கல்வராயன்மலையும் குறும்பக் கவுண்டர் ஜாகீர் இன மக்களும்

கல்வராயன்மலையும் குறும்பக் கவுண்டர் ஜாகீர் இன மக்களும்


 கல்வராயன் மலையில் சுமார் 106 கிராமங்கள் இருக் கின்றன . இவ்வூர்களில் மூன்று ஜாகீர்களே உரிமை பெற்றிருந்தன . அவை

 அரியக்கவுண்டர் ஜாகீர் 

குறும்பக் கவுண்டர் ஜாகீர் 

சடையக் கவுண்டர் ஜாகீர் என்பன .

 ஜசீர்களைக் ' காரானர் ' என்றும் கூறுவர் இவாகளும் மலையாளிக் கவுண்டர்களே . இம்மலையில் வாழ்ந்த ஒரு வரே ஜாகர் ஆக்கப்பட்டார் . பொதுவாக இவர்கள் தங்களைக் கொங்கு வேளாளர்கள் எனவும் , காஞ்சிபுரத்தி லிருந்து வந்தவர்கள் என்றும் கூறிக கொள்கிறார்கள் . எல்லாக் கிளைகளும் வேளாளர்கள் என்றே கூறுகின்றனர் . 

* இப்போது உள்ள ஜாகீர்களின் முன்னோர்கள் விஜய நகர அரசர்கள் காலத்தில் , ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் . தெனால் விசய நகர அரசர்களால் உரிமை வழங்கப்பட்டது . காராளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் மலையில் உரிமை பெற்றதும் , தங்கள் சமுதாயத்தாரோடு இம்மலை யில் வாழ்ந்து கொண்டிருந்த வேடர்களைக் கொன்றும் , அவர்களை அடக்கியும் , அவர்கனோடு கலந்தும் தங்கள் அதிகாரத்தை இம்மலையில் அமைத்துக் கொண்டதாக வரலாறுகள் கூறுசின்றன . விசய நகர அரசின் அழிவுக்குப் பிறகு கர்நாடக நவாபு களின் நிலையான ஆட்சி ஏற்பட்டது . இடையில் சில ஆண்டுகள் : மராட்டி மன்னர்களின் ஆட்சியும் நடை பெற்றது . இம் : மராட்டியர்கள் ஆட்சியில் வடஆர்க்காடு , தென்னார்க்காடு மாவட்டங்களில் பல ஜாகீர்கள் அளிக்கப் பட்டதை வரலாற்றுச் சான்றுகளால் அறியலாம் . 

ஜமீன்தார் - - ஜாகீர்தார் 

ஜாகீர்கள் முன்பு பாளையக் காரர்களாக இருந்தவர்க ளாவர் . பாளையக்காரர் என்பவர் விசய நகர அரசர் , அரசின் அதிகாரிகள் , முதவியோரைக் குறிக்கும் . இவர்கள் காலத்தில் மராட்டியர் ஆட்சி தோன்றியது . அதாவது இ . பி . 1757 - 94 ! இல் மராட்டியர் ஆட்சி தமிழ் நாட்டில் இருந்தபோது அவர்களின் பிரதிநிதிகள் பொறுப்புடையவர் களாக இருந்தார்கள் . அவர்கள் பல அதிகாரங்களைப் பெற்றிருந்தார்கள் வரிவசூல் செய்யும் உரிமை மிகப்பிரதான மானதாகும் .

 ஆங்கிலேயர் ஆட்சியில் வசூல் செய்யும் அதிகாரம் ஜமீன்தார்கள் என அதிகாரிகளிடம் இருந்தது . முகமதியர் ஆட்சிக் காலத்தில் ஜாகீர்தார்கள் என்பவர்கள் நியமிக்கப்பட்டாலும் ஆங்கிலேயர் ஆட்சியிலும் ஜாகீர் என்றே தங்கள் அதிகாரங்களுடன் இருந்துள்ளனர் . 

