#அத்தியாயம் ஆரம்பம் 3#தொல்குடி..#குறும்பு..#குறும்பர்..

#அத்தியாயம் ஆரம்பம் 3

#தொல்குடி..

#குறும்பு..

#குறும்பர்..


பாதீடு

           ஆநிரைகளைச் சமபங்காகப் பிரித்து, வீரர்கள் வைத்துக்கொண்ட செய்தியை அகநானூற்றுப்பாடல்கள் விளக்குகின்றன. சங்க இலக்கியங்களில் 'பால்' 'பாதீடு' ஆகிய சொற்கள் குறிப்பிடப்படுகின்றன . 'இவை தொல்குடி வாழ்க்கை (traial life) யில் நிலைபெற்றிருந்த சமப்பங்கீட்டு முறையைச் சுட்டுவன.  பால் என்பது 'பால்வரைத்  தெய்வமாக' உருவாயிற்று. இதுபற்றி கைலாசபதி, கிரேக்க பால்வரைத் தெய்வம் மொயிரை (Moyira) வரலாற்றுடன் ஒப்பிட்டு  ஆய்ந்து கண்டுள்ள முடிவுகள் சங்க இலக்கியத்தில் குடி வாழ்க்கையின் எச்சங்கள் நிலைபெற்றிருந்தது என்பதை வலியுறுத்தும் அவற்றில் குடிவாழ்க்கையோடு தொடர்புடையதாக சில பாடல்கள் கிடைத்துள்ளன.

"புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
இரவுக் குறும்பு அலற நூறி, நிறை பகுத்து,
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
கொலை வில் ஆடவர் போல, பலவுடன்
பெருந்தலை  எருவையொடு பருந்து வந்து இறுக்கும்,
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்"     (அகம். 97:3-8)

"வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை,
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட

கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை,
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும்
ஓங்கு மலை நாடன்"

       இரண்டாவதாக காட்டப்பட்ட பாடலில்  'பாதீடு' செய்பவள் கொடிச்சி என்பது குறிப்பிடத்தக்கது. 'தொல்குடி' வாழ்க்கையில் உற்பத்திப் பொருளின் மீதும் அதனை பகிர்ந்தளிப்பதிலும் தாய் ஆதிக்கம் செலுத்தியதையேதையே இது காட்டுகின்றது. கொடிச்சி சங்க கால வாழ்க்கையில் தெய்வத்தன்மை மிக்கவளாக காட்டப்படுகிறாள். அந்த பின்னணியிலும் இந்த சடங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. 'குடிமுறை' பகுக்கும் என்று கூறுவதும் குறிப்பிடத்தக்கது குடிக்குறிய பங்கினை பகிர்ந்தளிக்கும் கொடிச்சி என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.

     அடித்துக் கொண்டு வந்த மாட்டினை குறும்பர்களும் மற்றவர்களும் முறைப்படி பகிர்ந்து கொள்வர் என்பதை,

"இரவுக் குறும்பு அலற நூறி, நிறை பகுத்து,
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
கொலை வில் ஆடவர் போல".   (அகம் 97:4-6)

       கவர்ந்த நிறைகளை தம்முள் பகிர்ந்து கொள்ளும் மரபு ஈண்டு அகநானூறு பதிவுசெய்துள்ளது.

தொல்குடிகளின் இருப்பிடமும் அதன் பெயர்களும்

             தொல்குடிகளின் இருப்பிடம் குறும்பு, மிளை, அரண், இருப்பம், அறுப்பு,  காவல் கோட்டை  பாதுகாப்பிடம் ஆகிய பொருள்கள் இடம் பெற்றுள்ளது. இச்சொற்கள் முல்லை, குறிஞ்சி, பாலை ஆகிய திணைகளில் ஆள பெற்றுள்ளது. சங்க காலத்துத் தொல்குடிகள் நிலையான வாழ்க்கையை மேற்கொண்டு தங்களுக்கும் தங்கள் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று கருதி உருவாக்கப் பெற்ற பாதுகாப்பு இடங்களை குறும்பு, மிளை, அரண், இருப்பம், அருப்பு என்று குறிப்பிட்டனர்.

