பல்லாவரதை ஆட்சி செய்த குறும்பர் அரசன் பல்லன்,காலிங்கன், இளவரசி பத்மாவதி பற்றிய ஓலைச்சுவடி தரும் செய்தி...பல்லாவரத்துக் கைபீதில்(டி . 2805 )


பல்லாவரதை ஆட்சி செய்த குறும்பர் அரசன் பல்லன்,காலிங்கன், இளவரசி பத்மாவதி பற்றிய ஓலைச்சுவடி தரும் செய்தி...


பல்லாவரத்துக் கைபீதில்(டி . 2805 ) 

சென்னை சைதாப்பேட்டை வட்டத்தைச் சேர்ந்த ( செங்கை மாவட்டம் ) , 
பல்லாவரம் என்ற ஊரின் வரலாறு பேசப்படுகிறது .  குறும்பர் ஒருவன் அந்நாளில் இப்பகுதியை ஆண்டதாகச் சுவடி தெரிவிக்கிறது ; பல்லன் என்பது  குறும்பர் அரசனின் பெயர்
என்றும் சுவடி பேசுகிறது . 

இந்தச் சுவடி மேலும் ஒரு பழைய தமிழ் அம்சத்தைத் தருகிறது . அஃதாவது , விடுகதை போல , சாடை பேசும் முறையில் , ஒருவர் கருத்தை மற்றவருக்கு மறைவாகப் புலப்படுத்துவதில் தமிழ்மக்கள் வல்லவர்கள் ! 

இந்தத் தமிழ்ப்பண்பாடு இப்போது மறைந்துவிட்டது எனலாம் . 

கருத்துச் செறிவும் , மொழி வளமும் இந்தச் சாடைமொழியில் இருக்கும் 

ஒரு பூவாணிச்சி மூலமாக ஒரு காதல் செய்தியைத் தலைவன் தலைவிக்குச் சொல்லியனுப்புகின்றான் ; அதற்கு தலைவி , தனது பதிலை மறைமுகமான கூற்று மூலம் அனுப்புகிறாள் ! 

இந்நூலுள்ளே படித்தால் உங்களுக்கு நன்கு விளங்கும் . மிகச் சிறந்த நாடகப்பாணியில் இச்சுவடி செல்கிறது .

 இந்தச் சுவடியின்படி , பல்லாவரப் பகுதியை ஆண்ட காலிங்கன் என்ற  குறும்பர் மன்னனின் மகள் மீது , சோழன் ஒருவனின் மகன் காதல் கொண்டான் ; 

காதலை நிறைவேற்ற உதவியவன், சோழனின் மந்திரியின் மகன் , இந்த இருவரிடையே நடக்கும் காதல் தொடர்பான , மேலே கண்ட , செய்திப் பரிமாற்றங்கள் ,மிகவும் அருமையான முறையில் நம் கலாச்சார வரலாறு



பல்லாவரத்திலிருந்த பூர்வீக ராசாக்களுடைய கைபீது 
            (டி.2805)

1. பூருவத்திலே பல்லநென்றொரு ராசா யிருந்தான். அவன் ஆதியாய் இந்த ஸ்தலத்தில் பிறப்புத்துவம் பண்ணியபடியிநாலே, இந்த ஸ்தலத்துக்கு முன் மறு பேரில்லாமல் அந்த ராசாவிநாவாளப்பட்டபடியிநாலே பல்லவபுறம் அல்லது பல்வன் பட்டணமென்றழைக்கப்பட்டது.

2. அவன்  குறும்பநென்று சொல்லப்பட்டிருக்குறான். இவன் வெகுநாள் பிறபுத்துவம் பண்ணி தெய்வலோக பிராப்தி ஆனான்.

3. பின் இவன் மகன் காலிங்கன், தன் தகப்பன் பட்டத்துக்கு வந்தான். இவன் வெகுநாள் தபம் பண்ணியவிடத்தில், ஒரு பெண் பிறந்தது. அதுக்குப் பேர் பத்மாவதி யென்று பேரிட்டு, வெகு செல்வீகமாக வளர்த்தான்; அவள் மகா ரூபவர்ண்ண சவுந்தரியமாக இருந்தாள். அவள் தகப்பனாகிய காலிங்கன், அதிக வேதாத்தியாக இருந்து, தன் பிள்ளைக்கு அதிக படிப்பு கத்துக் கொடுத்து, அந்த நாள்கால வழக்கமாயிருந்த நயின பாஷை முதலானதுகள் தர்ப்பித்துக் கொடுத்தான்.

