தொடக்க கால வரலாறும் கிடைக்கவில்லை. ஆரியப் பிரகத்தனையும் சிறைப்பிடித்தபோது; தமிழ் அந்தணர், ஐயர், முனிவர் போன்றோர்; அந்நியரின் தொடர்பை விரும்பாததால்; 'ஆரியர்' எனும் தகுதி நீக்கி, "விராத்திய ஸ்தோமா" சடங்கு செய்து; அந்நியரை முனிவர் சமூகத்தில் சேர்த்துப் பிறரையும் பல்லவராக்கித் தண்தமிழ் பயிற்றுவித்தனர். இதனைத் திரு ஹரஹரப்பிரசாத் சாஸ்த்திரி அவர்களின் "பௌத்த ஆய்வுகள்" என்ற நூல்: "விராத்தியரைத் தூய்மைப் படுத்தவேண்டி நிகழ்த்தப்பட்டதும், 'பஞ்சவிம்ச' பிராமணத்தில் கூறப்பட்டிருப்பதும் ஆன இச்சடங்கு வேதகாலச் சடங்குகளுக்கு மாறுபட்டதாக இருந்தது. பிற சடங்குகளில் வேள்விக் கூடத்தில் ஒரு வேள்வியாளரும் அவரது துணைவியும் இருக்க, இந்தச்சடங்கில் ஆயிரக்கணக்கில் வேள்வியாளர்கள் இருந்துள்ளனர், இச்சடங்கின் முதல்வனாகக் 'குலபதி' இருக்க மற்ற அனைவரும் குலபதியைத் தொடர்ந்து சென்றனர். ஒரே சடங்கில் ஆயிரக்கணக்கில் விராத்தியரை (தமிழ்)முனிவர் சமூகத்தில் சேர்த்துக்கொள்வதற்கான உபாயமென்று நான் கருதுகிறேன். இதுபோன்ற சடங்குகள் அடிக்கடி நிகழ்ந்தன, கூட்டம் கூட்டமாக ஆரியர் நிலைத்துஓரிடத்தில் வாழும் நிலைமைக்குக் கொண்டுவரப்பட்டனர். இவர்கள் தங்கள் விராத்திய வாழ்க்கையில் வைத்திருந்த உடைமைகளை உடன் கொண்டுவர அனுமதிக்கப்பட வில்லை, அவற்றை இன்னும் விராத்தியராகவே வாழ்பவருக்கு அல்லது மகததேச பிராமணருக்கு விட்டுவிட்டு வர வேண்டும். வேறொரு இடத்தில் நான் குறிப்பிட்டுள்ளபடி மகததேச பிராமணர் என்போர் [தமிழ்] முனிவர்களால் தாழ்நிலையினராக கருதப்பட்டவர்கள். அதுமட்டுமின்றி அவர்கள் ஒரு சிறந்த முனிவரான உயரிய திறனைப்பெற்ற 'கௌசிதாகி' என்ற புனிதமடைந்த முனிவரையும் பெற்றனர்"; என விரிவாகக்குறிப்பிடுகிறார். எனவே கபிலர் ஆரியர்க்கும் பிற மகதத்தைக் கைப்பற்றிப் பின்னர் புஷ்யமித்திரனால் துரத்தப்பட்டோருக்கும் தண்தமிழ்க்கல்வி பயிற்றினார் என்பது உறுதிப்படுகிறது. மேலும் கபிலர் கௌதாகி முனிவர் எனக் குறிக்கப்படுவதால் விசுவாமித்திரகுல அந்தணராகிறார். சோழகுடிப்பெண்ணைக் கெடுத்தவனுக்கும் துணைநின்ற ஆரியவரசனுக்கும் பிறருக்கும் தண்தமிழறிவித்த கபிலர்: "அன்னாய் வாழிவேண்டு அன்னை ஒள்நுதல் ஒலிமென் கூந்தல் எந்தோழி மேனி விறலிழை நெகிழ்ந்த வீவருங் கடுநோய் அகலுள் ஆங்கண் அறியுனர் வினாயும் பரவியும் தொழுதும் விரவுமலர் தூயும் வேறுபல் உருவின் கடவுள் பேணி நறையு விரையும் ஓச்சியும் அலவுற்று எய்யா மையலை நீயும் வருந்துதி நல்கவின் தொலையவும் நருந்தோள் நெகிழவும் புள்பிறர் அறியவும் புலம்புவந் தலைப்பவும் உள்கரந்து உறையும் உய்யா அரும்படர் செப்பல் வன்மையின் செறிந்துயான் கடவலின் .. .மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல் ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்; மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி நாமறி வுறாலின் பழியும் உண்டோ? ஆற்றின் வாராது ஆயினும் ஆற்ற ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கென ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும் .. ." என இப்பாடல் 261 அடிகளுக்கு நீண்டு செல்கிறது. அடுத்து முல்லைப்பட்டு; எல்லாநாடுகளும் கைப்பற்றப்பட்டுப் புஷ்யமித்திரனும் கொண்டுவரப்பட்டதாகத் தெரியும் நிலையில் சிறைப்படுத்தப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுக் கல்விபயிற்றியபோது பற்பல மொழிபேசும் அவர்கள் தண்தமிழைப் பயிலாமல் வடமொழி பயின்றனர் என்பதைக் காட்டுகிறது: "நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போல பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு கோடுகொண் டெழுந்த கொடுஞ்செலவு எழிலி பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை அருங்கடி மூதூர் மருங்கில் போகி. .." எனவும் "தேம்படு கவுள சிறுகண் யானை ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்து யாத்த வயல்விளை இன்குளகு உண்ணாது நுதல்துடைத்து அயில்நுனவலனேர்பு கோடுகொண் டெழுந்த கொடுஞ்செலவு எழிலி பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை அருங்கடி மூதூர் மருங்கில் போகி. .." எனவும் "தேம்படு கவுள சிறுகண் யானை ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்து யாத்த வயல்விளை இன்குளகு உண்ணாது நுதல்துடைத்து அயில்நுனை மருப்பின்தம் கையிடைக் கொண்டென கவைமுற் கருவியின் வடமொழி பயிற்றி கல்லா இளஞர் கவளம் கைப்ப கல்தோய்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப .. ." எனக் குறிப்பிடுகிறது. இதன் பெருமளவினான தகவல்கள் ஆரேபியர் குறித்ததாக உள்ளது. எனவே அரேபிய இசுலாமியரின் தொழுகைக் குறிப்புக்களும் நடை உடை உடல்வலிமை பெண்டிரின் தண்மை வசிப்பிடம் மற்றும் பாதுகாப்புக் குறித்த தகவல்களும் விரிவாக இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தேவர்: இந்தியத் தொல்குடியல்லாத ஆரியர்கள், கிரேக்கர் முதலான அந்நியர், அந்நியருக்குப் பிறந்தோர், வழிவந்தோர். இவர்களையே வள்ளுவர்; 1073 மற்றும் 735ல் " தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவனசெய்தொழுக லான்" எனவும்; ஆரியக்குறும்பரை; "பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு." எனவும் குறிப்பிடுகிறார். எனவே தேவர் வேறு ஆரியக் குறும்பர் வேறு எனலாம். பல்லவர் மற்றும் சோழரின் சாசனங்களுள் உதயேந்திரம் சாசனம் இன்றைய உத்தரமேரூர்ப் பகுதியைக் குறிப்பதாகும். பிற்காலச்சோழர் சாசனங்களில் மிகவும் பழமையானது. இதனை வெளியிட்டவன் முதலாம் பராந்தகன் எனப்பட்ட மதுரை கொண்ட கோப்பரகேசரிபன்மன். இவனே வேலஞ்சேரிச் செப்பேட்டுச் சாசனமும் செய்தவன். பள்ளன் கோயில் சாசனதில் தானமாக வழங்கப்பட்ட வெண்குன்றக் கோட்டத்துப் பெருநகரநாட்டு அமண்சேர்க்கை எனும் ஊர், உத்தரமேருர் வட்டத்தில் இப்போதும் பெருநகர் என உள்ளது. அதில் குறிப்பிடப்படும் அமண்சேர்க்கை என்பதே அன்றைய அமணர் ஒன்றுசேர்ந்தபகுதி. உத்தரமேரூர் மிகவும் புதிரான பல வரலாற்று உண்மைகளைக் கொண்டது. இங்கு 35 கோயில்களுக்கு மேல் உள்ளன, பலநூற்றுக் கணக்கான கல்வெட்டுக்களும் உள்ளன. திருத்தனி வேலஞ்சேரிச் செப்பேடு பல வரலாற்றுத் தகவல்களைக் கொண்டது. கரிகால்சோழன் இமயமலையில் புலிக்கொடி நாட்டியதையும், காவேரி