ஆங்கில அரகம் இவர் களுக்கு மேலும் சில உரிமைகளும் பட்டங்களும் கொடுத்துக் கௌரவிதது உள்ளன , 

ஜமீன்தாரர்களுக்கு நிலவரி வசூலிக்கும் அதிகாரம் மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது . ஆனால் ஜாகீர்தாரர்களுக்கு மேல்வாரம் , குடிவாரம் என்ற தனி அதிகாரங்களும் கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கதாகும் இந்த வகையில் அதிகாரங்களைப் பெற்ற ஜார்களே கல்வராயன் மலையின் வரிவசூல் செய்யும் உரிமை பெற்றவர்களாக இருந்தார்கள் . மூன்று ஜாகீர்களாகப் பிரிக்கப் படுவதற்கு முன்பு இருந்தது அரியக் கவுண்டன் ஜாகீர் என்பது மட்டுமே இலரே மலை முழுமைக்கும் உரிமை பெற்றவராக இருந்தார் . அரியக் கவுண்டன் ஆர்க்காடு நாவாபிடம் ராணுவ வேலைசெய்தவர் இவரின் சிறப்பான சேலையைர் கதசி , நாவாப்பால் அரியக்கவுண்டருக்குக் கல்வராயன் மலை ஜாகீராக உரிமை வழங்கப்பட்டது

 . அரியச் கவுண்டன் வழியில் பெண் உறவு ஏற்பட்டது . அதற்காக அரியக் கவுண்டன் தன் அதிகாரத்தைப் பிரித்தார் . அவ்வாறு பிரித்த அதிகாரம் , 

குறும்பக் கவுண்டன் என்பாருக்குக் கிடைத்தது . அப்போது இரண்டு 
ஐகீரா , ஆயின

 மூன்றாவதாசி உண்டான ஜாகீர் சடையக் கூடிண்டன் ஜாகீர் , சடையக் கவுண்டன் , கல்வராயன் மலையில் உள்ள சின்னத் திருப்பதி என்னும் மலையில் உள்ள விஷ்ணு - வின் பணிகளைக் கண்காணித்து வந்தவர் . ஆங்கிலேயர் ஆட்சியில் இவர் ஏதோ  உதவியதர்கா ஆங்கிலேயர்களால் ஜாகீர் உரிமையைப் பெற்றார் சடையக் கவுண்டர் . 

அத முதல் சடையக் கவுண்டன் ஜகர் தோன்றிற்று


- 1167 ஆம் ஆண்டிற்கு முன்பே - மூன்று ஜாகீர்கள் இருந்துள்ளதை அறிய முடிகிறது இந்த ஆண்டுகளில் அரியக் கவுண்டன் ஜாகீர்க்கு 14 கிராமங்கள் இருந்திருக்கின்றன.

1 கன்னாறூர் ( கள்ளிப்பாறை பூண்டியூர் சேர்ந்தது ) 
2 புதூர் 
3 தெலியூர்
 4 கிளாக்காடு 
5 சேம்பிப்பட்டு
6 ஆத்தூர் 
7பருவாநத்தம் 
8 மணியார் பாளையம் 
9 ஈச்சக்காடு
 10 கீளத்தகுளி ( கீழ்த்த குனி ) 
11 மேலத் தகுளி 
12 நெக்கரியச்சாம் பாளையம் 
13 கூடாரம் 
14 மாம்பாடி ஆகிய ஊர்களாகும் . . இவ்வூர்கள் தும்பைநாடு , கன்னிப்பாறை நாடு என்ற இரு தாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது . அரியக் கவுண்டன் நாடுகளை இருகரை நாடு என்றும் கூறுகின்றனர் . புதூரில்தான் அரியக் கவுண்டரின் ஜாகர் இருப்பிடம் . இவரை அரியக் கவுண்டன் என்றும் கூறுவர் . 


