கெலமங்கலத்தில் ஓய்சாள மன்னன் வீர இராமநாதனின் 13 ஆம் ஆம்நூற்றாண்டு குறும்பர் இன பழங்குடி மக்களின் நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு


கெலமங்கலத்தில் ஓய்சாள மன்னன் வீர இராமநாதனின்
13 ஆம் ஆம்நூற்றாண்டு குறும்பர் இன பழங்குடி மக்களின் நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓசூரிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் இருக்கும் கெலமங்கலத்தில் அரசு பள்ளிக்கு பின்புரம்
ஓய்சாள மன்னன் வீர இராமநாதனின் 13 ஆம் நூற்றாண்டு குறும்பர் இன பழங்குடி மக்களின் நடுகல் கல்வெட்டு
ஓய்சாள மன்னன் வீர இராமநாதன்(கி.பி. 1254-1295) ஆட்சி காலத்தில் இக்கல்வெட்டு செதுக்கப்பட்டுள்லது.இவனின் இரண்டாவது தலைநகராக குந்தானியை(இப்போது சின்ன கொத்தூர்) நிர்மானித்து ஓய்சாள மன்னர்களிலே அதிக ஆண்டு ஆட்சி புரிந்தவன்.இவன் கொடை கொடுத்த செய்தி ஒசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில், அத்திமுகம்,தேர்பேட்டை, பெண்ணேஸ்வரர் மடம்,நடசாலை, ஓசூர் கோதண்டராமர் கோயில் என இன்னும் பல இடங்களிளும் கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓசூரிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் இருக்கும் கெலமங்கலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பின்புரம் இந்த கல்வெட்டு இருக்கிறது.இங்கே மொத்தம் 23 குறும்பர் இனமக்களின் நடுகல்கள் இருக்கின்றன.ஓரு புலி குத்தப்பட்டான் நடுகல்லும் இருக்கின்றன.மேலும் நான்கடி உயரம் இரண்டடி உயரம் அகலத்தில் இந்த கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது. ஓரு கல்லில் இரண்டு பக்கமும் மற்றோறு கல்லில் ஓரு பக்கம் மட்டும் செதுக்கப்பட்டுள்ளது.
முதல் கல்வெட்டு ;
இக்கல்வெட்டில் முன்பக்கம் பத்து வரிகளும் பின் பக்கத்தில் ஆறு வரிகளும் உள்ளன.”ஸ்வஸ்த ஸ்ரீ …….பொய்சாள வீர ராமனாதவதற்கு வாளுக்கும்..தோளுக்கு…நன்சையாள் ..கெழுப்ததஞ் ஆவதுல் கெலமங்கலத்து …முக..த்தி..” என தொடரும் இக்கல்வெட்டில் சொல்லப்படும் செய்தியாவது 13 ஆம் நூற்றாண்டிளேயே இவ்வூர் கெலமங்கலம் என்று அழைக்கப்பட்டுள்ளது. வீர இராமநாதனின் வீரத்தையும், அவரின் புகழையும் பெருமைக கூறி அவனின் ஆட்சி காலத்தில் மாஞ்சுக்கு என்ற ஊருக்கு அருகில் இருந்த குட்டையும்,திருமுனறேணியிலுல்ள துணை நிலமான முக்கண்டகம் விளையக்குடிய கழனியை தானமாக திருவிடையாட்டம் ஆக குடுத்தோம்.என நிலதானம் வழங்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு பதுவு செய்கிறது.
இரண்டாவது கல்வெட்டில் 13 வரிகள் உள்ளன.முதல் மூண்று வரிகள் படிக்க முடியாதபடி அழிந்துயுள்ளன.அதற்கடுத்து “முக்குத்’தி காம ஆற்று னயநன மணை…கூத்துன் தன்னஞ்..வன மல்ல பூதூரில் ராஜா தொளுக்கும் வாளுக்கும் நன்று….இப்படி தொடர்பின்றி வார்த்தைகள் வருகின்றன. ஆக்காலத்தில் குறும்பர் இன பழங்குடி மக்கள் இந்த இடத்தில் வசிக்க தொடங்கி வாழ்விடமாக்கியிருக்கிறார்கள்.ஓவ்வோரு வருடமும் சித்ராபவர்னமி நாளில் குறும்பர் இனமக்கள் ஓன்றுகூடி விழா எடுக்கிறார்கள்.இம்மக்களின் வாழ்க்கை முறையை பற்றி ஆய்வு செய்தால் வேண்டும்.

Comments

  1. அருமை. அந்த கல்வெட்டு கண்கள் எந்த மொழியில் உள்ளன?

    ReplyDelete
  2. அது எப்படி நடுகல் என்றாலே குறும்பர் இனமக்களுடையது என்று எப்படி முடிவு செய்வீர்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!