பெண்முகவடிவில்ஒண்டிகைமாஸ்தி கல் #சஹகமானா #மைசூர்

#பெண்முகவடிவில்ஒண்டிகைமாஸ்தி கல் #சஹகமானா #மைசூர்

பழங்கால கர்நாடகத்தில் பெருமளவு சதிமுறைமை நடைபெற்றதற்காண சான்றுகள் கர்நாடக முழுமையும் ஏராளமாக விரவிக் கிடைக்கின்றன. இவற்றுள் மூன்று நிலை அடுக்கு சதிகற்கள் இருப்பினும் பெரும்பான்மையாவை ஒண்டி கை மாஸ்தி கல் என்ற வகை சதிற்களே!  இவை ஏறக்குறைய நூற்றுக்கணக்கான அளவில் கர்நாடக கிராமங்களில் காணக்கிடைக்கின்றன.( தாளவாடி மலைக்கிராமங்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஒண்டிகை மாஸ்திகற்கள் எம் குழுவினரால் கண்டறியப்பட்டு முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது)

அமைப்பு-; அலங்கார தூணின் மையப்பகுதியின் பக்கவாட்டில் பெண்ணின்வலது கை மடக்கி உயர்த்தியபடி அபயஹஸ்தம்  காட்டியிருக்கும் படியும் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரலின் மத்தியில் எலுமிச்சை கனியை பற்றியிருக்கும்மாறும் தூணின் மேற்புறம் கும்பகலசம் போன்றும் சிலவற்றில் முக்கோண வடிவத்திலும் சித்தரிக்கப் பட்டிருக்கும்...  கீழ் புறத்தில் ஆண், பெண் சிற்பங்கள் வணங்கியபடியும் சிலவற்றில் தோளோடு அணைத்தாவாறு காட்டியிருப்பர் மேற் புறத்தில் சூரியன் சந்திரன் பொறிக்கப்பட்டிருக்கும் இந்த வகை கற்களை சதிமுறைமையை குறிக்கும் சதிகல் என்ற வகையில் ஒண்டி கை மாஸ்திகல்லு என கர்நாடக நடுகல் ஆய்வாளர்கள் அழைப்பர்.. இங்ஙனமிருக்க மைசூர் நகரில் இங்கல், மற்றும் வீரனகரே என்னுமிடங்களில் நம்மால் கண்டறியப்பட்ட ஒண்டிகை மாஸ்தி கற்களின் மேற் பகுதியில் பெண் முகம் வடிக்கப்பட்டு இவை சதியேறிய பெண்டிர்காக எழுப்பப்பட்டவை என்ற ஆய்வாளர்களின் கருத்திற்க்கு வலு சேர்க்கும் வண்ணம்  அமைந்துள்ளது. இச்சிறப்பான பெண்முக ஒண்டி கை மாஸ்திகற்கள் கர்நாடகத்தின் வேறு பகுதிகளில் கிடைத்திருப்பதாக தெரியவில்லை!

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!