சன்னியாசி குறும்பர் சரித்திரம் ( டி . 2862 )

 சன்னியாசி குறும்பர் சரித்திரம் ( டி . 2862 ) 

குறும்பர் சரித்திரம் எனும் நூலைப் படித்த ஒரு துறவி கூறிய விவரங்கள் பின்வருமாறு

1 . ஆதொண்டை மன்னன் காலத்தில் குறும்பர்கள் சமண மதத்திற் குட்பட்டிருந்தார்கள் . அவர்கள் சமண மதமும் ஆட்சியுரிமையும் பழங்காலத் தொட்டுத் தங்களுக்கு உரிமையுடையது என்று எண்ணி மற்றவர்களுடன் பகைமையை வளர்த்துக்கொண்டு வந்தார்கள்  

2அவர்கள் மிகப் பலம் வாய்ந்த கோட்டையைப் புழலிலே கட்டிக் கொண்டு ஆண்டு வந்தார்கள் .

3 அவர்களின் ஆளுகைக்குள் , சென்னைப் பட்டணம் , மாவலிப் புரம் , வடப்பட்டணம் கோட்டை வரை சற்றேறக்குறைய ஆற்காட்டுப் பகுதி முழுவதும் அடங்கியிருந்தது . ஆனால் அவர்களுடைய ஆட்சிக்கு ஆதரவு இல்லாமலிருந்தது .

 4 . அவர்கள் தங்கள் மதத்திலிருந்து சூத்திரர்களையும் புறக்கணித்துக் கொடுமை செய்தனர் . இதை அறிந்து பல அரசர்கள் அவர்கள் மீது படையெடுத்து வந்தனர் . ஆனால் குறும்பர்கள் தங்கள் வலிமையினால் படையெடுத்து வந்தவர்களை முறியடித்து , வெற்றி பெற்று மிகவும் புகழுடன் வாழ்ந்து வந்தார்கள் : 

5 . குறும்பர்களிடம் அனைவரும் அச்சத்துடன் அடங்கி வாழ்ந்து வந்தபோது பார்ப்பனர்கள் குறும்பர்களை எவ்வழியில் முறியடிப்ப தென்று ஆராய்ந்து அப்போதிருந்த சோழ அரசனிடம் சென்று முறை யிட்டனர் . சோழன் படை எடுத்து வந்து போரிட்டுக் குறும்பர்களிடம் தொடக்கத்தில் தோல்வியுற்றுப் பின்னர் சைவப் பார்ப்பனர்களுடைய மந்திர வலிமையினால் கடவுள் தோன்றி ஆறுதல் கூற அதன் வழி சோழன் மீண்டு வலிமையுடன் குறும்பர்கள் மீது படையெடுத்து , - போரிட்டு , இறுதியில் குறும்பர்களின் கோட்டையை . முற்றுகையிட்டு இடித்துப்போட்டான் .


 6 அப்போது ஆட்சிபுரிந்து கொண்டிருந்த குறும்பர்கள் அனைவரும திராவிட தேசம் முழுவதும் சிதறுண்டு ஓடினர் . 

7.மாவலிபுரத்திற்கு அருகில் கட்டப்பட்டிருந்த கோட்டையிலிருந்தும் வெளியற்றப்பட்டார்கள்

8.அப்போது மயிலாப்பூரில் ஆட்சி செய்துகொண்டிருந்த கந்தப்ப ராசா குறும்பர்களுடன் போரிட்டாராம் . கந்தப்ப ராசாவினுடைய வரலாறு , தோமையரால் கிறித்தவர்களாக்கப்பட்ட மயிலாப்பூர் ரோமன் கத்தோலிக்கர்களிடம் இருக்கிறது . 

9.குறும்பர்கள் மாவலிபுரத்திலும் அதற்கு அருகிலும் உள்ள இடங்களிலும் சமணர்களாக வாழ்ந்தார்கள் . அவர்கள் வழிபட்ட சமண விக்கிரகம் இப்போது பார்ப்பனார்களால் எரியூட்டப்பட்டு நொண்டியாக்கப்பட்டிருக்கிறது . சோழியப் பொய்கையிலே ஒரு சமணக்கோயில் இருக்கிறது . இன்னும் இரு பக்கங்களிலும் தகர்த்துப் போட்டவை தவிர மற்றவை உள்ளன . 


10 . இவ்வாறு குறும்பர்கள் பலகாலம் ஆட்சி புரிந்திருந்தாலும் , சிலருடைய தூண்டுதலாலும் பல அரசர்களுடன் பகை கொண்ட தாலும் சமண மதத்திலிருந்து வைணவ மதத்திற்கு மாற்றப்பட்டார் களாம் . 

11 . அதன் பின்னர் கிருட்டிணசாமியின் அருளால் குறும்பிடையர் என்ற பெயர் உண்டாயிற்று . 

12 . அக்குறும்பர்கள் தங்கள் வாரிசுகளைப் போர் வீரர்களாக்கித் தங்கள் ஆட்சியை விரிவாக்கி ஏறக்குறைய 25 கோட்டைகளை மண்ணினால் கட்டி , தங்களுக்குரிய படைகளுடன் பரம்பரைப் பரம்பரையாய்த் தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்தார்கள் . 

13 . அவர்களுடைய ஆட்சி கிருட்டிணதேவராயர் ஆட்சிக்காலம் வரையிலும் இருந்தது என்பதில் எந்தவிதமான ஐயத்திற்கும் இடமில்லை .

 14 . அதன் பின்னர் வேளாளரையும் முதலியாரையும் தங்கள் பெருமை யால் வணங்கச்சொல்லி , வற்புறுத்தி கொடுமை செய்ததால் குறும்பர்கள் பலர் இறந்து போனார்கள் . அம்பட்டரால் சிலர் கொல்லப்பட்டார்கள் . எஞ்சியவர்கள் கிருட்டிண தேவராயரின் படையெடுப்பில் சிதறுண்டு போனார்கள் . 

15.அவர்களுடைய போர்க்கருவிகளும் கோட்டைப் பொருள்களும் மற்றவையும் உயி..பாளையத்தில் இருக்கின்றது என்று சொல்லப் படுகின்றன..


Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!