தொட்டமாள் சிக்கமாள் நடுக்கல் வழிபாடு இதே வழிபாடு கோவிலாக திருச்சி மாவட்டம் எதுமலை கிராமத்தில் உள்ளது.

தொட்டமாள் சிக்கமாள் நடுக்கல் வழிபாடு இதே வழிபாடு கோவிலாக திருச்சி  மாவட்டம்  எதுமலை கிராமத்தில் உள்ளது.
====================

தேன்கனிகோட்டைக்கு அருகில், குறும்பர் இனமக்கள் வழிபாடு செய்யும், 47 நடுகற்கள் அடங்கிய தொகுப்பினை, அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின், அறம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த அறம் கிருஷ்ணன் தலைமையில், மஞ்சுநாத், பிரியன், சீனிவாசன், சிவா ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட்ட களஆய்வில், ‘பிக்கனள்ளி’ என்ற கிராமத்தில், குறும்பர் இனமக்கள் வழிபாடு செய்யும், 47 நடுகற்கள், ஒரே இடத்தில், போதிய பாதுகாப்பின்றி இருப்பதை கண்டறிந்துள்ளனர்

இறந்தவர்களின் நினைவாக வைக்கப்படும் நடுகற்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான், அதிகமாக கிடைக்கின்றன. இந்த மாவட்டத்தில், தளிக்கு அருகில் உள்ள, நாகொண்டபாளையத்தில், 46 குறும்பர் இன நடுகற்கள், ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதே போல், ஓசூருக்கு அருகே உலுவீரணள்ளியில், சுமார் 25 குறும்பர் இன நடுகற்களும், கெலமங்கலத்தில் சுமார் 23 குறும்பர் இன நடுகற்களும், ஓசூருக்கு அருகே கொத்தூரில் சுமார் 25 குறும்பர் இன நடுகற்களும், பாரூர், துவரப்பள்ளி, அச்சேந்தரம் போன்ற ஊர்களிலும், நிறையவே குறும்பர் இனமக்கள் வழிபாடு செய்யும் நடுகற்கள் இருப்பதை அறிய முடிகிறது.

ஒரே இடத்தில் 47 நடுகற்கல்கள்

தேன்கனி கோட்டையிலிருந்து, சாலிவரம் போகும் சாலையில் பயணித்தால், 5 வது கிமீட்டரில் பிக்கனள்ளி வருகிறது. இங்குதான், மிக அதிகமாக, குறும்பர் இனமக்கள் வழிபாடு செய்யும், 47 நடுகற்கள் ஒரே இடத்தில், போதிய பாதுகாப்பின்றி தொகுப்பாக இருப்பதை காணமுடிகிறது.

ஆனால், வேறு இடத்தில் இல்லாத, புதுமையான நடுகற்களை இங்கு காணலாம். தன் பலத்தை நிரூபிக்கும் பலசாலிகள் போல், ஒரு ஆண் சிற்பமும் ஒரு பெண் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது, மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

புலியுடன் சண்டையிடும் போர் வீரர்களின் மூன்று நடுகல்லும், இரண்டு குடும்ப நடுகல்லும், அதிகமான நடுகற்கள் ஆண், பெண் நிற்பது போலவும், ஒரு கையில் வாளும் மற்றொரு கையில் கேடயமும் வைத்து கொண்டு, சண்டையிடுவது போலவும் வைக்கப்பட்டு உள்ளன.

சிக்கம்மா, தொட்டம்மா

ஒவ்வொரு நடுகல்லுமே, வெவ்வேறு வகையான உணர்வுகளை வெளிபடுத்துவது மாதிரி நடுகல் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. புது வகையான அமைப்பில், ஒரு குறு நில அரசனின், நடுகல் சிற்பமும் இருக்கிறது. இங்கு, ‘சிக்கம்மா, தொட்டம்மா’ என்ற பெயரில், இரண்டு பெண் தெய்வங்களின் கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதத்தில், குறும்பர் இன மக்கள் ஒன்று சேர்ந்து விழா எடுத்து வருகின்றனர்.

கோயிலின் முன்புறம் ஒன்று சேர்ந்தார் போல், ஊஞ்சல் கம்பம் இருக்கின்றன. இதன் அருகிலேயே, துலாபார கல் ஒன்றும் உள்ளன. இதனை ஒட்டியே, சற்று தூரத்தில், எருது கோட்டைக்கு முன்பாக, எந்த பாதுகாப்பு வசதியும் இன்றி, 15 குறும்பர் இனமக்கள் வழிபடும் நடுகற்கள் இருக்கின்றன. இடிந்து விழும் நிலையில் சிறுகோயிலும் உள்ளன. இந்த கோயிலின் முன்புறத்தில், கைவிடப்பட்ட நிலையில், நந்தியும், சிவலிங்கமும் இருக்கின்றன.

பல நூற்றாண்டுகளாக, பாதுகாக்கப்பட்டு வந்த நமது மரபு சார்ந்த வரலாற்று சின்னங்கள், காலத்தாலும், கடும் வெயில், மழை போன்ற காரணங்களாலும், போதிய பாதுகாப்பற்ற சூழ்நிலையின் காரணமாகவும், தொடர்ந்து சிதையுற்று வருகிறது. இதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறம் கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!