சங்க இலக்கியங்கள்

சங்க இலக்கியங்கள்
சங்க இலக்கியங்கள் காலத்தாலும் பொருளமைப் பாலும் பழமையானவை. சங்க கால நாகரிகமும் பண்பாடும் மிகச் சிறந்தவை என்பதற்குச் சங்க இலக்கியமே சான்றாகும்.
படிப்படியாக வளர்ந்து வந்த தமிழர்களின் உயர்ந்த பண்பாட்டைச் சங்க இலக்கியங்களின் வழியாக அறியலாம். அக வாழ்விலும் புற வாழ்விலும் சங்கத் தமிழர் சிறந்து விளங்கினர் என்பதைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது.
“கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடி.”1
சமுதாயம் என்பது பலரும் கூடி வாழும் ஓர் அமைப்பாகும். மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டது. பல்வேறு வண்ணங்களால் ஆன மலர்கள் ஒன்றிணைந்து மாலையாவது போல மதத்தால், இனத்தால், மொழியால் வேறுபட்டவர்கள் ஒன்றி ணைந்து வேற்றுமைகளுக்குள் ஒற்றுமை கண்டு வாழ்வதே சமுதாயம்.
“தனிமனித நிலையில் இருந்து படிப்படியாக மன அளவில் வளர்ச்சி பெற்று ஆண் பெண் இணைந்து சந்ததிகளை உருவாக்கிப் பின்னாளில் கூட்டுக் குடும்பமாக மாற்றமடைந்து மிகப்பெரிய சமூக அமைப்பிற்கு வித்திட்டது எனலாம்.”2
என்னும் கருத்து சமுதாய அமைப்பை விளக்குகிறது.
சமூகம் என்பது செயல்பாடுள்ள ஒரு குழுவாகும். பல மனிதர்களைக் கொண்டு சமூகம் உருவாக்கப் பட்டிருப்பினும் சமூக அமைப்பில் தனிமனித நலன் கள் சமூக நலன்களுக்கு உட்பட்டு அமைகின்றன. சமூகத்தின் ஒவ்வொரு செயல்பாடும் அச்சமூக உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் பிரித்து அளிக்கப் படுகிறது. இத்தன்மைகளால் கூட்டமைப்பின் நன்மைக்காக ஒவ்வொருவரும் கடமையாற்றவும் கொண்டும் கொடுத்தும் வாழ்கின்ற மனப்பான் மையைப் பெற வேண்டும் என்பதே சாலச்சிறந்தது.
பாகுபாடு
சமூகங்கள் தோன்றுதலும் வளர்தலும் அழி தலுமான செயல்கள் வரலாற்றில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. சமூகத்தின் வளர்ச்சிக்கும் தேய்வுக் கும் அதன் உறுப்பினர்களே காரணமாவர்.
சங்க கால மக்கள் தாங்கள் செய்யும் தொழிலையே நம்பி இருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரு தொழில் துணையாக இருந்தது. குறிஞ்சி நிலத் திலே குறவர், முல்லை நிலத்திலே இடையர், மருத நிலத்திலே உழவர். நெய்தல் நிலத்திலே பரதவர் என நில அமைப்பிலே நிபந்தனையின்றிக் கிடைத்த தைக் கொண்டு வாழ்க்கை அமைத்தனர்.
“அந்தணர், அரசர், அளவர், இடையர், இயவர், உப்பு வணிகர், உழவர், எயிற்றியர், கடம்பர், கடை சியர், கம்மியர், களமர், கிணைஞர், கிணைமகள், குறவர், குறத்தியர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகன், நுளையர், பரதவர், பறையர், பாடினி, பாணர், பாணிச்சி, புலையர், பூண்செய் கொல்லர், பூவிலைப் பெண்டு, பொதுவிலை மகளிர், பொருநர், கடையர், மழவர், மறத்தியர், மறவர், மோரியர், யவணர், யாழ்ப் புலவர், யானைப்பாகர், யானை வேட்டுவர், வட வடுகர், வணிகர், வலைஞர், விலைப்பெண்டிர், வேடர்”3 எனப் பல தொழிற்பிரிவுகள் அக்காலத்தில் இருந்ததை அறிய முடிகிறது. மேலும் அவர்கள் செய்த தொழிலின் அடிப்படையில் அவர்களின் பெயர்கள் அமைந்துள்ளமையை அறியலாம்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்களில் வாழ்ந்த குறவர், இடையர், உழவர், பரதவர், எயினர் ஆகியோர் தொழிலில் சிறந்து விளங்கினர். அவர்கள் செய்த தச்சுத் தொழில், நெசவுத் தொழில், துணி துவைத்தல், குயவுத் தொழில், அணிகலன்கள் செய்யும் தொழில் ஆகிய தொழில்கள் சங்கச் சமூகப் பாகுபாட்டில் காணப்படுகின்றன.எழுத்தாளர்: ச.ஜெயசுதா
தாய்ப் பிரிவு: உங்கள் நூலகம்
பிரிவு: மே2012

Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!