குறும்பர் இன மக்களுக்கு தேவை விழிப்புணர்ச்சி

உண்மைகள் உறங்குவதற்கும் அசத்தியமும் அட்டூழியமும் அதிகாரங்களில் வீற்றிருப்பதற்கும் அநியாயமாக குறும்பர் சமூகம் அடக்கி ஒடுக்கப்படுவதற்கும் தங்களது உரிமைகள் என்ன என்பதைக் குறித்தும் அதனை அடைவதற்கான வழிமுறைகள் யாவை என்பதைக் குறித்தும் போதிய அறிவின்றியும் அதற்காக ஒன்றுபட்டு போராடும் போராட்ட குணமின்றியும் இருப்பதே குறும்பர் சமூகம் பின்தங்கிக் கிடப்பதற்கு முழு முதற்காரணமாகும்.
விழிப்புணர்ச்சி என்பதும் ஒன்றிணைந்து உரிமைக்காக உழைத்தல் என்பதும் ஒன்றோடொன்று கலந்ததாகும். இரண்டில் எந்த ஒன்றில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் உண்மை உறங்கும்; அக்கிரமம் கோலோச்சும்; உரிமைக்குரியவர் அநியாயமாக அடக்கி ஒடுக்கப்படுவர். இவ்விரண்டில் இரண்டுமே இல்லாதிருந்தால்.....?
80களிலிருந்து 2017 க்கு இடைப்பட்ட 37 ஆண்டுகால இடைவெளியில் குறும்பர் நிலையினை எடுத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட மேற்கண்ட இரண்டுமே இல்லாமல்,  இதனைத் தெளிவாக படம் பிடித்துக் காண்பித்ததுதான் குறும்பர்கள் அரசியல், அதிகார, கல்வி, பொருளாதார நிலை குறித்த எந்த வகையான முன்னேற்றமும் ஏற்படவில்லை
இந்திய அரசியல்-அதிகார அமைப்புக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது போன்று, தங்களை எவர் ஆண்டால் என்ன? யார் அதிகாரத்தில் இருந்தால் என்ன என்று, குறும்பர் சமூகம் அசட்டையாக இருந்ததன் விளைவு, குறும்பர் இன மக்களின் வரலாறு மறைந்து கொண்டிருக்கிறது.
காலம் கடந்தெனினும் இன்று, மாநிலங்களிலிருந்து தேசியம்வரை, அரசியல் விழிப்புணர்ச்சியும் அதனை அடைவதற்கான வழிமுறைகளைக் குறித்துச் சிந்திக்கும் போக்கும் சமூகத்தில் கொஞ்சங் கொஞ்சமாக வேரூன்றி வருகிறது.
குறும்பர்கள்அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. அதனை அடைய, "அரசியலில் குறும்பர்கள் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டால் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட இயலும்!". இதனை ஒரு தாரக மந்திரமாகக் கையில் எடுத்துக் கொண்டு செயலாற்ற இந்த அமைப்புகள் முன்வர வேன்டும். என்றாலே உரிமைகளை மீட்டெடுப்பதிலும் அடக்கி ஒடுக்கப் படுவதிலிருந்து சமுதாயத்தை முழுமையாகப் பாதுகாப்பதிலும் வெற்றி பெற இயலும்.
இந்தத் தாரக மந்திரம் சரியாகப் பின்பற்றப் படுமானால், தமிழக அரசியல் கட்சிகள் பெருமளவில் குறும்பர்களை அணுகி மன்றாட வேண்டிய நிலையினை குறும்பர் சமுதாயத்தால் ஏற்படுத்த இயலும்.
தமிழகத்தில் குறும்பர் மக்கள்தொகை மொத்த மக்கள் தொகையில் 3% என அரசு பதிவேடு கூறுகிறது.
அரசியல் ரீதியில் குறும்பர்கள் ஒன்றுபட்டு ஓரணியில் நின்றால் தமிழக அரசியலை நிர்ணயிக்கக்கூடிய பெரும் சக்தியாக குறும்பர் விளங்க முடியும்.
தமிழக குறும்பர்களின் சக்தி என்னவென்பதைத் அதிமுக,திமுகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் நன்கு அறிவர்.
குறும்பர் சங்கம், அமைப்புக்கள் என்று ஏகத்திற்கு தமிழகத்தில் பெருகினாலும், அவைகூடத் தம்மை வளர்த்து விட்ட சாதாரண பாமர குறும்பர்களுக்கு அரசு மூலம் கிடைக்கக் கூடிய உரிமைகளை, பலன்களை எப்படி வாங்கித் தருவது? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மாநில அளவில் சங்கம் ரீதியில் குறும்பர்கள் பிரிந்து கிடப்பதே கடந்த 60 ஆண்டுகளாக மோசமான பின்தங்கியிருக்கும் சமுதாயமாக குறும்பர் சமுதாயத்தை இன்னும் வைத்திருக்கிறது.
எனவே குறும்பர்கள் குறைந்தபட்சம் அரசியல் ரீதியில் ஒன்றுபட்டு மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
குறும்பர் சமுதாய இயக்கங்கள், அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரீதியிலாக கொள்கை கட்டமைப்பினைக் கொண்டிருந்தாலும் தொலைநோக்குப்பார்வையுடன் குறும்பர் சமுதாயம் செல்ல வேண்டிய பாதையினை நிர்ணயிக்கும் அரசியல் சக்தியாக உருவெடுக்க மாநில அளவில் ஒன்றிணைந்து ஒரே கட்சியாக வெளிவர வேண்டும்.
வெற்றியைத் தரக்கூடியவன் வல்ல இறைவன். அதற்கான அணுகூலங்களை அமைக்க குறும்பர் சமுதாயம் ஒன்றுபடட்டும்!

Comments

  1. உங்கள் அனைத்து அம்சங்கள் குறும்பர் முநினாற்றதிற்கணது. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    ReplyDelete
  2. Yenudaya asayum athuthan muthal mootha makkal poruppil irukka venndum

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!