கொங்கு நாட்டில் குறுப்பு நாடு (குறும்பர் நாடு)

கொங்கு நாட்டில் குறுப்பு நாடு 

(குறும்பர் நாடு)



ஆய்வுப் பொருளாகிய பெருங்கதை தோன்றிய நாடு குறுப்பு நாடாகும் . 
எனவே அது குறித்துக் கூற வேண்டியது இன்றியமையாததாகின்றது .

 கொங்கு மண்டல சதக ஆசிரியர் " கார்மேகக் கவிஞர் " கொங்கு மண்டலத்தை " இருபத்து நான்கு " நாடுகளாக , பூந்துறை நாடு முதலாக குறுப்பு நாடு ஈறாகக் குறிப்பிட்டுள்ளார் . 

கொங்குநாட்டில் சமண சமயம் செழிப்பாக இருந்த நாளில் எழுபத்து இரண்டு சமண ஆலயங்கள் இருந்ததாகச் சமண அர்ச்சகர்கள் கூறுகின்றனர் . அவற்றுள் தலைமைச் சான்றாக அமைந்துள்ளது விசயமங்கலமே ஆகும் . 

விசயமங்கலத்தைச் சுற்றி அரசன் எனாமலை , அரச்சலூர் மலை , வெள்ளோடு , சீனாபுரம் , திங்களூர் , பூத்துறை ஆகிய சமணத் தலங்கள் அமைத்திருந்தன . இத்தலங்கள் அனைத்தும் " குறுப்பு நாட்டில் " இடம் பெற்றிருக்கின்றன . இவையேயன்றி " அவிநாசி ' க்கு அடுத்த பழங்கரைக் கிராமத்தில் ஒரு ' சமணத்தலமும் ' , ' காங்கயத்தில் மற்றொன்றும் இருந்ததாகக் கோவைகிழார் கூறியுள்ளார் " அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆலத்தூர் வீரசங்காதப் பெரும்பள்ளிக் கல்வெட்டுகளிலும் , இலக்கியத்திலும் மரபுவழிப் பட்டயங்களிலும் ' குறுப்பு நாடு ' குறிக்கப் பெறுகின்றது . 

இப்பெயர் " குறும்பர் ' என்ற மரபினர் வாழ்ந்தமையால் உருவான பெயராகும் . கி . பி . பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று வடகரை நாட்டுக் காணியையுடைய ' குறும்பர்கள் ' என்று குறிப்பிடுகின்றது . 

பண்டைத் தமிழில் ' குறுப்பு ' என்பதற்கு சிற்றரண , கோட்டை , சிற்றரசு , பாதுகாப்பு என்னும் பல பொருள்கள் உண்டு "

குறும்பர் , குறுப்பு ( கோட்டை என்ற சொற்களிலிருந்து ' குறுப்பு நாடு என்று பெயர் பெற்றிருக்க வேண்டும் .

 " கொங்கு தேச இராசாக்கள் " என்ற நூலில் ' இரட்டர் ' ( இரட்டியர் ) என்ற அரச மரபினர் குறிக்கப் பெறுகின்றனர் " . அந்நூலில் ' அரட்டா ' என்பது ' குறும்பர் ' என்று பொருள் கொள்ளப்படுகின்றது .

 அதனால் கொங்கில் கங்கர்களுக்கு முன் ' குறும்பர் ' ஆட்சி நடைபெற்றது என்பதைக் " கொங்கு தேச ராசாக்கள் " என்ற நூல் உறுதிப்படுத்துகின்றது . 

தொண்டை நாட்டில் ' குறும்பர்கள் கோட்டை கட்டிக் கொண்டு ஆட்சி செய்தனர் என்று மரபு வழிக்கதைகள் கூறுகின்றன .

 கொங்கு நாடு " இருபத்து நான்கு நாடு " என்று கூறுவது போல தொண்டை நாடு " இருபத்து நான்கு கோட்டங்கள் " என்று கூறப் பெறுகின்றது , இருபகுதியிலும் இருபத்து நான்கு பிரிவுகள் என்று குறிப்பிடுவது தீர்த்தங்கரர் " இருபத்து நான்கு பேரை " மனத்தில் கொண்டு கூறப்பட்டிருத்தல் வேண்டும் " தொண்டை நாட்டில் , சமணம் சங்க காலந்தொட்டுப் பெருமை பெற்றிருந்தது . 

அது போலவே கொங்கு நாட்டிலும் சமணம் சிறப்புற்று விளங்கியமைக்குக் குறும்பர் ஆட்சியே காரணம் என்று கூறுதல் தகும் . 

Comments

  1. Rajakampala nayakkarukum kurumbarukkum thodarpu unda? Sollunga Anna.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!