குறும்பர்கள் பற்றி வேடச்சந்தையூர் (வேடசந்தூர்) ஓலைச்சுவடி தரும் செய்தி

குறும்பர்கள் பற்றி வேடச்சந்தையூர் (வேடசந்தூர்)
 ஓலைச்சுவடி தரும் செய்தி

வேடச்சந்தையூர் கிராமம் நாகன்பட்டி நாட்டாண்மை எழுதிக்கொடுத்த வரலாறு ( டி . 3405 ) 1 , 



வேடசந்தயூர் கிராமம் , நாகன்பட்டி நாட்டாண்மை சடச்சகவுண்டன் யெழுதிக் கொடுத்த வரலாற் யென்னவென்றால் , ' ' யெங்கள் ஜாதி குறும்பர் ; நாங்கள் செய்குற தொழில் யென்ன வென் றால் , ஆண் பிள்ளை குடித்தினம் செய்குறது ; பெண் பிள்ளைகள் பாளயத்துக்குறும்பாட்டில் மயிரு அறுத்து , அஞ்சுமுளக் கம்பளி நெய்து , தேவையான பேருக்கு கம்பளி 1க்கு கிறயம் கலிபணம் 1 - 2 - 2 ) யிந்த விலைகளுக்கு விற்கு றது ; யெங்கள் குறும்பசாதி நடப்பு யென்னவென்றால் , யெங்களுக்கு குலதெய்வம் லக்ஷிமிதேவி ; டி தெய்வம் குலதெய்வமாக கும்பிட்டுக்கொண்டு வருகுறோம் ; அந்த தெய்வத்துக்கு குற்றம் குறை வந்தால் , பிரார்த் தனை உள்ள பேர் தேங்காயெடுத்துக் கொண்டு , ஆண்பிள்ளை யாவது பெண் பிள்ளையாவது தலைமேலே வைத்தால் றெண்டாயிப் போறது உண்டு . யெங்கள் சாதி வரலாற் யெனக்கு தெரியவராது . 

யெங்கள் சாதியாற் தாடிக்கொம்பு கிராமத்தில் பாப்பணம்பட்டியி லிருக்குறார் கள் . 

தற்குறி சடைச்சகவுண்டன் 

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!