நதிக்குக் கரை எடுத்ததையும், காஞ்சியில் அரண்மணை உண்டாக்கி விரிவடையச் செய்ததையும் குறிப்பிடுவதோடு அவனது மற்றொரு பெயரான சோழவேந்தன் கோச்செங்கணண்ான் என்றபெயரும் உள்ளது. உத்தரமேரூரின் அமண்சேர்க்கையைத் தானம் கொடுத்த பராந்தகசோழன்,வீர சோழன் எனவும் பெயர்பெற்றுள்ளான். இவன் பல பட்டப்பெயர்களைக் கொண்டவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒற்றியூரன் என ஒருவனும் இடம்பெற்றுள்ளான். இவனே முன்னர் குறிப்பிட்ட சோழநாட்டுப் பெண், கரிகால்சோழனின் தங்கையைக் கெடுத்துக் கருவுறச் செய்தவன். காஞ்சிியின் தொண்டைநாடும், உத்தரமேரூரும் கரிகால்சோழனின் கட்டுப்பாட்டில் 24 கோட்டங்களாக இருந்தவை. ஒற்றியூரனை: "மருற்கொடுந் தொழில் மன்னவன் இறக்கிய வரியை நெருக்கி முன்திரு வொற்றியூர் நீங்கவென் றெழுதும் ஒருத்தர்" என; திருக்குறிப்புத்தொண்டர் புராணத்திலும், சுந்தரர் தேவாரத்திலும்; ஒற்றியூரன் எனச் செப்பேட்டிலும் இடம்பெற்று: "மண்ணுலகம் காவல்பூண்ட உரிமையாற் பல்லவர்க்குத் திரை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும் பெருமையார் புலியூர்ச் சிற்றம்பலத் தெம் பெருமான்" எனவும்; சேத்கிழார் குறிப்பிடுகிறார். இளஞ்செட்சென்னியின் ஆட்சிக்கீழ், ஒற்றியூர், புலியூர்[சிதம்பரம்] இருந்தன. வரி விதித்ததில் பூசல் இருந்துள்ளது என்பதையும் புலியூர்ச் சிற்றம்பலத் தெம்பெருமான்- ஒற்றியூரன், கரிகால்சோழனால் குடியமர்த்தப்பட்ட பல்லவர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவன் என்பதையும் தொண்டை நாட்டைக் கைப்பற்றிக்கொண்டதையும் காண்கிறோம். புறத்திரட்டில்: "மண்ணுலார் தம்மைப்போல்வார் மாட்டாதே யன்றுவாய்மை நண்ணினார் திரத்துங்குற்றங் குற்றமே, நல்லவாகா; விண்ணுளார் புகழ்தற்கொத்த விழுமியோ னொற்றிபோழ்ந்த கண்ணுளான் கண்டந்தன்மேல் கறையையார் கறையன்றென்பார்." என ஒற்றி- ஒற்றியூரன், கண்டத்தில்- கழுத்தில் கறையுடையான் எனவும், இவனே திருத்தனி வேலஞ்சேரிச் செப்பேட்டில்"ஒற்றியூரன்" எனப்பட்டதையும் காண்கிறோம். "கறையார் மணிமிடற்றான் கபாளி கட்டங்கன்" எனத் தேவார நால்வரும் குறிப்பிடுகின்றனர். நச்சினார்க்கினியர் குறிப்பிட்ட தகவல்களில் இடம்பெற்றிருப்போர் அனைவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதற்கான சில விளக்கங்களை அவர்கொடுக்கும் தகவல்களின் துணையுடன் காண்போம். சேர இருத்தல்: மேற்கண்டோரையும் தென்னகத்தினருடன் சேர்த்து அமைதியுடன் வாழ வழிவகைகள் செய்தல். மேரு: அன்றைய சோழநாட்டில் இருந்த இன்றைய உத்தமேரூர். இந்தச்சேர்க்கையைத் தெற்கே உள்ள சேரநாட்டினர் எதிர்த்தனர். மேலே குறிப்பிட்ட இளைஞன் ஒற்றியூரனுக்கும் சிறுமிக்கும் திருமணம் செய்யும் முடிவால் சோழருடன் மைத்துன உறவு.....தேவைபடுவோர்க்கு முழுபமுழுபதிவு இடுகஇடுகிறேன்

Comments

  1. ஐயா...முழு பதிவையும் என் மின்னஞ்சல் முகவரியான drkasi@gmail.com அல்லது 9443343642 என்னும் whatsapp முகவரிக்கோ அனுப்புங்கள்..ஒற்றியூரன் யை பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆசை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!