கொங்கு நாட்டில் குறும்பர் செய்த நற்பணிகள்

கொங்கு நாட்டில் குறும்பர் செய்த நற்பணிகள் 


குறும்பர் கல்வெட்டு:


குறும்பர்கள் இன்று ஈரோடு மாட்டம் அந்தியூருக்கு வடக்கே உள்ள பருகூர் மலைத் தொடரில் " குறும்பர்கள் " என்ற மலைவாழ் மக்களாக வாழ்கின்றனர் . இம்மக்களின் சிலர் குறும்பா மொழி பேசுகின்றனர் . சிலர் கொச்சையான தமிழும் பேசுகின்றனர் . இன்று இவர்களில் " பால் குறும்பர் " " முளகுறும்பர் ” என்ற பிரிவு காணப்படுகின்றது . 

குறும்பர்கள் கொங்கு நாட்டில் பழங்குடி மக்களின் ஒரு இனத்தார் கொங்கு 24 நாடுகளில் குறும்பர்கள் வசித்த நாடே குறும்பர் நாடு , குறும்புநாடு , குறுப்புநாடு என்று மாறியுள்ளது எனலாம் . 

கொங்கு நாட்டுக்கு வடக்கே ஹௗபீடுவை தலைநகரமாகக் கொண்ட ஒய்சாளர் வம்சம் ( போசாள் ) தோன்றியது . கொங்கு நாட்டில் தென் எல்லையில் மதுரை பாண்டியர் புகுந்து ஆட்சி செய்த போதே கொங்கு நாட்டின் வடக்கு பகுதியில் ஒய்சாளர் புகுந்து தொல்லை விளைவித்தனர் . ஏறத்தாழ கி . பி . 1189 முதல் கி . பி . 1342 வரை கொங்கு நாடு முழுவதும் ஒய்சாளரின் முழுகட்டுப்பாட்டில் இருந்துள்ளது . ஒய்சாள மன்னன் மூன்றாம் வீரவல்லாளன் கல்வெட்டு பெரும்பாலும் கிடைக்கின்றது . ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் , எண்ணமங்கலம் , விஜயமங்கலம் , ஈரோடு , அரச்சலூர் , கொடுமணல் போன்ற ஊர்களில் வீரவல்லாளன் காலத்து கல்வெட்டுகள் கிடைக்கின்றன . இந்த கல்வெட்டுகள் பெரும்பாலும் கோவில் திருப்பணிகளை மட்டும் குறிப்பிடுகின்றது .

 பவானி வட்டம் , எண்ணமங்கலம் , புங்கமடுவு , வாவவித் தோட்டத்தில் கிடைத்த கல்வெட்டு வீரவல்லாளன் காலத்து கல்வெட்டாகும் ( கி . பி . 1299 ) . இக்கல்வெட்டு வடகரை நாட்டு சிலம்பூரில் பந்தீஸ்வரமுடையார் கோவில் பழுது பார்க்கப்பட்டுள்ளது . இத்திருப்பணியை செய்தவர்கள் இவ்வூர் காணியுடைய குறும்பர்கள் சிலர் சாட்சி கையொப்பமிட்டுள்ளனர் . அவர்களின் சிலப்பெயர்கள் சிலம் பக்கவுண்டன் , இரவிபந்தன் , இராசக்கவுண்டன் , சொன்ன கவுண்டன் , பெரியப்பன் , குப்பன் , காரிராமன் , இராமகவுண்டன் முதலியோர் ஆவார்கள் . இக்கல்வெட்டை எழுதியவன் நடுவிக்கவுண்டன் , பந்தியப்பன் , இவ்வூர் இக்கல்வெட்டில் " சிலம்பபூர் " என்று குறிப்பிடுகின்றது . இதற்கேற்ப சிலம்ப கவுண்டன் என்ற பெயரும் இறைவன் பெயர் பந்தீஸ்வரர் என் பதற்கு ஏற்ப பந்தியப்பன் என்ற பெயரும் வருவதும் பொருத்தமாக உள்ளன

இக்கல்வெட்டு மூலம் குறும்பர்கள் பல சமய திருப்பணிகளை செய்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது .

செலம்பூர் அம்மனின் அருள் குறித்த செய்தி ஒன்று இப்பகுதியில் வழங்கி வருகிறது 

" முற்காலத்தில் இக்கோயில் உள்ள இடம் பரந்த வனப்பகுதியாகக் காணப்பட்டது . புதர்கள் மண்டிக் கிடந்தன . விலங்குகளின் நடமாட்டம் மிகுதியாக இருந்து வந்தது . இத்தகைய நிலையில் வயோதிகர் ஒருவர் இவ்விடத்திற்குச் சென்று , இங்குள்ள செலம்பூர் அம்மனை வழிபட்டார் , வழிபட்ட பின்பு ஆலயத்தின் அருகே உள்ள ஓரிடத்திற்குச் சென்று மிகுந்த பசியோடு உறங்கினார் . அந்நிலையில் தம் மனத்திற்குள் செலம்பூர் அம்மனை நினைத்துக் கொண்டே உறங்கினார் . அந்தச் சமயத்தில் இவருக்கு அருகே இருந்த ஆண் பளைமரம் ஒன்றை , செலம்பூர் அம்மை தம் சக்தியால் பெண் பனையாக்கிக்ப் பனம் பழம் வரவழைத்து , அவருடைய கொடும்பசியைத் தீர்த்து வைத்தது . " அனபர் , இச்செய்தியை நினைவுகூறும் வகையில் , இக்கோயிலின் முன்பக்கம் " ஆண் மரத்தை பெண் மரமாக்கி அரும்பசி தீர்த்துவைத்த அன்னதான சொரூபி சிம்மவாகளி செலம்பூர் அம்மன் " என்ற வாசகம் எழுதப்பெற்றுள்ளது .

 சிலம்பூர்ப் பகுதியில் முன்பு வாழ்ந்து வந்த குறும்பர்கள் , இவ்வூர்க் கோயிலுக்கு நிலக்கொடை அளித்தமை பற்றிய செய்தியைக் கல்வெட்டுக் கூறுகிறது . போசள மன்னன் மூன்றாம் வீரவள்ளாளன் காலத்தைச் சேர்ந்த இக்கல்வெட்டு 108 வரிகளில் அமைந்துள்ளது . 

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!