குறும்ப மொழி

குறும்ப மொழி :-
ஒரு இனம் என்றால் அதற்க்கு மொழிதான் அடையாளம், அதே போல் குறும்ப இன மக்களுக்கு குறும்ப மொழிதான் இன அடையாளம், ஆனால் பல ஊர்களில் குறும்ப மொழி வழக்கொழிந்து விட்டது,  சில ஊர்களில் பேசி வருகிறார்கள், ஆனால் அது கன்னடம் என்று நினைத்து அறியாமையில் குறும்பர்களின் மொழி கன்னடம் என்றே கூறி வருகிறார்கள், இது மிக பெரிய அறியாமை,  தான் பேசுவது என்ன மொழி என்றே தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் மன நிலமை,  அதாவது குறும்ப மொழி ஒரு தனி மொழி, திராவிட மொழி குடும்பத்தில் கொடவா பிரிவில் குடுகு,குறும்ப மொழிகள் வகை படுத்தப்படும், இந்த இரண்டு மொழிகளுக்கும் சில சில ஒலி வேறுபாடுகள்தான்,
ஆனால் குறும்ப மொழி தெரிந்தாலுமே அதை கன்னடம் என்று கூறி வருகிறோம் அது அறியாமை, நமது குறும்ப மொழி உச்சரிப்பு சொல் பயன்பாட்டை கன்னட உச்சரிப்பு சொல்லாடலுக்கு மாற்றி விடுவதால் குறும்ப மொழி கன்னடத்திற்க்குள் அழிந்து விடும், அதாவது குறும்ப மொழி தமிழ் போல் பல வட்டார வழக்குகளை கொண்டது, தேனி வட்டார வழக்கு வேறு, திண்டுக்கள் வட்டார வழக்கு வேறு,புதுக்கோட்டை வட்டார வழக்கு வேறு, வேலூர்,திருவண்ணாமலை வட்டார வழக்கு வேறு, கோவை வட்டார வழக்கு, சேலம் நாமக்கல் வட்டார வழக்கு, கிருஷ்ண கிரி,தருமபுரி  வட்டார வழக்கு வேறு, இவைகளை கன்னடம் போல் உருவக படுத்தி கன்னட உச்சரிப்பை குறும்ப மொழிக்குள் புகுத்தினால் குறும்ப மொழி கன்னடமாகி விடும்,,,, எனவே நாம் அந்த அந்த ஊர்களில் என்ன உச்சரிப்பில் நமது குறும்ப மொழியை கையால்கிறோமோ பேசுகிறோமோ, அதன் மாதிரியே பேச வேண்டும்,  சரி குறும்பா மொழி எங்குதான் தனி மொழியாக காட்ட படுகிறது அப்படி என்றால், தமிழகத்தில் உள்ள குறும்பர்கள் தமிழுடன் அதன் உச்சரிப்பு அசை சொற்களாக பயன்படுத்துவார்கள், அதே கர்நாடக குறும்பர்கள் கன்னடத்துடன் சேர்த்தே  குறும்ப மொழியை பேசுவார்கள், அப்போது தெளிவான தூய குறும்ப மொழி எங்கே இருக்கும் என்றால் மேற்க்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் குறும்ப பழங்குடிகளிடமே தனி குறும்ப மொழி கிடைக்கும், நாம் விட்ட வழக்கொழிந்த பல ஏராளமான குறும்ப மொழி வார்த்தைகள் கொட்டி கிடக்கும், அதை எடுத்து தொகுத்து இலக்கியம் ஒரு தனிதுவமான குறும்ப மொழியாக காட்டலாம்,
தமிழ் யாரும் இலக்கிய மொழி பேசுவது இல்லை வட்டார மொழிகள் சமஸ்கிருத கலப்பு,  நம்ம குறும்ப மொழிய விட தமிழ் மொழி சிதஞ்சுதான் பேசுராங்க,  சரி முதலில் நாம் குறும்பர்கள் வாழும் ஊர்களில் அவர் அவர்கள் வட்டார மொழியினை கட்டாயம் அவர்களின் சந்ததிகள் தெரியாதவர்கள், மற்றும் தெரியாத மாவட்டங்களில் தெரிந்த மக்கள் கற்று பயிற்று விக்க பட வேண்டும்,,,,,