4.  இப்படி இவள் மகாவித்தியா சாமர்த்தியம் பொருந்தியவளானதை தகப்பன் சந்தோஷப்பட்டு, இவளுடைய வித்தியாப்பிசம் நடந்துவந்த பிறகு, இவளுக்கு தனிமையிலே ஒரு பெலத்த மாடி தன் அரண்மனைக் கடுத்தாப் போலே கட்டிவைத்து, அதிலே சில சாதிகளும் இவளையு மங்கே வைப்பித்தான்.

5. அங்கே, இவள் நாள்தோறும் வித்தியாப்பியாசம் பண்ணிவிக்கயில், அதிக சமர்த்திகவதி ஆயிநாள். இதுவன்றியில், இவள் நாள்தோறும் நாள்தோறும் மீனம்பாக்கத்திலிருந்த தீற்த்தத்தில், ஸ்தானபானத்துக்கு தன் தாதிகளுடன் போறத்துக்கு வழக்கப்பட்டிருந்தாள். யிப்படியில் நாள்தோறும் போகுற வழக்கமாக இருக்குகயில், ஒரு நாள் சோழ ராசா மகனிலொருத்தன், அதிக வித்தியாசாமர்த்தியம் பொருந்திய தன் மந்திரிகளுடனே வேட்டை மார்க்கம் அதிக காடுகள், செடிகளுடன் அதிக மிருக சாதிகள் வாசம்பண்ணுகுற ஸ்தலமாக யிருந்ததால், அவ்விடம் வந்து வேட்டைகளாடடி மீனம்பாக்கத்திலிருக்குற தீற்த்தத் தண்டையில் வந்து, தாகம் தீர்த்துக் கொண்டிருக்கும்போது அந்த ராச குமாறத்தி, தாதிகளுடன் புடைசூழ ஸ்தானத்துக்கு வந்தாள்.

6. அப்போது ஸ்தானத்திர்க்கு வந்திருக்கிகுற சோழ ராசாவின் குமாறன் இவளைக் கண்டு அதிகமாய் மோகித்தான். அப்போ அவளும் இவனைக் கண்டு அதிகமாய் மோகதாப மாகினாள். அதன்பேரில், அவள் ஸ்தானத்திலிறங்கி ஸ்தானம் பண்ணி அறண்மனைக்கு திரும்புகாவில் இந்த ராசகுமாறனின் பேரில் உடைத்தாகிய அதிக மோகத்தாபத்திநாலே இவளதிக வித்தியாசாமர்த்தியமுடையவளாக இருந்திநாலேதான் தான் படித்திருந்ததன்படி ஒரு புஷ்பத்தை எடுத்து தன் பல்லில் வைத்துக்கொண்டு வைத்துக்கொண்டு போய்விட்டாள்.

7 அப்போ றாசகுமாற னிதை காண பிரமித்து அதிக மோகபட்டு மந்திரி, அசமனநயின பாஷையிலே சாமர்த்தியவானாகிற வனானபடியினாலே அதன் அர்த்தசாற மேதென்பதை அவனிடத்தில் தரியாபாத்து பண்ணிநான். அதன்பேரில், மந்திரி மகன் அதன் அதன் அர்த்த சாறத்தை சொல்லுகிறான், யென்னவென்றால், அவள் புஷ்பத்தை கைய்யிலே யெடுத்தது, தன்னையே தூக்கி ஒரு புஷ்பத்துக்கு சமானமானவளென்று சொல்லுகிறாள். அவள் அதை தனது பல்லின் பேரிலே வைத்தது, தான் பல்லாவறத்திலிருக்குற தென்றாள்; அவளதை காலின்பேரிலே வைத்தது, தான் காலிங்கன் மகளென்குறாள்; தன் காலிலே மெரித்தது, தன்பேர் பத்மாவதி யென்கிறாள்; தன் மார்பின் மீதில்  வைத்துக் கொண்டது, அவடத்துக்கு நீ வந்தால், தன்னிரு ஸ்தனங்களையும் தந்து, தனக்கு கணவனாக வைத்துக்கொள்ளுகுறே நென்குறாள்.

