இந்தியாவில் மனிதம்...

இந்தியாவில் மனிதம்...
வரலாறு சொல்லும் பாடம் – 4
ஆதி இந்தியர் யார்?
ஆப்பிரிக்கர் இந்தியாவுக்கு வருவதற்கு முன் இமயம் தொடங்கி தெற்கே இலங்கை வரை மிக மிகத் தொன்மையான கற்கால மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். (சான்று ஏற்கனவே தரப்பட்டு விட்டது.)
வரலாற்றின் வகைப்படுத்தலின் படி அந்த மக்கள்தாம் ஆதித் தென்திசை வாழ் ஆசிய மக்களாக இருக்க வேண்டும். இம் மக்கள் இருண்ட கறுப்பராக இருந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் இமயமலையை அடுத்துள்ள பகுதிகளில் வாழ்ந்த மக்கள் கறுப்பராக இருக்க முழுமையாகவே வாய்ப்பு இல்லை. காரணம், ஆப்பிரிக்க காலநிலை வேறு, இந்திய அமைவிடம், மண்வளம், நீர்வளம் மற்றும் காலநிலை வேறு.
படம்: ஹிமாச்சல் பிரதேச பூர்வக் குடி
படம்: சதீஸ்கர் பூர்வக்குடி
படம்: நேபாளப் பூர்வக் குடி 1, 2, 3, 4, 5, 6
(உடல் தோற்றத்தில் மண், நீர், காலநிலை செல்வாக்கு செலுத்தும் என்று புவியியல் கூறுகிறது)
ஆதித் தென்திசை வாழ் ஆசிய மக்களோடு ஆப்பிரிக்கர் வந்து கலந்த விளைவே இந்தியாவில் இருக்கும் எல்லா பூர்வக் குடிகளின் மரபணுவும் தமிழகத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்க வழித் தோன்றலான விருமாண்டியின் மரபணுக் கணக்கோடு ஒத்துப் போகவில்லை. தமிழகத்தில் இருக்கும் பூர்வக் குடிகள் பலவற்றோடு கூட விருமாண்டியின் மரபணுக் கணக்கு ஒத்துப் போகவில்லை. ஐந்து விழுக்காடுதான் காட்டுகிறது.
இந்த ஐந்து விழுக்காட்டுக் கணக்கு ஆப்பிரிக்க – இந்திய கலப்புக்கு எடுத்துக் காட்டு.
“தென் இந்தியாவில் ஆதித் தென் திசை வாழ் ஆசிய இனத்தவர் புறச் சாதிகள் என்று அழைக்கப்படும் மக்களுடன் இணைந்து கொண்டனர்.
காட்டு இனங்களாக விளங்கும் செஞ்சூக்கள், மலையர், காடர், குறும்பர், எருவர் ஆகிய இனத்தவரின் தோற்றத்திற்குக் காரணமாக ஆதித் தென் திசை வாழ் ஆசிய இனம் அமைகிறது.” பக்கம் 64 தென் இந்திய வரலாறு – நீலகண்டசாஸ்திரி)
“மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப் பட்ட நடனமாடும் நங்கையின் வெங்கல உருவம் ஐயத்திற்கிடமின்றி ஆதித் தென் திசைவாழ் ஆசிய இன அம்சங்களுடன் காணப்படுகிறது. நடன மாது தலையில் சூடியிருக்கும் அணிகலன், மத்திய இந்தியாவிலும் தென் இந்தியாவிலும் காடுகளில் இப்பொழும் வாழும் ஆதித் தென் திசை வாழ் ஆசிய இனத்தவர்கள் தலையில் சூடும் அணி கலங்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றன.” (பக்கம் 64 தென் இந்திய வரலாறு – நீலகண்ட சாஸ்திரி)
வரலாற்று அடிப்படையில் பார்க்கும் போது உண்மையில் சிந்துவெளி நாகரிகம், ஆப்பிரிக்க – இந்திய கலப்புடையது.
ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு:
ஆப்பிரிக்க மக்கள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடல்வழியாகவோ தரைவழியாகவோ ஆஸ்திரேலியா வரை பரந்து விட்டனர்.
சான்று – 1
மரபணு ஆய்வு:- ஆப்பிரிக்கர், இந்திய திராவிடர் மற்றும் ஆஸ்திரேலிய கறுப்பினப் பூர்வக் குடிகளின் மரபணு ஒத்த இயல்புடையது.
(மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் உயிரியல் விஞ்ஞான பீடத் தலைவர் பேராசிரியர் ஆர்.எம்.பச்சப்பன்; தேசிய புவியியல் (National Geographic) அமைப்பின் சார்பாக நடாத்திய ஆய்வின் முடிவையும் அதோடு தொடர்பு பட்ட ஆஸ்திரேலிய பூர்வக் குடிகளின் செய்தியையும் பார்க்க)   
சான்று - 2
ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்த மக்களை வரலாற்று ஆசிரியர்கள் பொதுவாக “திராவிடர்” என்று குறிப்பிடுகின்றனர்.
“மேற்கில் இருந்து கடல் மார்க்கமாக தென் இந்தியாவுக்கு வந்த பெரிய கற்கால மனிதரே திராவிட மொழி பேசியவர்களாவர் எனவும் இவர்கள் குடி பெயர்ந்து வரும் போது கரையோரங்களில் சில குடியேற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் இத்தகைய குடியேற்றங்களின் விளைவே கராச்சிக்கு கிட்டக் காணப்படும் பெரிய கற்காலச் சான்றுகளும் பலுசிஸ்தானத்தின் பிராகுவியுமாகும் – ஆய்வாளர் பியூரர் கெய்மந்தோவ் (பக்கம் 70 தென் இந்திய வரலாறு – நீலகண்ட சாஸ்திரி)
பலுசிஸ்தான் பாகிஸ்தானில்  உள்ளது.
சான்று - 3
திராவிடரின் மூல மொழியான தமிழும் தமிழ்க் கடவுளும் இன்றைக்கும் ஆப்பிரிக்காவில்தான் இருக்கின்றன. ஆப்பிரிக்காவின் கிழக்கு தொடங்கி மேற்கு வரையான பழங்குடி மொழிகள் தமிழை ஒத்தவை. கென்யாவின் கிகுயூ மக்களின் முழுமுதற்கடவுள் “முருங்கு”. இக் கடவுள் மலையில் வாசம் செய்கிறார். தென் நாட்டுத் தமிழரின் முருகனும் மலையில்தான் வீற்றிருக்கிறார்.

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!