கல்வராயன்மலையும் குறும்பக் கவுண்டர் ஜாகீர் இன மக்களும்

கல்வராயன்மலையும் குறும்பக் கவுண்டர் ஜாகீர் இன மக்களும் கல்வராயன் மலையில் சுமார் 106 கிராமங்கள் இருக் கின்றன . இவ்வூர்களில் மூன்று ஜாகீர்களே உரிமை பெற்றிருந்தன . அவை அரியக்கவுண்டர் ஜாகீர் குறும்பக் கவுண்டர் ஜாகீர் சடையக் கவுண்டர் ஜாகீர் என்பன . ஜசீர்களைக் ' காரானர் ' என்றும் கூறுவர் இவாகளும் மலையாளிக் கவுண்டர்களே . இம்மலையில் வாழ்ந்த ஒரு வரே ஜாகர் ஆக்கப்பட்டார் . பொதுவாக இவர்கள் தங்களைக் கொங்கு வேளாளர்கள் எனவும் , காஞ்சிபுரத்தி லிருந்து வந்தவர்கள் என்றும் கூறிக கொள்கிறார்கள் . எல்லாக் கிளைகளும் வேளாளர்கள் என்றே கூறுகின்றனர் . * இப்போது உள்ள ஜாகீர்களின் முன்னோர்கள் விஜய நகர அரசர்கள் காலத்தில் , ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் . தெனால் விசய நகர அரசர்களால் உரிமை வழங்கப்பட்டது . காராளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் மலையில் உரிமை பெற்றதும் , தங்கள் சமுதாயத்தாரோடு இம்மலை யில் வாழ்ந்து கொண்டிருந்த வேடர்களைக் கொன்றும் , அவர்களை அடக்கியும் , அவர்கனோடு கலந்தும் தங்கள் அதிகாரத்தை இம்மலையில் அமைத்துக் கொண்டதாக வரலாறுகள் கூறுசின்றன . விசய நகர அரசின் அழிவுக்குப் ப...