8. இதைக் கேட்ட மாத்திறத்திலே ராசகுமாறன் அதிக விறகதாப முள்ளவநாகி, மந்திரி மகனை யோசனை கேழ்க்க அதன்பேரில் அவன், "பயப்படாதே வா" யென்றழைத்துக்கொண்டு ராச குமாரனும்

பூவாணிச்சியைப் பணத்திநாலே கைவசம் பண்ணிக்கொண்டு அவள் ராசகுமாறத்தி அண்டைக்கு போகுமிடத்தில், "அண்டுகடைந ரிண்டு வந்தனர்" யென்ற சப்தத்தைச் சொல்லும்பறக்கு போதனை பண்ணிநார்கள்.

9. அவள் அந்தப்படி, "அண்டுகடைந ரிண்டு வந்தனர்" என்று சொல்லிநாள், அப்போ ராசகுமாரத்தியானவள் அவள்பேரில் உக்கிர முகத்தை காண்பித்து, காலெடுத்து வைத்து, மூன்றடி அடித்து அனுப்பிவிட்டாள்! அவள் வந்து டைந்த சங்கதி ராசகுமாறனுக்கும் மந்திரி குமாறனுக்கும் சொல்லிநாள். அப்போ ராச குமாறன் துயரப்பட்டதின் பேரில் மந்திரி குமாறனானவன் யோசித்து, ராசகுமாரனுக்கு சொன்னது; "சிகப்படி மூன்றடியும் அவளுக்கு மூணுநாளாய் வீடுதூறம் வந்திருக்கிறது. சொல்லியனுப்புகிறேநென்று சொல்லி அனுப்பினாள்" யேநென்றால், அந்தப்படி மூன்றுநாள் சென்று மறுநாளும் அந்த பூவாணிச்சி வசப்படுத்தி, "அன்று வந்த நாயென்று போயிநாள்" என்று சொல்ல பண்ணினார்கள்.

10. அந்தப்படி அவள் செய்குறபோது ராசகுமாரத்தியானவள் தன் பத்து விரல்களிநாலும் சந்தனத்தை சைத்து, இந்த பூவாணிச்சு முதுகில்வைத்து அந்த வழியை விட்டு பிழக்கடை வழியாக அனுப்பி விட்டாள்! இத்தோடே இந்த பூவாணிச்சி வெகு வியசனப்பட்டு ஒருக்காலும் தான் இதர்க்குள் படுவதில்லை யென்ற பிரதிக்கினையுடனே ராசகுமாரனிடத்தில் நடந்த காரியத்தைச் சொல்ல அவன் மிகு மன வருத்தத்திர்க் குள்ளாகி, அதர்க்குப்பின் மந்திரி குமாறன் னடைந்த காரியத்தைச் சொல்லுகுறான். "அவள் தன் பத்து விரல்களிநாலே சந்தனத்தைத் தோய்த்து அடித்தது, புழக்கடயாலே போகச் சொல்லினது, பத்து நாள்" நிலவாயிருக்குற படியிநாலேஅது சென்ற மாத்திறத்தில் புழக்கடையிலே வறச்சொல்லியிருக்குறாள்.

11. அதன்பேரில் ராசகுமாறன் சந்தோஷப்பட்டு பத்து நாள் நாள் கழித்து, யிருட்டு வந்தபோது ராசகுமாறத்தியு அரண்மனை புழக்கடை வழியாய் போனபோது அவளே எதிர்கொண்டு வந்து இவனை ஆவிங்கனம் பண்ணி, தன் பஞ்சணைக்கி கூட்டிக்கொண்டு போய், ஒரு கிழமை வரைக்கும் சுகபோகத்தை அனுபவித்தார்கள்.

12. அப்புறம், அவன் மந்திரி மகனை நினைத்து துக்கித்தான். அதுசாடை கண்டு அந்த ராசகுமாரத்தி அவனைக் கேட்டாள். இவடத்தில் காரியத்தைச் சொன்னான்.
          அப்போ, இந்த ராசகுமாரத்தி விசனப்பட்டு, குற முகத்தைக் காண்பித்து, உடனே தன் கையிநாலே நஞ்சு போட்டு பலகாறம் செய்து அவனுக்கு கொடுத்தனுப்பினாள்.


Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!