குறும்பர் இன மூதாட்டி மல்லாயம்மாள் சாபத்தால் அழிந்த நிலக்கோட்டை ஜமீன்...
குறும்பர் இன மூதாட்டி மல்லாயம்மாள் சாபத்தால் அழிந்த நிலக்கோட்டை ஜமீன்... விஜயநகர சாம்ராஜ்ய காலத்தில் திண்டுக்கல் ஒரு முக்கிய அரசியல் எல்லையாக இருந்தது . திண்டுக்கல்லில் நாயக்கரின் ஆட்சி முகம்மதியர்களால் வீழ்த்தப்பட்டது . பின் இம்முகமதியர்கள் ஆட்சியை மைசூரில் ராஜாவிடம் சமாதானமாக ஒப்படைத்தனர் . மைசூரின் பிரதிநிதிகள் திண்டுக்கல்லில் கி . பி . 1742 ல் ஆட்சி நடத்தினர் . அவரது ஆட்சியில் திண்டுக்கல் சீமையானது 26 பாளையங்களாக இருந்தது . அவற்றுள் நிலக்கோட்டையும் ஒன்றாகும் . ஒவ்வொரு பாளையத்திற்கும் அப்போது ஒரு ஜமீன் என்று சொல்லக்கூடிய சிற்றரசர்கள் ஆட்சி செய்து வந்தனர் . இந்த நிலக்கோட்டை ஜமீனில் நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த கூலப்ப நாயக்கர் என்பவர் ஆட்சி செய்து வந்தார் . நிலக்கோட்டை ஜமீனில் நிலக்கோட்டையைச் சுற்றியுள்ள பதினெட்டுப்பட்டிகள் ஆட்சி எல்லைக்குட்பட்டதாகும் . ஒவ்வொரு ஜமீனும் அவரவர்களின் ஆட்சி அதிகார எல்லைக்குட்பட்ட கிராமங்களின் வருவாய் நிலைக்கேற்ப தமக்குத் தேவையான அரண்மனையை ஏற்படுத்தி , தனக்கு உண்மையானவர்களை அரண்மனைப் பணிக்கும் , வெளிப்பணிக்கும் பணியாளர்களை...
Comments
Post a Comment