அரியாக் கவுண்டர் வழியில் உறவு ஏற்படுத்திக் கொண்டதால் அரியாக் கவுண்டரால் குறும்பக் கவுண்டருக்கு ஜாகர் உரிமை வழங்கப்பட்டது . இது அவரின் ஊழியத்தின் தன்மைக்காகவும் சிறப்புக்காகவும் இனாமாக வழங்கப்பட்டது என்று 1870 ஆம் . வருடத்திய ஒரு ஒப்பந்தம் மூலம் அறியலாம் . 

குறும்பக் கவுண்டருக்கு எப்போது முதல் ஜாகீர் உரிமை கிடைத்தது என்று அறிய முடியவில்லை . குறும்பக்கவுண்டன் ஜாகீர் ஊர்கள் மூன்று நாடுகாளகப் பிரிக்கப்பட்ட அவை , தென் மலை நாடு , கடிய நாடு , ஆதிபத்தி நாடு என்பன இம் மூன்று நாடுகளில் சுமார் நாற்பத்திரண்டு ஊர்கள் இருந்தன

 1 வாழப்பாடி 
மதுரா தும்பை

2 சின்ன பெலாப்  பூண்டி 

3பாச்சேரி 
4 இன்னாடு
 5கூடலூர் உள்பட
 6வெதூர் மோட்டாம்பட்டி
 7பொர்ம்ப நந்தம் . 
8அரசம்பட்டு உள்பட
 9முருக்கணாம் பட்டு பானப்பாடி
 10அத்திப்பாடி 
11 ஏரிக்கரை
 12மொட்டயனூர்
 13 தும்பராம்பட்டு 
14 எடப்பட்டு ( தும்பராம்பட்டி ) 
15எறுக்கம்பட்டு
 16ஆத்தூர் 
17பொரசாம்பூண்டி 
18வஞ்சிக் குழி 
19 இறும்பலப் பூண்டி
 20 எடப்பட்டு 
21 விலாரிக் காடு 
 22பல்லாறு 
23 மூணா மதுரை
 24 மான் கொம்பு 
25தூறூர் 
26 செருக்களூர்
 27 முத்தனம் பெலாப் 
28குழிப்புளி
29 பொரசம்பட்டு பூண்டி
 30 வினா நெல்லி

 ஜாகீர்தாரர்களின் கொடுமைகள் முகமதியர்களின் ஆட்சியின்போது அதிகமாக இருந்தன எனலாம் . அவர்கள் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள பல கொடூர மான வழிகளைப் பின்பற்றியுள்ளனர் . மக்களைத்துன்புறுத்தி யுள்ளனர் . வரிகள் மூலம் ஏய்த்தன்ளார்கள் , இந்து மதத்தை அழிக்கவும் , தங்கள் மதத்தைப் பரப்பவும் எடுத்துக்கொண்ட முயற்சியில் இந்த வகையும் ஒன்று . சமவெளி மக்களுக்கே இந்தக் கதி என்றால் மலை மக்களைப் பற்றிக் கேட்க வேண்டுமா ? முகமதியர் ஆட்சிக்குப் பிறகு வந்த ' அரசர்கள் ஓரளவு நன்மைகளைச் செய்தனர் . விஜய நகர அரசர்கள் இந்து மதத்தை வளர்க்கும் நோக்கத்தோடு தங்கள் அரசை அமைத் தார்கள் . எனவே , மத நம்பிக்கை உடையவர்களை அரசப் பிரதிநிதியாகவும் , ஜாகீர்தாரராகவும் , ஜமீன்தாராகவும் நியமித்தனர் . இதனால் ஓரளவு கொடுமைகள் குறைந்தன ; அவ்வளவே . 

