அதியமான்களே குறும்பர் பல்லவர்கள் என்பதற்கு மேலும் ஒரு சான்று!!

அதியமான்களே குறும்பர் பல்லவர்கள் என்பதற்கு மேலும் ஒரு சான்று!!
******************************************
கி.பி 1292;திருப்பூர்மாவட்டம் காங்கேயம் வட்டம்;பட்டாலி என்ற ஊரில் உள்ள "பால் வெண்ணீஸ்வரர் கோயில்" லில் கொங்குச்சோழர்கல்வெட்டு ஒன்று "சிறீலசிறீ விக்கிரமசோழதேவார்க்கு யாண்டுபத்தொன்பதாவது பட்டாலியின் காவலன் குறும்பிள்ளரில் ; நாயநானார் பால்வெண்ணீஸ்வரமுடையார்க்கு இத் திருமண்டகம் அதியமான் மனைக்கிழத்தியும் (மனைவி) மகன் வீராந்தப் பல்லவாரையனும்" என்று இக்கல்வெட்டு கூறுகிறது.
****
பட்டையாக இருக்கும் வாள் பட்டா என்றும் பட்டம் என்றும் அழைக்கப்பட்டாது. பட்டம் என்றால் வாள்; பட்டாக் கத்தி எனப்பட்டது. பட்டாவைத்திருப்போர் "பட்டஆளர்"பட்டாளர் -பட்டாளம் எனப்பட்டது இதுவே ஆங்கிலத்தில் battalion;battale;battalia; better;betten;beating என்ற சொற்களாக போயிருக்கிறது.பட்டாளி என்பது பாடிவீடு என்ற பொருளீல் ஆளப்பட்டதாகத் தெரிகிறது.
*
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D

மகன் என்ற சொல்லுக்கு பெற்ற மகன்; தத்தெடுத்தமகன்; குடிமகன்;பெருமகன் என்று பலபொருள் உண்டு
தமிழக தொல்லியல் துறையின் கால்வெட்டுச் சொல்லகராதி "மக்கட் சேவகன் என்றால் ஊழியன் என்றும் அதைச்செய்வோன் "மக்கட்சேவகன் "என்றும்  அதற்கு மாணிய நிலம்"மக்கட்பேறு"எனப்பெறும். என்று அந்நூல் பக்கம் 85ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
*
கல்வெட்டில் பட்டாலி என்ற ஊர் பாழாங்காலத்தில்  காவல் காக்கப்பட்ட ஊர் அதாவது சசிற்றரசு தலையிடமாகும்/பாடிவீடு. அதை காவல்செய்யும் காவலன் அதியமான் என்கிறது கல்வெட்டு.மேலும் அதியமானை "குறும்பிள்ளரில்"அதியமான் என்று குறிப்பிடுகிறது. அதென்ன குறும்பிள்ளர்?
***
காடவ பல்லவர்கள் குறும்பர் எனப் படுதல்!!
*****
2)"பல்லவன் அபராஜிதவர்மன் 4ஆம் ஆட்சியாண்டில் துரையூர் திருமா துங்கபள்ளி கோயிலுக்கு தங்கம் ;புரவு ஆகியவற்றை குமராண்டி குறும்பர் ஆதித்தன் ஆகிய காடுபெட்டி(காடுவெட்டி)பேரரையன்"என்ற காடுவெட்டி/பல்லவன் கொடையளித்தான் என்று கல்வெட்டு(S.s.i voll12no 80)கூறுகின்றது.

1)அதே ஆட்சியாண்டில் அவனின் மணைவி"பொன்னேரி தாலுக்கா சத்தியவேடு திரு மாதுங்கன் பள்ளி கோயிலுக்கு நந்தாவிளக்கெரிக்க குமராண்டி குறும்பர் ஆதித்தன் காடுபெட்டி(காடுவெட்டி)பேரரையன் மணைவி போற்றி நங்கை 100 ஆடுகளைகொடையளித்தால்" என்று கல்வெட்டு(Ssi vol.12no 89)கூறுவது நோக்க காடுவெட்டியாகிய பல்லவர்கட்கு குறும்பர் என்று அழைக்கப்பட்டதும் அக்குறும்பர் கி.மு 300ல் கரிகாலனுக்கு முன் பல்லவராக ஆண்டிருப்பதும் புலனாகிறது.
**

குறும்பு;குறும்பொறை என்றால் சிறுமலை அல்லது குன்று என்றுபெயர். குன்றை அடையாளமாகக் கொண்ட அரசர் குறும்பர்;குறும்பொறையர் ;குன்றவர் எனப்பட்டானர்.  சரி "பிள்ளரில்"என்றால் என்ன பொருள்?
***
"புள்" என்றால் பறவை;.அண்டப்பறவை அண்டப்புள் என்று வாழங்கும். சங்க இலக்கியத்தில் அண்டிரர்கள் (அண்டப்பறவை கொடியுடையவேளீர்)  "புள்" என்றே கூறப்பட்டிருக்கிகின்றனர். காஞ்சிப் பல்லவர் கண்டப்பேரண்ட கொடியைகொண்டிருந்ததை சங்க இலக்கியம் கூறுகிறது.

திருமாள் "புள்கொடி"(அண்டப்பறவை/பெருங்கழுகு/ராஜாளி/வன்கிளி/அன்னம்)உடையவர்;உலகின் முதால் அரசனாவார். ஆகவே திருமாள்  புள்ளரசு;புள்ளரையன் எனப்பட்டார்.என்பதை பெரியாழ்வார் திருமொழியும்;ஆண்டாள் திருமொழியும் காட்டுகிறது.
*
1)"புள்ளரையன் புகழ்குழறும் புனலரங்கமே " (திவ். பெரியாழ். 4, 9, 5).

