வாணான்குறும்பனை தூக்கிப்பிடிப்பது சாதியவாதமா? மண்ணுக்கேற்ற மார்க்சியமா? 

வாணான்குறும்பனை தூக்கிப்பிடிப்பது சாதியவாதமா? மண்ணுக்கேற்ற மார்க்சியமா? 
மக்கள் சமூகநீதி பேரவை அரசியல் கட்சி. ஆனால் வாணான்குறும்பன், குறும்பஆதித்தன் போன்றவர்களின் புகழ்பாடுவதும், அவர்களுடைய திருவுருவப்படத்தை திறப்பதும் சாதியவாதம் ஆகாதா என்று அரசியல் நண்பர்கள் என்னிடம் கேட்கிறார்கள். பழந்தமிழினச்சொந்தங்களே!
மக்கள் சமூகநீதி பேரவை கொள்கைகளில் ஒன்று பொதுவுடைமை சமூகம் படைப்பது. பொதுவுடைமைசிந்தாந்தமான மார்க்சியத்தை இந்த மண்ணுக்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்தினால்தான் வெற்றி காணமுடியும். தமிழகத்தில் ஆதி பொதுவுடைமைசமூகத்தில் நிலவிய பண்பாடும், உற்பத்திமுறையும் தனிஉடமையற்ற வாழ்வியலும் பழந்தமிழகத்தில் சிறப்பாக நடைமுறையில் இருந்துள்ளது. குறிஞ்சி, முல்லை நிலத்தின் பழந்தமிழின மன்னர்களான வாணான்குறும்பன், குறும்பஆதித்தன், குறும்பகோமான், கோட்டிலிங்குறும்பன் போன்றவர்கள் ஆதிபொதுவுடமைசமூகத்தை நடைமுறைப்படுத்திய இனக்குழுக்களின் தலைவர்கள் இவர்களின் ஆட்சிநிர்வாகம் அம்மக்களின் பண்பாடு, கலை, வாழ்வியல் இவற்றை கற்பதன்மூலமே அவற்றை மீட்டுருவாக்கம் செய்து நடைமுறைப்படுத்தியிருந்தால் தமிழகத்தில் பொதுவுடமை வெற்றிகண்டிருக்கும். ஆனால் தமிழகத்திலுள்ள பொதுவுடமைஇயக்கங்கள், ரஷ்யாவிலிருந்தும், சைனாவிலிருந்தும் நடைமுறை சிந்தாந்தத்தை இறக்குமதி செய்தது. அந்த நெறிகள் இந்த மண்ணிற்கு பொருந்தவில்லை. பொதுவுடமைகட்சிகள் வீழ்ந்தன. மார்க்சியம் என்பது ஒரு வழி அதை மண்ணுக்கு ஏற்றவாறு, மக்களுக்கு ஏற்றவாறு மாற்றி நடைமுறைப்படுத்துவதன்மூலம்தான் வெற்றிக்காணமுடியும். ரஷ்யாவில் லெனினும், சைனாவில் மாவோவும், கியு+பாவில் காஸ்ட்ரோவும் இதைத்தான் நிகழ்த்திக்காட்டினார்கள். 
எனவே பழந்தமிழனத்தின் ஆதிபொதுவுடமைசமூகத்தின் மன்னர்களான வாணான்குறும்பன், குறும்பஆதித்தன், குறும்பகோமான், கோட்டிலிங்ககுறும்பன் ஆகியோர்களின் ஆட்சி முறையினையும் வாழ்வியலையும் பண்பாட்டினையும் தூக்கிப்பிடிப்போம், பொதுவுடமைசித்தாந்தத்தினை பழந்தமிழ்தேசத்திற்கு அடையாளப்படுத்துவோம்.

மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்மிகு. தமிழ்மனோகரன்
மக்கள் சமூகநீதி பேரவை

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!