விடுதலைக்குப் பின்

 சுதந்திரம் அடைந்து சுமார் 20 ஆண்டுகள் கழிந்த பின்பு மலை மக்களோடும் சமவெளி மக்களோடும் ஓரளவு தொடர்பு ஏற்பட்டது . இத்தொடர்புக்கு ஜாகீர்தாரர்களும் உதவினர் எனலாம் .  உலுப்பை போன்ற நாட்களில் கிராம , நகர மக்களோடு மலையாளிகள் தொடர்பு கொள்ள முடிந்தது . இத் தொடர்பு , விவசாயம் , உணவு , உடை வகைகளில் ஓரளவு மாற்றத்தை , நாகரிகத்தை உருவாக்கியது . சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருத்த கொடுமை களில் தன்ாைசள் குறைந்தன . ஆனாலும் நகா , கிராமப் புற எளிய மக்களின் வாழ்க்கையை விட இவர்கள் நிலை தாழ்ந்தே இருந்தது 20 விழுக்காடு அளவுக்குகூட வசதிகள் இல்லாமல் இம் மக்கள் வார்த்தார்கள் . இதற்குப் பல காரணங்கள் உள்ளன . இது படிப்படியாகக் குறைந்தே வந்துள்ளன . இதனால் சமூகப் பொருளாதார வளர்ச்சியைப் பெற முடிந்தது . இவ் வளர்ச்சியில் ஜாகீருக்கும் முக்கியப் பங்கு உண்டு . கல்வி , அரசியல் தொடர்புகள் முதலிய பல வசதிகனை மக்கள் க்கு பல உதவி செய்ய ஜாகீர்தாரர்கள் முன் வந்தனர் . 

இதில் குறிப்பாகக் குறும்பர் கவுண்டன் குறிப்பிடத் தக்கவர் இவர் அரசியல் உணர்வு , கல்வி முதலிய வற்றை ஓரளவு பெற்று இருந்தார் .

 இருந்தாலும் , உந்தவின் காரணமாக ஜாகீரை விட்டு இந்திய அரசு முனறகளை அறிந்து , நேரடி அரசின் கீழ் வர முயன்றம் , பயன்பட்டும் இருக்கிறார்கள் என்பது குறிப் பிடத் தக்கது . 

ஜாகீர்தாரர்களும் மலையைச் சேர்ந்த மலையாளிகனாய் இருந்தாலும் சில சடங்கு முறைகளில் வேறுபட்டு இருக்கிறார்கள் . 
நவராத்திரி விழாவைக் குறும்பக் கவுண்டன் ஜாகீர்தான் மிகச் சிறட்பாக நடத்தி வந்திருக்கிறார் இவர் திருவிழா , பண்டிகையைப் பற்றி மக்களுக்குத் தெரிவித்து இருக்கிறார் . நவராத்திரிக்கொலுவை மக்களுக்குத் தெரியப்படுத்தி மக்கள் பார்வையிட அனுமதி அளித்துள்ளார் . இந்த நாட்களில் . மலை மக்கள் வந்து வேலை செய்வார்கள் . இதற்குப் பரிசும் அன்பளிப்பும் பெற்றனர் 

நவராத்திரிக் கொலு மற்ற ஜாகீர் மக்களும் வந்து பார்க்கலாம் . சமவெளி மக்களும் வந்து பார்த்து மகிழ்ந்து போவார் . இந்தச் சமயம் யாவருக்கும் உணவு அளிக்கப்படும் . நவராத்திரி நாட்களாக 3 நாட்களும் குறும்பக் கவுண்டர்  ஜாகீர் விழாக்கோலம் பூண்டு இருக்கும் . ஜாகீர் ஊரும் உற்சாக மாக இருக்கும் . 