 குறும்பு, மிளை, அரண், அருப்பம், அருப்பு ஆகிய பாதுகாப்பிடங்கள் வேளிர், வேந்தர் எழுச்சிக்குப் பின் அவர்கள் வாழ்விடத்தை பாதுகாக்கும் அமைப்புகளாக மாற்றம் அடைந்தன. குறும்பு, மிளை ஆகியவற்றை பாதுகாத்தவர்கள் பின்னாளில் அந்தந்தப் பெயர்களிலேயே அழைக்கப்பெற்றனர். 

'குறும்பு, குறும்பர், மிளை, இளை, இளையர் ஆகிய பெயர்களை இதற்குச் சான்றாகக் காட்டலாம்'.

குறும்பு "குறும்பர்"

      சங்க இலக்கியத்தில் குறும்பு பற்றிய குறிப்புகளைத் தொகுத்துப் பார்க்கும்போது அது தொடக்க நாட்களில்  வலிமை என்ற பொருளில் வழங்கிய சொல்லாக இருந்திருக்க வேண்டும்.

களரி பரந்த கல் நெடுமருங்கின்,
விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர்
..............................................................
அருங் கலம் தெருத்த பெரும் புகல் வலுத்தர்
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்                (அகம் 89:9-15) 

      காலப்போக்கில் குறும்பு வலிமையுடையோர் காத்து நிற்கும் இடத்தை குறிக்கும் சொல்லாக பயன்படுத்த பெற்றிருக்க இடத்தை குறிக்கும் சொல்லாக பயன்படுத்த பெற்றிருக்க குறிக்கும் சொல்லாக பயன்படுத்த பெற்றிருக்க வேண்டும்.  குறும்பு பற்றிய செய்திகள் பாலைத்திணையில் தான் மிகுதியாக பயின்று வருகின்றனர்.

"இரவுக் குறும்பு அலற நூறி, நிறை பகுத்து,
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
கொலை வில் ஆடவர் போல" 
                                                 (அகம் 97 4 6)

  அதனால் குறும்பு பாலை நில மக்களான மக்களான நில மக்களான மக்களான (குறும்பர்) வாழ்விடமாக குறிக்கப் பெறுகின்றது.

"கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து,
சிலை ஒலி வெரீஇய செங்கண் மரை விடை
தலை இறும்பு கதலும் நாறு கொடிப் புறவின் புறவின் 
வேறு புலம் படர்ந்த ஏறுடை இனத்த
வளை ஆன் தீம்பால், மிளை சூழ் கோவலர்"

       தமிழ் மரபில் பாலை என்பது வேனிற்காலத்தில் முல்லையும் குறிஞ்சியும் திரிந்த நிலையே நிலையே என்பது வலியுறுத்தப் பெறுகின்றது. அதனால் குறும்பு குறிஞ்சி முல்லை நிலங்களில் தான் நிலை பெற்றிருந்தது எனலாம். மாற்றார் குறிப்பினை அழிக்கும் மறவர்கள் கால்நடைகளைக் கவர்ந்து வருவர். பாணணுடைய மறவர்கள் அரிய குறும்புகளை எறிந்து அறிய எறிந்து அறிய அறிய கலன்களைக் கவர்ந்து வருவர். நன்னன் சேய் நன்னன் அறிய குறும்புகளிலிருந்து கவரப்பட்ட நன்கலன்களைப் பரிசிலர்க்கு பரிசாக அளிப்பான். மேலே குறிக்கப்பெற்ற செய்திகள் குறும்பு என்பது தொடக்கத்தில் தொல்குடிகள் தங்கள் செல்வத்தினை (மாடு, அருங்கலன்) பாதுகாத்து வைக்கும் இடமாகத்தான் நிலைபெற்றிருந்தது. ஆனால் வேளிர் ஆட்சியும் வேந்தர் ஆட்சியும் எழுச்சி பெற்று குடித் தலைவர்கள் அவர்களுக்கு கட்டுப்பட்ட பின் குறும்புகள் பின் குறும்புகள் குடித் தலைவர்கள் அவர்களுக்கு கட்டுப்பட்ட பின் குறும்புகள் பின் குறும்புகள் கட்டுப்பட்ட பின் குறும்புகள் கோட்டைக்கு வெளிப்புறத்தில் காவல் காட்டில் அமைக்கப் பெற்றிருக்கலாம். குறும்பு, வேளிர் மனைகளையும் வேந்தர் மனைகளையும் பாதுகாக்கும் வீரர்கள் நிறைந்த இடமாக மாற்றமடைந்து இருக்கலாம் என்பதை,