3)"புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்;
வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ?;
பிள்ளாய் எழுந்திராய்"- ஆண்டால் திருப்பாவை
*

புள் புள்கொடியுடையோன் "புள்ளன்";புல்லை பில்லு என்பாதைப்போல் புள்ளை பிள்ளை என மரூவி அழைக்கும் மரபுப்படி திருமாளை "பிள்ளாய்"என்றழைக்கிறார் ஆண்டால். பிள்ளை என்றால் மகன் என்று இங்கு பொருள்வாராது.திருமாளை திருமணம் செய்த ஆண்டால் பிள்ளாய் என்று விளிப்பது "புள்ளா"என்பதுவே என்பதறிக.

19311 இ.க.ஆ. 139/1920 ஏன்றகல்வெட்டு தாராபுரம்வட்டம் கோணாபுரம் என்றஊரில் விண்ணகரம் பெருமாள் கோயீலில் உள்ள கல்வெட்டு ஒன்று " காராம்பிச் சேட்டு புள்ளூரந் தான் விலைகொண்டு"என்று குறிப்பிடுகிறது. இதில் "புள்ளூர்";"புள்ளூரன்"என்று குறிப்பிடப்படுவதால் ; தற்போதைய பெரம்பலூர் என்ற ஊர் பெரம்பலூர் மாவட்டத்தின் தலைநகரம்.அவ்வூருக்கு அருகில்"குறும்பலூர்" உண்டு;இதன் பொருள் "பெரும்புள்ளூர்"(பெரியபுள்ளூர்) என்பதே பெரம்பலூர் என்றும் "குறும்புள்ளூர்"(சிறிய புள்ளூர்) என்று பெரம்பலூர் பகுதி கூறப்படுவது போல் ; கொங்குப் பகுதியில்  குறும்புள்ளூர் என்பதே குறும்பலூர் என்றும் மருவி விளங்குகிறது என்பது என் கருத்து.
திருச்செங்கோடு திண்டுக்கல் பகுதி

**
 "அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளநக்கன்;4)அவனின்மகன் "மகாபாகுவான பள்ளிவேளான் நக்கன் புள்ளன்" என்பது 8-9ஆம்நூற்றாண்டு ;கொங்குநாட்டு பெரும்பள்ளியூர் கல்வெட்டு ஆகும்.
 அண்டிரவேள் குறும்பரசர்களுக்கு சூரியனைப்போன்ற  புள்ள நக்கன் என்றுகூறுகிறது "புள்"ளன்(அண்டப்புள்ளை கொடியாக உடைய நக்கன்(மூத்தவன்)என்கிறது. இதில் வரும் புள்ளன் என்பதுவே மரூவி மேலே குறிப்பிட்ட பட்டாலியூர் வெண்ணீஸ்வரமுடையாரின் அதியமானை "குறுபிள்ளர்"என்கிறது இதை பெரும்பள்ளியூர்கல்வெட்டு மற்றும் ஆண்டால் திருப்பாவையின்படி "குறும்புள்ளர்"  அதாவது நக்கம்புள்ளரின் இளையவன்/இளையவழியினன் என்று படிக்கவேண்டும். "நக்கன்"என்றால் மூத்தவன் என்று ஐயா ஐராவதம் மகாதேவன் அவார்கள் மிகசுத்தமாக ஆய்ந்து பொருள் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே நக்கம்புள்ளான் என்பவன்  மூத்தவன் குறும்பிள்ளர் என்பவன்  இளையவன்/தம்பி ஆவான்.
 வேளீர்(பிராகிருதத்தில் வேளான்) குறிப்பாக அண்டாவேளீர் அண்டப்பறவை கொடியிருப்பதைப்போல் பாண்டிநாட்டு அதியமானுக்கு அக்கினிகுண்டம் ஏந்திய அண்டப்பறவை கொடியை கொண்டிருந்ததை சங்கப்பாடால் காட்டுவதை   
 *
 "கடல்கண் டன்ன மாக" விசும்பின்
"அழற்கொடி யன்ன" மின்னுவசிபு நுடங்க"-162 அகநாநூறு
 *
முன்பே தனிப் பதிவிட்டிருக்கிறேன். அகுதை தொடர்பான சங்கப் பாடல் ஒன்று காஞ்சிப்பல்லவர் அண்டப் பறவை கொண்டிருந்ததை கூறுவதை தனிப்பதிவிடுவேன். இந்தவகையில்தான் பட்டாலின் வெண்ணீசுரமுடையார் கால்வெட்டில் அதியமான் மகன் "பல்லவரையன்"என்றுமிகச்சரியாகவே குறிப்பிட்டுள்ளது. அதியமான்கள் தம்மை காடவர்(பல்லவர்)எனக்கூறும் கல்வெட்டுக்களை  கல்வெட்டு ஆய்வாளர் முரளிநாயக்கர் வெளியிட்டமைக்கு இவ்வெண்ணீஸ்வரமுடையார் கல்வெட்டு உறுதிசெய்கிறது.
 *******

குறும்பர்கள்_தான்_காடவ_பல்லவர்கள் என்று எம் இன வரலாற்றை வெளிக்கொண்டு வரும் எங்கள் வழிகாட்டி மற்றும் வரலாற்று ஆய்வாளர்  திரு.மணிபாரி ஐயாவுக்கு  நன்றிகள்.......

Comments

  1. Nanba ithukula proof irukka plz send to my email plz plz

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

மருதநிலத்தின் மக்கள்