குறும்பர் அரசன் கிஷ்ட்ணராயர்காட்டிய மருதங் குறும்பர் கோட்டை

குறும்பர் அரசன் கிஷ்ட்ணராயர்
காட்டிய மருதங் குறும்பர் கோட்டை 

 ' மருதங் குறும்பர் கோட்டை வரலாறு ' ( டி . 3828 ) எனும் சுவடி , 


மருதம் என்ற ஊர்க்கோட்டை பற்றிப் பேசுகிறது . மருதம் என்ற ஊர் செங்கை மாவட்டத்தில் , உத்திரமேரூர் வட்டத்தில் அமைந்துள்ளது . இவ்வூர்க் குறும்பர்களின் மண் கோட்டையைத் திம்மராசா என்பவன் போரிட்டுப் பிடுங்கிக் கொண்டான் என்கிறது சுவடி , 

 


மருதங் குறும்பர் கோட்டை வரலாறு 

( டி . 3828 ) 

ACCOUNT OF A CURUMBAR FORT AT MARUTAM NEAR CANCHI IN THE UTRA MELUR DISTRICT 

1 . முன்னாளிலே , இந்தக் கோட்டை குறும்பராலே கட்டப்பட்டது . இந்த கோட்டை மண்ணினாலே கட்டப்பட்டிருக்குது . சுமாற் நாற்பது காணி விஸ்த்தீறண மிருக்குது . கோட்டை செவர் அகலம் ரெண்டு கோலிருக்கும் , இது வெகுனாளாய் குறும்பராலே யாளப்பட்டது . அப்பிற மவாள் ராயர் கிஷ்ட்ணராயர் பிறபுத்துவம் வரைக்கும் ஆண்டு , ராயர் கிஷ்ணராயர் னாளிலே அவருக்குள் செங்கில்பட்டு கோட்டை ராசாவானவன் , யிவாள் மேல் யுத்தத்துக்கு வந்து , திருப்புலிவனத்தில் எதிர்க் கோட்டைப் போட்டுக்கொண்டு , வெகுனாள் சண்டை குடுத்து , கடைசியில் குறும்பர் முறியடிக்கப்பட்டு , குறும்ப பிறபுவை அன்னிதமாய் சம்மாரம்பண்ணி , திம்மராசாவானவ னிந்த கோட்டையைக் கட்டிக்கொண்டான் .


2 . அப்பிற மிவனிந்த கோட்டையை , தன் நெருங்கின பந்துவாகிய கோவிந்தராசாவுக்கு சாகிறா



3 . அவனும் , அவனுட ரூப வற்ணிய சவுந்தரியமான வெங்களம்மா என்ற இஸ்த்திறியுமாய் , இந்த கோட்டை அனுபவித்திருந்தார்கள் . 


4 . இவாள் அதிக விறாக தாபமுள்ளவர்களா யிருந்து , அக்கருத்த சகல சாஸ்திர முதலானதுகளிலே தேறினவர்களை யிருந்தபடியினாலே , இவாளிங்கேச நடபாலி கட்டி , அதிலோரு நாள் சலக்கிறீடை பண்ணினார்கள் . அந்த நடபாலி இன்னாள் வரைக்கும் வெங்களம்மா சலக்கிறீடை நடபாலி யென்றழைக்கப்பட்டிருக்குது . 


5 . இவனிந்த கோட்டை , அனுமந்த ராயர் கோவில் ஒன்று , பெருமாள் கோயிலொன்று கட்டிவைத்தார்கள் , அது கிலமாய்ப்போ யின்னாள் வரைக்கு மிருக்குது . 


6 . அதின் விக்கிறக மகாவினோதமானதா யிருக்குது . இவாள் சிலகால மிருந்து , யிந்தக் கோட்டையை அக்கிறகாரமாகக் கட்டிவைக்க யிடம் பண்ணிப் போனார்கள் . 

7 . அந்தப்படி , அவாளுக்கு பிற்க்கால , மிந்தக் கோட்டை பிராமணாளுக் குபகாரமாக அக்கிறகாரமாக்கப்பட்டு , யின்னாள் வரைக்கும் அந்த புண்ணியத்தி னாமத்தினாலே வெங்களம்மாபுர மென்றழைக்கப்பட்டிருக்குது .

8. இதனுட வரலாறை விஸ்தாரமாய் எழுத ரெண்டு மூண்ரு னாளிவ்விடத் திலிருந்து , தரியாபத்தி பண்ணினால் , எல்லவருக்கும் விசிதமாய் தெரிகிறதால் குறும்பர் கைபீது எழுதலாம் . 



குறிப்பு:

1 . மருதம் - செங்கை மாவட்டத்தில் , உத்திரமேரூர் வட்டத்தில் , திருப்புலிவனம் உள்வட்டத்தில் உள்ள ஊர் . செங்கில்பட்டு - செங்கற்பட்டு ; அன்னிதம் - முற்றிலுமாக


4 , விறாகதாபம் - காதல்வயம் ; நடபாவி - உள்ளே செல்லும் படிகள் கொண்ட கிணறு ; சலக்கிரீடை - நீர்விளையாட்டு . 5 . கிலம் - அழிவு



8 , தரியாபத்தி - தரியாப்து ( பாரசீகச்சொல் ) - விசாரணை 10 . ஆற்காட்டுப் பூருவீக சரித்திரமும் அதின் ஆதி மூலங்களும்

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!