பட்டிப்புல மண்மேட்டுக் குறும்பர்க் கோட்டை விவரம் ( டி . 2864 )

பட்டிப்புல மண்மேட்டுக் குறும்பர்க் கோட்டை விவரம் ( டி . 2864 ) 


1 . முன்பு குறும்பர்கள் மிகவும் புகழுடன் தங்கள் சாதித் தொழிலாகிய ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு அவ்விடத்தில் வாழ்ந்து வந்தாலும் . அவர்களுடைய ஆடுமாடுகளுக்கு அவ்வூர் பட்டி யாக இருந்ததாலும் அவ்வூரில் ஆடுமாடுகள் அதிகமாகப் பெருகியதால் பட்டிப்புலம் என்று அவ்வூருக்குப் பெயர் வந்தது . 

2 . அவர்களுடைய ஆடுமாடுகளுக்குக் கொடிய விலங்குகளால் தொல்லைகள் ஏற்பட்டன . இப்போது சாணார்குப்பம் அல்லது சாளாங்குப்பம் என்கிற ஊரில் இடையன் படல் என்றழைக்கப் படுகிற இடத்தில் பெரிய கற்பாறையைக் குறும்பர்கள் அமைத்து அதன் உச்சியில் பல மாடங்களை ஏற்படுத்தி மேலே ஏறிச் செல்வ தற்குப் படிகளையும் அமைத்து , அவற்றின் வழி சென்று அங்குள்ள மாடங்களில் தீபங்களை வைத்து அவற்றின் வெளிச்சத்தினால் கொடிய விலங்குகளிடமிருந்து தங்கள் மந்தைகளைக் காப்பாற்றிக் கொண்டார்கள் . 


3 . குறும்பரால் அமைக்கப்பட்டதால் அந்தக் கற்பாறை இடையன் படல் எனப்படுகிறது .

 4 . குறும்பர்கள் மத்தையை வைத்திருந்த இடம் மந்தைவெளி என்று அழைக்கப்படுகிறது . 

5 . அங்கே ஒரு பாலகிருட்டிணரின் படிமம் மிகப் பழமையானதாகவும் , பழுதடைந்தும் உள்ளது . அது குறும்பர்கள் சமண மதத்திலிருந்து ஆதொண்டை மன்னன் காலத்தில் வைணவ மதத்திற்குள்ளாக்கப் பட்டபோது , குறும்பர்களால் உண்டாக்கப்பட்டு , முன்னோர்களால் வழிபடப்பட்டு வந்ததாகும் . 

6 . பட்டிப்புலத்திற்கு கிழக்கே மணிமேடு எனும் இடத்தில் குறும்பர்கள் ப தங்கள் கோட்டையைக் கட்டி ஆண்டார்கள் . அந்தக் கோட்டைப் லிருந்து மேற்கத்திய நாட்டாருடன் வாணிகம் செய்து வந்தனர் . 

7 . மாவலிபுரம் என்ற பட்டணத்தில் அகப்படுகிற பழைய காசுகள் குறும்பர்களால் அடிக்கப்பட்ட காசுகள் என்பது போதுமா அளவுக்கு அறிய முடிகிறது .

 8 . இவர்களுடன் ரோமர் வாணிகம் செய்து வந்தனர் - தோன்றுகிறது 


9. மணிமேட்டில் குறும்பர்களால் கட்டப்பட்டிருந்த கோட்டை 6 காணி அளவுக்குச் சதுர வடிவில் காணப்படுகிறது . அந்தக் கோட்டை யின் அடிப்படை தெளிவாகத் தெரிகிறது . அந்தக் கோட்டை மேட்டில் மிகப் பழமையான கற்களும் ஓடுகளும் மிகுதியாகக் இடக்கின்றன . 

10.மழைக்காலங்களில் கோட்டையின் அடித்தளத்தில் பழைய நாணயங்களும் ரோமன் காசுகளும் அகப்படுகின்றன . 


11.கோட்டை புகழுடன் விளங்க வேண்டுமென்று அதன் அடித் தளத்திற்குள் ஏழு சாடி திரவியம் புதைக்கப்பட்டிருக்கிறது என்று பரம்பரையாய் அவ்வூரில் நிலவி வரும் கருத்தை . அவ்வூர்த் தலை வனான ஒரு கிராமணி உறுதி செய்கிறான் .

12. கோட்டைக் குறும்பர்கள் கட்டி ஆண்டதென்றும் , காசுகள் அவர் களால் அடிக்கப்பட்டதென்றும் , வாணிகத்திற்காகவே இவர்கள் கடற்கரையோரத்தில் கோட்டையைக் கட்டினார்கள் என்றும் சொல்லப்படுகின்றன . விசாரித்த அளவில் கோட்டை இருந்திருக் கிறது என்று அறிய முடிகிறது . 


13 . அங்கே ஒரு பிளந்த கல்லாசனம் இருக்கிறது . அது குறும்பரால் ஏற்படுத்தப்பட்டதாய் அறியப்படுகிறது . ஆனால் அதில் உள்ள எழுத்தை வேடர் அறிய இடமில்லை சிறீ வர்மன் உதவி செய்தால் அதில் உள்ள விவரம் அறியலாம் . 


14 . இங்கே குடியிருப்பவர்களின் கூற்றுப்படி , சிறிது நாட்களுக்கு முன்னர் அவ்விடத்தில் அதிகமாகப் பெரிய மதமகசால்கள் இருந்தி ருக்கின்றன . அவை குறும்பரின் கோட்டைக்கு அருகில் இருந்தன வாம் . அவற்றுள் மனித எலும்புகளும் சட்டிப்பானைகளும் இருந் தனவாம் . அவை குறும்பரின் சமாதி என்று அறியப்பட்டனவாம் . அவை சிறிது நாட்களுக்கு முன்னர் கடலிலே தள்ளப்பட்டு விட்டனவாம்..



Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!