குறும்பர் இன பழங்குடி மக்களின் பாறை ஓவியங்கள்.

குறும்பர் இன பழங்குடி மக்களின் பாறை ஓவியங்கள்.

அமைவிடம்:குறும்பவரை ,

ஊர்:குறும்பவரை
வட்டம் :
கோத்தகிரி மாவட்டம் :
நீலகிரி
ஓவியம்
இருப்பிடம் :குறும்பவரை

ஓவியத்தின் பெயர்-மான், மாடு, புலி, மரம், மனித உருவங்கள் ஓவியரின் பெயர்-ஓவியத்தின் வகை-பாறை ஓவியங்கள் வண்ணம்-சிவப்பு, வெள்ளை ஆட்சி ஆண்டு-புதிய கற்காலம், பெருங்கற்காலம், வரலாற்றுக் காலம்விளக்கம்-
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி பகுதியில் உள்ள கரிக்கையூர் எனும் மலை கிராமத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் குறும்பவரை எனும் பாறை ஒதுக்குக்கில் உள்ள ஓவியங்களை சென்னை, அரசினர் கவின் கலைக் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டு வெளி உலகுக்கு அறிமுகம் செய்தனர். குறும்புவரை எனும் இப் பாறை ஒதுக்குக்கு அருகே உள்ள கிராமங்களில் குறும்பர் இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர், ஒரு காலத்தில் இவ்விடம் குறும்பர் வசம் இருந்தது, பின்னர் இருளர் இன மக்கள் இப்பகுதியைத் தங்கள் வசம் தக்கவைத்திருக்கலாம்
இப்பாறை ஒதுக்கு அமைந்துள்ள இடம் வேட்டைச் சமூகங்கள் வனத்தினுள் வேட்டையாட வரும் காலங்களில் தற்காலகமாக தங்குவதற்கு உகந்த இடமாகும். இது ஒரு சிறு ஓடைக்கு அருகாமையில் உள்ளது. சுமார் 50 அடி உயரம் 100 அடி நீளம் கொண்ட இப் பாறை ஒதுக்கு இரண்டு அடுக்காய் அமைந்துள்ளது. மேல் அடுக்கு விலங்குகள் ஏதும் வராத வண்ணம் மிகவும் பாதுகாப்பானது. இங்கு சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் உள்ளன அவையாவும் மேல் அடுக்கு சுவரில் உள்ளது. ஒவியங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஓவியர்களால் வரையப்பட்டுள்ளது.
இங்கு மரம், விலங்குகள் மற்றும் மனிதர்கள், வேட்டையாடுவது, சண்டையிடுவது, நடனமாடுவது போலவும் சில அடையாளம் காண இயலாத ஓவியங்கள் யாவும் வெள்ளை வண்ணத்திலேயே உள்ளது அதுபோல பெரும்பாலன உருவங்கள் கோட்டோவியங்களாகவே உள்ளது இருப்பினும் சில இடங்களில் உருவங்கள் கோட்டோவியங்களாக வரையப்பட்டு பின்னர் உட்புறம் வண்ணம் பூசப்பட்டும் காணப்படுகின்றது.
அடர்ந்த வனத்துக்குள் இருக்கும் பாறை ஒதுக்கில் மலை மற்றும் சமவெளிப் பகுதிகளில் கண்ட காட்சியின் சிலவற்றை ஓவியன் வரைந்துள்ளான். ஒரு நிகழ்வை ஓவியமாக கட்டமைக்கும் போது உள்ள நுணுக்கங்களைத் தெரிந்து ஓவியத் தொகுதியினை சில இடங்களில் தீட்டியுள்ளான். இவ்வோவியங்கள் வழியாக அக்காலகட்டங்களில் வனத்துக்கு உள்ளே மற்றும் வெளியே நிகழ்ந்த சம்பவங்களை அறியும் வண்ணம் உள்ளது.
நன்றி!
உயர் திரு :காந்திராஜன்.

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!