நம்பியாண்டார் நம்பிகள் - திருத்தொண்டர் திருவந்தாதி குறும்பர்

நம்பியாண்டார் நம்பிகள் - திருத்தொண்டர் திருவந்தாதி
பாடல் எண் : 28
சிறைநன் புனல்திரு நாவலூ
ராளி செழுங்கயிலைக்
கிறைநன் கழல்நாளை யெய்து
மிவனருள் போற்றவின்றே
பிறைநன் முடிய னடியடை
வேனென் றுடல்பிரிந்தான்
பிறைநன் மலர்த்தார் மிழலைக்
குறும்ப னெனுநம்பியே.
பொழிப்புரை :
பொழிப்புரையை எழுதவில்லை
குறிப்புரை :
நாவலூராளி, சுந்தரமூர்த்தி நாயனார்.
`அவர் நாளைக் கயிலை செல்லப்போகிறார்` என்பதை இவர் தம் யோகக் காட்சியால் அறிந்து முன்னாளே யோகத்தால் உடலை விட்டுப் பிரிந்து கயிலை சேர்ந்தார்.
பெருமிழலை, ஊர்.
குறும்பர் - சிற்றரசர்.
`குறும்பர்` என்பது
`சிற்றரசர்` எனப் பொருள் தரும்.
எனினும், `சிர்றசராய் இருப்போர் தனியொரு மரபினர் அல்லர் என்பதனாற்போலும் இந்நாயனாரும் மரபறியா அடியார்களுள் ஒருவராகச் சொல்லப் பட்டார்.

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!