"கடுந்துடி தூங்கும் கணக்காற் பந்தர்,
தொடர்நாய் யாத்த துன்அருங் கடிநகர்;
வாழ்முள் வேலிச் சூழ்மிளைப் படப்பை,
கொடுநுகம் தழிஇய புதவின், செந்நிலை
நெடுநுதி வயக்கழ நிரைந்த வாயில்,
கொடுவில் எயினர் குறும்பில் சேப்பின்"

             என்ற பாடல் காட்டுகின்றது. தொல்குடிகள் வேந்தர் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரப்பெற்ற பின் குறும்புகள் குறும்பர் வேந்தர் கோட்டையைப் பாதுகாக்கும் பணியில்  ஈடுபடுத்தப்பட்டிருக்கவேண்டும்.

           குறும்பு தொல்குடிகள் உருவாக்கிய பாதுகாப்பிடம் என்பதற்கு பெரும்பாணாற்றுப்படையில் குறிப்புகள் உள்ளன.  வில்லைச் சார்த்தி வைத்த கணை தங்கும்  அகற்சியையுடைய வீடுகள் நிறைந்தது குறும்பு. அது ஊகம் புல்லால் வேயப்பட்ட மதிலைக் கொண்டது. அம்பு கட்டுகளுடன் துடி தொங்கும்  பதரினைக் கொண்டது. நாய்கள் கட்டப்பட்டிருக்கும் வீடுகள் குறும்பில் உண்டு. முள்வேலினையும், அதனை சூழ்ந்த காவற்காட்டினையும் கொண்டது. மரத்தாலான கதவு உண்டு. வலிமையான கதவுகள் நிறைந்த வாயிலைக் கொண்டது.  அக்குறும்பில்
 குறும்பர் தங்கி இருந்தனர் என்பதை,

"ஒன்னாத் தெவ்வர் நடுங்க, ஒச்சி,
வைந்நுதி மழுங்கிய புலவுவாய் எஃகம்
வடிமணிப் பலகையொடு நிறைஇ, முடிநாண்
சாபம் சார்த்திய கணைதுஞ்சு வியல்நகர்
ஊகம் வேய்ந்த உயர்நிலை  வரைப்பின்,
வரைத்தேன் புரையும் கவைக்கடைப் புதையொடு 
கடந்துடி தூங்கும் கணைக்காற் பந்தர்
தொடர்நாய் யாத்த துன்அருங் கடிநகர்"

       குறும்பில் குறும்பர்கள் நிறைத்திருந்தமை பற்றியும் பல சங்கப் பாடல்கள் சுட்டியுள்ளன. எனவே குறும்பு என்பது தொல் பழங்குடிகளின் வாழ்விடமாகவும் ஆநிரை, அருங்கலன் ஆகியன பாதுகாக்கும் அரிய இடமாகவும் அங்கு வாழ்ந்தோர் வலிமைமிகு குறும்பர் என்பதும் தெளிவாகும்.

தொடரும்....

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!