குறும்பர் இன மக்களின் வினா???

மதிப்பிற்க்குரிய வரலாற்று ஆய்வாளர்கள், மாசற்ற மனுநீதி சோழன் வாழ்ந்த தமிழகத்தில் வாழும் மானமுள்ள தமிழர்களே வினாவுக்கு விடை அளிப்பிரோ???
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பறந்து விரிந்த தழிழகம்,பார்போற்றும் தமிழகம் இரத்ததையும்,இரக்கத்தையும் கொன்ட தழிழகம் வரலாற்றில் ஏன் இப்படி பிழை செய்ய யார் காரணம். தமிழ்நாட்டில் சேர,சோழ,பாண்டியர்களை மட்டும் தமிழ் வேந்தர் என்று கொண்டாடப்படும் பொழுது பல்லவர்களை கொன்டாட மறுப்பது ஏன்?
வடக்கில் இருந்து அகத்தியர் குடியமற்த்திய வேளிர் தமிழர்கள் என்று கொண்டாடும் நீங்கள் வடக்கில் இருந்து வந்த பல்லவர்களை தமிழர்  இல்லை என்று எப்படி கூற முடியும்? பல்லவர் தமிழர் இல்லை என்றால் நந்திவர்மனை பற்றி ஏன் நந்திகலம்பகம் பாட வேண்டும்? சங்கதமிழ் வளர்த்த பாண்டியர்கள் என்று கூறும் மாமேதைகளே,பல கல்வெட்டில் பாண்டியர்கள் யது வழிதோன்றல் என்று கூறுகின்றார்கள் அவர்கள் தமிழர் என்றால் அதே போல்  பல கல்வெட்டுகளில் விசயநகர அரசர்கள் தங்களை யது வழிதோன்றல் என்று கூறுகிறார்கள் இப்படி இருக்க யது வழிதோன்றிய பாண்டியன் மட்டும் எப்படி தமிழர் அரசு??  ஆந்திரம்,கர்நாடகத்தில் சோழர் கல்வெட்டு கிடைக்கபெருகிறது அதில் தெழுங்கு சோழர்கள் என்ற பெயருடன் இப்படி இருக்க சோழன் தெழுங்கரா??
கிபி2 நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தில் தன்னாட்சி புரிந்த குறும்பர் ஆதொண்டனால் வெள்ளப்பட்டு,  சிதறிய குறும்பர் நீலகிரி,சித்தூர்,வயநாடு,மைசூர் போன்ற பகுதிகளில் வாழும் குறும்பர் எப்படி வந்தேரி ஆவர்??  வந்தேரி என்றால் ஏன் சங்க இலக்கியங்களில் குறும்பர் பற்றிய குறிப்புகள் இருக்கவேண்டும்? சென்னை அரசாங்க பதிவுகளில் ஏன் குறும்பர் தொண்டை மண்டல பூர்வீக குடி என்று கூற வேண்டும்??? திருவண்ணாமலை யில் மாயோனுக்கு விழா எடுக்கும் நாம் தமிழர், மாயோனை நடுக்கல் வழிபாடு செய்யும் குறும்பர் மக்களை அங்கீகரிக்காதது ஏன்???

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!