குறும்பர் என்னும் இடைச்சாதியர் வரலாறு

குறும்பர் என்னும் இடைச்சாதியர் வரலாறு ( டி . 3114 ) 

1 . விசய நகர அரசர்கள் காலத்தில் குறும்பர் என்ற இடையர்கள் பல இடங்களில் ஆட்சி செலுத்தி வந்தனர் . 

2 . அவர்கள் நெடுமரம் , அணைக்கட்டு , சாப்பாக்கம் , நெரும்பூர் அரிய ஊர்களிலும் வேறு சில இடங்களிலும் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு புகழுடன் வாழ்ந்தார்கள் .

 3 . அப்போது முதலியார் . வேளாளர் ஆகிய வகுப்பைச் சார்ந்தவர் களைத் தங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்று குறும்பர்கள் கட்டாயப்படுத்தினார்கள் . அவர்கள் கீழ்ப்படிய மறுத்தனர் . அதனால் குறும்பர்கள் அவர்களுக்குத் தொல்லை தந்தனர் . அப்படி யும் அவர்கள் குறும்பர்களை வணங்க மறுக்கவே , தெருவிலும் மூச்சந்திகளிலும் வெற்றிலைத் தோட்டங்களிலும் மற்ற இடங் களிலும் திட்டிவாசல் போன்று சிறிய , உயரம் குறைவாக உள்ள வழிகளை அமைத்து அதற்கு முன்பாகக் குறும்பர்கள் உட்கார்ந்து கொண்டனர் . வழியில் போகிறவர்கள் அனைவரும் அந்தக் குறுகிய வாசலைத் தலைகுனிந்து கடந்து செல்வதன் வழி குறும்பர்களுக்குக் தலைகுனிந்து வணக்கம் செலுத்தினர் . ஆனால் இந்த ஏற்பாட்டை யும் முதலியார் , வேளாளர் வகுப்பினர் ஏற்கவில்லை . 

4 . அமயன் என்பவன் வழி சமாதானம் செய்து பார்த்தார்கள் . அதன்படி ஒரு குறிப்பிட்ட குறும்பச் சாதியார் வேளாளருடன் சேர்த்து கொண்டார்கள் . 

5 . வயதான குறும்பனின் இழவுச் சடங்கின்போது முன்விரோதம் காரணமாக அவர்களுக்குள் தகராறு எழுந்தது . தலையை மொட்டை அடித்துக் கழுத்துப்பக்கம் வருகிறபோது குரல்வளையை அறுத்துக் இது நெரும்பூரில் நடந்தது . கொண்டார்கள் . பெண்கள் குறும்பருடன் இறந்து போனார்கள் . 

இது நெரும்பூரில் நடந்தது


6.நெரும்பூரில் குறும்பர்களின் கோட்டை இடிந்து விழுந்து மண் மேடாய்க் கிடக்கிறது . அதனைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள் . குறும்பர்களால் கட்டப்பட்ட கோரிகள் பாழடைந்து கிடக் கின்றன . இடிபாடுகளுக்கிடையில் கிடக்கும் கற்கள் மிகப்பழமை யான காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன .

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!