நவராத்திரி விழாவின் போக குறும்பக்கவுண்டன் ஜாகீர்தாரர் வன்னிக் குத்தல் என்ற விழாவை நடத்துகிறார் .
 சின்னதிருப்பதி விஷ்ணு கோயிலில் புரட்டாசிமாதம் 5ஆம் சனிக்கிழமை அன்று சடையக் கவுண்டன் ஜாகீர்தாரர் வன்னிக் குத்தல் சடங்கைச் செய்து வருவார்கள் . குறும்பக்கவுண்டன் ஜாகீரில்வன்னிக்குத்தல் , நவராத்திரி கொலுவிழா இப்போது இல்லை . இவர்கள் நடத்திய வன் னிக் குத்தல் விழாவை , சின்னதிருப்பதி விழாவில் நடை பெறும் வன்னிக் குத்தல் விழா என்ற பகுதியில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது . குறும்பக் கவுண்டர் , வன்னிக்குத்தலைத்தெரியப்படுத்து கிறார் . மக்கள் கூடுவார்கள் . என்னிக்குத்தலின் போது ஆடு ஒன்று பலியிடப்படும் . அப்போது வாழைமரம் வெட்டப்படும் . வெட்டப்பட்ட ஆட்டின் ஒருகாதை வண்ணாலுக்குக் கொடுத்து விடுவார் கள் . இதற்கு விளக்கம் தெரியவில்லை . பிறகு மேளத்தோடு ஜாகீர்தாரர் வீட்டிற்கு வருவார் . நவராத்திரியில் வன்னி குத்தும் நிகழ்ச்சிவரை - இந்த ஜாகீரி குடும்பத்தினர் யாரும் மாமிசம் உண்பதில்லை ; வன்னிக் குத்தப்பட்டபிறகு கட்டா யம் மாமிச உணவில் சேர்க்கப்படும் . வன்னிகுத்தும் நிகழ்ச்சி முடிந்து ஜாகீர்தாரர் வீடுவந்ததும் அரண்மனையில் கொலு இருக்கும் ஆயுதங்கள் யாவும் கலைக்கப்படும் . ஆயுதங்கள் கலைக்கப்பட்ட பிறகு , இருப்பவர்களுக்கு உணவு கொடுக் கப்படுகிறது . ஜாகீர் குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்தால் , கத்தியின் முனையில் பாலை நனைத்து குழந்தையின் வாயில் விடு வார்கள் . இந்தப்பால் தான் குழந்தைக்கு அளிக்கப்படும் முதல் பாலாகும் . இந்தப் பால் தாயின் பாலாகவும் , மாட்டுப்பாலாகவும் இருக்கலாம் . தாயின் பாலையே முக்கியமாக எதிர்பார்ப்பார்கள் .  ஆண்வாரிசு வீரத்தோடு வாழ வேண்டும் என்பதற்காகவே என்று கூறுகிறார்கன . ஜாகீர் குடும்பப்பெண்களுக்கு மாதவிடாய் வரும் சமயம் அந்த வீட்டில் உணவு கொடுக்க மாட்டார்கள் ; வேறு வீட் டில் தான் உணவு . இவர்களுக்குத் தனியாக வேறு இடம் விடப்படுகிறது . இந்த இடத்திற்கு யாரும் செல்ல அனுமதிக் கப்படுதில்ல . சுமார் 5முதல் 7 நாட்கள் வரை தனித்தே இருக்க வேண்டும் . புரட்டாசி மாதத்தில் ஜாகீர் குடும்பத் தினர் , தங்கள் குடும்ப நபர்களைத் தவிர வேறு யாருக்கும் தண்ணீரைக் கூடக் கொடுக்கமாட்டார்கள் . யாராவது முக் கியமானவர்கள் ( அதிகாரிகள் , தெரிந்தவர்கள் ) வந்து விட் டால் , வேறு இடத்தில் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய் யப்படும் .




குறிப்பு:
| Thurston - castes and ' lrilcs of Southern India Vol . IV page - 401 4 - 101


1 தென்னார்க்காடு மாவட்டம் கல்வராயன் மலை 
கோடைவிழா - சிறப்பு மலர் - - 1984 - பக் . 14 ' 1 மராட்டிய நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு ஜாகிரி அளிக்கப்பட்டது . அவ்வாது கொடுக்கப்பட்டதில் ஆரணி ( வட ஆர்க்காடு ) ஜாகீர் ஒன்றாகும் .

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!