குறும்பர் உருவாக்கிய மாதேஸ்வரன் கோயில்

குறும்பர் உருவாக்கிய மாதேஸ்வரன் கோயில்

மாதேசுவரன் கோயில் என்கிற தலம் மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ளது. இம்மலை தெற்கு கர்நாடகாவிலுள்ள சாம்ராஜ்நாகர் மாவட்டத்தில் உள்ளது. மலை மாதேஸ்வரன் கோயிலுக்கு மைசூரிலிருந்து 150கீ.மீ மற்றும் பெங்களுரிலிருந்து 210கி.மீ தூரம் இருக்கிறது. ஸ்ரீ மலை மாதேஸ்வரன் கோயில் மிகவும் பிரபலமான பாரம்பரியமிக்க திருத்தலம். கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து நிறைய திருப்பயணிகள் இத்திருத்தலத்திற்கு வருகிறார்கள். இந்த திருத்தலத்தின் பரப்பளவு 155.57 ஏக்கர் ஆகும். மாதேஸ்வரன் மலையில் தலபேட்டா, கலவவூர், இந்திகநாதா, போன்ற மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கே வரும் மக்கள் கோயிலுக்கு வருவதோடு இங்கேயுள்ள இயற்கையை ரசிக்கவும் வருகிறார்கள். இந்த மலையின் உயரம் 3000 அடி ஆகும். மாதேசுவரன் கோவிலைக் கட்டியவர் குறும்பர் இனத்தை சேர்ந்தவர்கள் ஜீன்சே கெளடா, மற்றும் குருபா கெளடா என்ற ஜமின்தார்கள் ஆவர். ஸ்ரீ மாதேஸ்வர கடவுளை, சிவனின் ஒரு அவதாரம் என மக்கள் கருதுகிறார்கள். புனித மாதேஸ்வரா அவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறனர். 600 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீ மாதேஸ்வரன் இத்திருத்தலத்திற்கு வந்து அவர் தன் பாவத்திற்குப் பரிகாரம் பெற்றார். இப்பொழுதும் அவர் பரிகாரம் தருகிறார் என மக்கள் நம்புகிறார்கள்.மலை மாதேஸ்வரன் சிங்கத்தின் மேலிருந்து பயணம் செய்தார். அந்த வாகனத்தைச் சில பேர் குழி வாகனா எனவும் கூறுவார்கள். மலை மாதேஸ்வரன் பல அற்புதங்கள் செய்து மக்களைக் காப்பாற்றியதால் `இங்கே உள்ள மக்கள் இன்னும் மலை மதேஸ்வரன் அந்த மலையின் பகுதியிலே வசிக்கிறார் என நம்புகிறார்கள். கிராமத்து மக்கள் மலை மாதேஸ்வரனின் அற்புதங்களைப் பாட்டாக பாடுகின்றனர். அதை ஜனபத காவியம் அல்லது நாட்டுப்புறக்காப்பியம் எனக் கூறுவார்கள்.

Comments

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!