குறும்ப மொழி
குறும்ப மொழி :- ஒரு இனம் என்றால் அதற்க்கு மொழிதான் அடையாளம், அதே போல் குறும்ப இன மக்களுக்கு குறும்ப மொழிதான் இன அடையாளம், ஆனால் பல ஊர்களில் குறும்ப மொழி வழக்கொழிந்து விட்டது, சில ஊர்களில் பேசி வருகிறார்கள், ஆனால் அது கன்னடம் என்று நினைத்து அறியாமையில் குறும்பர்களின் மொழி கன்னடம் என்றே கூறி வருகிறார்கள், இது மிக பெரிய அறியாமை, தான் பேசுவது என்ன மொழி என்றே தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் மன நிலமை, அதாவது குறும்ப மொழி ஒரு தனி மொழி, திராவிட மொழி குடும்பத்தில் கொடவா பிரிவில் குடுகு, குறும்ப மொழிகள் வகை படுத்தப்படும், இந்த இரண்டு மொழிகளுக்கும் சில சில ஒலி வேறுபாடுகள்தான், ஆனால் குறும்ப மொழி தெரிந்தாலுமே அதை கன்னடம் என்று கூறி வருகிறோம் அது அறியாமை, நமது குறும்ப மொழி உச்சரிப்பு சொல் பயன்பாட்டை கன்னட உச்சரிப்பு சொல்லாடலுக்கு மாற்றி விடுவதால் குறும்ப மொழி கன்னடத்திற்க்குள் அழிந்து விடும், அதாவது குறும்ப மொழி தமிழ் போல் பல வட்டார வழக்குகளை கொண்டது, தேனி வட்டார வழக்கு வேறு, திண்டுக்கள் வட்டார வழக்கு வேறு,புதுக்கோட்டை வட்டார வழக்கு வேறு, வேலூர்,திருவண்ணாமலை வட்டார வ...