குறும்பர் இன மக்களின் மொழி குறும்ப மொழி

குறும்ப மொழி,
நம்மை போல உள்ள தோடா இருளா படுகா சவுராஸ்ட்ரா போன்றவர்கள் அவர்கள் மொழி அழியாமல் அப்படியே தற்காத்து வருகிறார்கள், ஆனால் குறும்பர்களுக்கு அடையாளமாக விளங்குவது குறும்ப மொழி அதற்க்கு பிறகுதான் அவர்களின் கலாச்சாரம் பண்பாடு வகை படுத்தப்படும், குறும்பர்களிடம் குறும்ப மொழி அழிந்து கொண்டே வருகிறது, தேனி, சேலம், கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல் மாவட்டங்களில் குறும்பர்கள் குறும்ப மொழியை அழிய விட வில்லை அங்கு குறும்பர்களுக்கு அடையாளமாக அவர்கள் தமிழுக்கு நிகராக தங்களின் சுற்று பகுதியில் பேசி வருகிறார்கள், புதுக்கோட்டையில் ஒரு சில கிராமங்களில் பேசுகிறார்கள்,  ஒரு மொழி அழிந்தாலே போதும் அவர்களின் கலாச்சாரம் பண்பாடு அதோடே அழிக்கபடும் அதனாலேதான் மற்ற சாதிகளாக மாற்றமடைகிறார்கள்,
எனவே நமது வரலாற்றோடு நமது குறும்ப மொழியை மீட்டு அனைவரும் கற்று கொண்டு தம் சந்ததிகளும் அதை பின்பற்றுவார்கள், நாமும் மகா லச்சுமியை வணங்குகிறோம், வீர பத்திரரை வணங்குகிறோம், அதை மற்றவர்களும்தான் வணங்குகிறார்கள் அது  எப்போதும் ஒரு இனத்துக்கு அடையாளமாகது, ஒரு மொழிதான் இரு இனத்தின் அடையாளம்,
உடனே குறும்ப மொழி வந்தேரி போனேரி மொழி என்ற அச்சமே வேண்டாம், குறும்ப மொழி பேசுபவர்கள் குறும்பர்கள் அதானாலேயே இங்கு பூர்வ பழங்ககுடிகள் என்று கூறுகிறார்கள்,
30 திராவிட மொழிகளில் நம் குறும்ப மொழியும் ஒன்று, அதே மற்ற திராவிட மொழிகளை அவர்கள் அழிக்க விட வில்லை அப்படியே பாது காக்கின்றனர்,
ஆனால் குறும்ப மொழி 70% அழிந்து விட்டது, ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், வரலாறு ஆராய்ச்சிகள் நமது தற்பெருமையை அதிகரிக்கும், அடையாளமில்லாமல் தற்பெருமை கொண்டு எந்த பயனும் இல்லை
என்னுடைய கருத்து  ஆரம்பத்தில் இருந்தே குறும்ப மொழியை மீட்டு அனைவரும் அறிந்து கொண்டாலே நமது இனம் அழியாது, நமது சிறப்பு பண்பாடு கலாச்சாரம் அழியாது, இல்லைனா நம்மலும் மற்ற சாதிகளை போல் தமிழ் நாட்டுல ஒரு சாதி,
எனவே இந்த அடையாளங்களை எல்லாம் மீட்காமல் ஏதேதோ பேசுவதால் ஒரு பயனும் இல்லை, 
யூதர்கள் என்று ஒரு இனம் இருக்கிறது, அவர்கள் மொழி ஹீப்ரூ, 4000 ஆண்டுகள் ஆகி விட்டது அந்த மொழி அழிந்து, ஆனால் யூதர்கள் அந்த ஹீப்ரூ மொழியை உயிர்பித்து, இன்று யூதர்கள் அனைவருக்கும் ஹீப்ரூ மொழி தெரியும், ஹீப்ரூ கற்று கொடுக்க படுகிறது இது ஒரு சின்ன எடுத்துக்காட்டுதான்,, நன்றி நமக்கான அடையாளமாக விளங்கும் நம் மொழியை விட்டு விட்டு
இனத்தை அடையாள படுத்த முடியாது
எனவே நாம் என்னதான் பொருளாதார கல்வி வாழ்க்கை தரத்தில் முன்னேரினாலும், நமது  குறும்ப இனமே மொழியே பேரழிவை நோக்கி சென்று கொண்டு உள்ளது, தேனி, சேலம், கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குறும்பர்கள் தாய் மொழியை மட்டும் கை விட்டால், 100% குறும்பர்கள் என்ற பெயர் சாதி பெயராக மட்டுமே இருக்கும்,
குறும்ப இனம் மொழி அழிந்து விட்டது என்றுதான் அர்த்தம்

Comments

  1. அருமையான தொகுப்பு வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊

    ReplyDelete
  2. உண்மை

    ReplyDelete
  3. 100% விழுக்காடு உண்மையும்கூட இளம் சந்ததியினருக்கு நம் மொழியின் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறி பயிற்றுவிக்க வேண்டும். இஸ்லாமிய மக்கள் மதர்சா என்ற மொழிப் பள்ளிகளை அமைத்துது தங்களது வேதத்தையும் மொழியையும் காப்பது போல நாமும் நம் மொழியை மீட்டுருவாக்கம் செய்திய வேண்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!