தீபாஞ்ச அம்மன் கோயில்... குறும்பர் வணங்கும் தெய்வம்

தீபாஞ்ச அம்மன் கோயில்... குறும்பர் வணங்கும் தெய்வம் ...

பெரும்பாலும் இந்த பெயர் கொண்ட கோயிலின் உள்ளே வழிபாட்டில் இருக்கக் கூடியது மற்றும் சிலைகளாகத்தான் இருக்கும் என வரலாற்று நண்பர்கள் சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்....

வீர தீர செயல்களில் ஈடுபட்டோ / பிற காரணங்களாலோ கணவன் இறந்துபட அவன் மனைவி அவனோடு உடன்கட்டை ஏறுவது... (இதுவும் ஒரு வித துணிச்சலே என நம் மக்கள் கருதினார்களோ என்னவோ? ) கணவன் மனைவி இருவரும் கையெடுத்து கும்பிடுவதை போன்ற சிலை வடித்து அவர்களை கடவுளாக்கி வழிபட்டுள்ளனர்...

இன்னமும் அந்த வழக்கம் தொடர்கிறது...
அந்த பெண் தீயினுள் பாய்ந்ததாலும், அவளை கடவுளின் இடத்தில் வைக்க வேண்டும் என்பதாலும் "தீயினுள் பாய்ந்த அம்மன் " என்று பெயரிட்டு நாளடைவில் அது மருவி "தீபாஞ்ச அம்மன்" என்றாயிற்று..

பெரும்பாலான ஊர்களில் உள்ள தீபாஞ்ச அம்மன் அல்லது தீபாய்ந்த அம்மன் கோயிலின் வரலாறு இதுவே...
இது போன்றொரு கோயில்  அதிகம் உள்ளது...மரபு நடையில் காணுங்கள் நண்பர்களே !

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!