குறும்ப மொழி எழுத்து:-
குறிப்பாக எந்த மொழிக்கும் மொழி தோன்றிய  உடன் எழுத்து தோன்றுவது இல்லை பேச்சு வழக்காக இருந்து பின்னேதான் எழுத்து வழக்காக மாறும்,  அது போல் தமிழ் கிமு 3 ம் நூற்றாண்டில்தான் வட்டெழுத்து எழுத்துருவாக உருவானது,,, ஆனான பட்ட சமஸ்கிருதத்திற்க்கு எழுத்தே இல்லை சமிக்கையாகவும், ஒலியின் ஏற்ற இறக்க குறியீடகவும் இருந்து வந்தது கிபி 3 ஆம் நூற்றாண்டில்தான் தேவ நகரி குறீயீட்டை பயன்படுத்தி சமஸ்கிருதத்தை எழுதினார்கள், வட இந்தியாவில் பெரும்பாண்மை மொழிகள் எழுத பயன்படுவது தேவ நகரி குறியீடு, சமஸ்கிருதம்,இந்தி,பெங்காலி,மராத்தி,குஜராத்தி ஒடிசி போன்ற மொழிகள் தேவ நகரி எழுத்துக்களை அதன் குறியீடுகளை மாற்றி இல்லை அப்படியே அவர் அவர்கள் மொழியை எழுதுவார்கள்,,,
அது போல் குறும்ப மொழி போன்று துளு,தோடா,இருளா,படுகா, இவர்களுக்கும் மொழிகள் இல்லை கன்னட எழுத்தை இல்லை தமிழ் எழுத்தை தங்கள் மொழியை எழுத பயன்படுத்துவார்கள், அதே போல் கன்னடம் எழுத பயன்படும் எழுத்து பிராமி எழுத்து முறை, நாம் குறும்ப மொழிக்கு எழுத்துக்களை கன்னட மொழியில் இருந்து எடுத்து எழுதலாம், ஆனால் ஒன்றை சிந்திக்க வேண்டும், இந்தியாவில் 1700 மொழிகள் இருக்கிறது, அதில் 10 மொழிகள் விரைவில் அழியும் தருவாயில் இருக்கிறது, அதில் நம் குறும்ப மொழியும் ஒன்று, சிறு அளவே குறும்ப மொழியை அடையாளம் காட்டு கின்றனர் காரணம் மேற்க்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் குறும்ப பழங்குடிகள் இன்றும் எந்த மொழி கலப்பில்லாமல் இயங்குவதால் அந்த குறிப்பும் வருகிறது இல்லை குறும்ப மொழி அழிந்த மொழியில் பட்டியல் படுத்தப்படும்,,,
எனவே கன்னட எழுத்துக்களை கையால்வதால் விரைவில் நாம் மேலும் நாம் பேசும் மொழி கன்னடம் என்று கன்னடத்தை கற்று குறும்ப மொழியை அழித்து விடுவோம், ஆகவே,
வட இந்திய மொழிகள் எழுத பயன்படும் தேவ நகரி எழுத்து முறையை குறீயீடுகளை மாற்றி நம் குறும்ப மொழிக்கு எழுத்துருக்களை உருவாக்க வேண்டும்,,  இதற்க்கு ஒரு அறிஞர்கள் குழு வேண்டும், சரி எழுத்துக்களை உருவாக்கியாச்சு, அதை எப்படி புகுத்துவது,
நாம் முதலில் வட்டார வழக்குகளை கட்டாய பேச்சுவழக்காக மாற்றினால் 5 வருடத்தில் எழுத்து வழக்கு பேச்சு வழக்க இரண்டையும் புகுத்தலாம்,
ஆகவே மொழி அழிவில் இருந்து விரைவில் மீளலாம், மொழியை மீட்பது சாத்தியமா என்று சிலருக்கு தோன்றும், ஆமாம் ஹீப்ரு என்று ஒரு மொழி அதை பெரும்பாண்மையானவர்கள் உலகத்தின் முதல் மொழி என்பார்கள், யூதர்கள் பேசி வந்த மொழி, அது 4000 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டது, ஆனால் யூதர்கள் தனி இனமாக காட்ட 4000 வருடத்திற்க்கு முன்பு அழிந்த ஹீப்ரூ மொழியை மீண்டும் உருவாக்கி யூதர்கள் அனைவருக்கும் கற்று கொடுத்து புதுமை படுத்தினார்கள் இன்று இஸ்ரேலில் யூதர்கள் அனைவருக்கும் ஹீப்ரூ மொழி தெரியும், இது வெறும் 10 ஆண்டுகளில் சாத்தியமானது,
நமது குறும்ப மொழி ஹீப்ருவை போல் முழுவதுமாக அழியவில்லை, ஒரு இடத்தில் பேசுகிறார்கள் ஒரு இடத்தில் பேச வில்லை அழிந்து விட்டது, அந்த மொழியை பரவலாக்கினாலே எளிதில் குறும்ப மொழி மீண்டு விடும்,,,,

Comments

  1. அருமையான தகவல் அனைவரும் விரைவில் கற்றுக்கொள்ள வழிவகுக்கவும்

    ReplyDelete
  2. குறும்பர் எல்லோரும் குறும்பா மொழி பேசினால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாளத்திற்கு அடுத்து ஐந்தாவது பெரிய மொழி யாக உருவெடுக்கும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!