குறும்பர் ஆய்வு நூல்கள்

குறும்பரின் விடுகதைகள்

நூலாசிரியர்: முனைவர் வே. சிதம்பரநாதப் பிள்ளை
வெளியீட்டு எண்: 294, 2005, ISBN:81-7090-355-6
டெம்மி1/8, பக்கம் 128, உரூ. 65.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

பொதுப்பார்வையில் குறும்பர் விடுகதைகள், குறும்பர் விடுகதைகளின் பாகுபாடுகள், குறும்பர் விடுகதைகளின் அமைப்பாய்வு, குறும்பர் விடுகதைகளின் யாப்பு நிலையும் அணி நிலையும், குறும்பரின் சமுதாயப் பழக்க வழக்கங்கள் ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் விரிவான ஆய்வினை நிறைவு செய்து அளித்துள்ளார்.

பின்னிணைப்பில், நீலகிரி மாவட்டத்தில் குறும்பர்கள் வாழுமிடங்கள், ஆய்வு முன்னோடிகள் – குறிப்புகள், குறும்பர் விடுகதைகள், விடுகதைகள் குறித்த அறிஞர்களின் பாகுபாடுகள், இயற்கையாகவே அமைந்த விடுகதைகள், உடல் உறுப்புகள் குறித்த விடுகதைகள், வீட்டுப் பொருட்கள் குறித்த விடுகதைகள், உணவுப்பொருட்கள் குறித்த விடுகதைகள் மற்றும் தகவலாளிகள் குறித்த குறிப்புகள் போன்றவை எழுதிச் சேர்க்கபெற்றுள்ளன. இவை மிகவும் பயனுடையன.

குறும்பர்களின் உறவுமுறை

நூலாசிரியர்: முனைவர். தா. இராபர்ட் சத்திய சோசப்
வெளியீட்டு எண்: 221, 2001, ISBN:81-7090-281-9
டெம்மி1/8, பக்கம் 160, உரூ. 90.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இந்நூலில், குறும்பர்களிடையே நிலவும் உறவுமுறை அமைப்பு மற்றும் உறவுமுறைச் சொற்கள் மானிடவியல் மற்றும் மொழியியல் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளன.

குறும்பர்கள் ஓர் அறிமுகம், முள்ளுக்குறும்பர், தேனுக்குறும்பர், பெட்டக்குறும்பர் எனத் தனித்தனி தலைப்புகளில் இவ்வாய்வு விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

மானிடவியல் ஆய்வுகளுக்குத் துணையாகும் அரிய நூல்.

மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்


பழங்குடி மக்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? சமுதாய மாற்றத்தில் அவர்கள் மட்டும் தனித்து விடப்பட்டது எப்படி? அவர்களை இணைத்துக் கொள்ளாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகுமா? குறும்பர்கள் கோட்டை கட்டி ஆண்ட அரச குடியினர். அவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து இப்போதும் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பண்பாட்டுக் கூறுகள் உள்ளன.


காலின் மெக்கன்சியின் சுவடிகள் கூறும் தமிழகப் பழங்குடி மக்களின் வாழ்க்கையும் வரலாறும் இந்நூலில் வெளிப்பட்டுள்ளன

Authorம. இராசேந்திரன்
Publisherஅடையாளம் பதிப்பகம்
No. of pages: 232


தமிழ் நாட்டின் மொழிச்சூழல்

நூலாசிரியர்: முனைவர். எஸ். பூபதி
வெளியீட்டு எண்: 205, 1998, ISBN:81-7090-265-7
டெம்மி1/8, பக்கம் 298, உரூ. 120.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ்நாட்டில் வழங்கும் மொழிகள் – சமுதாய மொழியியல் சூழலில் திராவிட மொழிகள் பற்றிய சிறப்பாய்வாக இந்நூல் அமைந்துள்ளது.

தமிழ் நாட்டின் மொழிச்சூழல், திராவிட மொழிகள், தமிழின் கிளை மொழிகள், தெலுங்கின் கிளைமொழிகள், கன்னடத்தின் கிளைமொழிகள், கசபா மொழி, காடர்மொழி, முள்ளுக்குறும்பர் மொழி, கோத்தர்மொழி, பணியர் மொழி, தோடாமொழி, இருளர்மொழி, ஆகிய தலைப்புகளில் ஆசிரியர் பல செய்திகளை விளக்கியுள்ளார்.

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!