பழந்தமிழர் குறும்பர் இனம் முல்லை, குறிஞ்சி, பாலை, நிலத்து சொந்தகரர்கள்

பழந்தமிழர் குறும்பர் இனம் முல்லை, குறிஞ்சி, பாலை,நிலத்து சொந்தகரகள்  இன்று வந்தேறிகளா அவர்களை வந்தேறி ஆக்கியது வரலாற்று பிழை
+++++++++++++++++++++++++++++++++
##############################
ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இலக்கண - இலக்கியங்களைக் கற்க விரும்பினால் முதல் முயற்சியாக "நிகண்டு' நூல்களை மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கும். இன்று "அகராதிகள்' என அழைக்கப்பெறும் சொற்பொருள் விளக்கம் கூறும் நூல்களே அன்று "நிகண்டுகள்' எனப்பெற்றன. அவை செய்யுளிலேயே எழுதப்பெற்றிருக்கும். இந்நிகண்டு நூல்களே
இலக்கண - இலக்கியங்களைக் கற்பதற்குரிய கருவி நூல்களாகும்.
அவ்வகையில் மாணாக்கர்கள் மனனம் செய்த நிகண்டு நூல்களாக சூடாமணி நிகண்டு, திவாகர நிகண்டு, பிங்கில நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, அகராதி நிகண்டு, அரும்பொருள் விளக்க நிகண்டு, பொதிகை நிகண்டு முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
இவ்வரிசையில் அமைந்ததுதான் "நாநார்த்த தீபிகை' என்னும் நிகண்டு நூலாகும். இந்நூல் 1102 விருத்தப்பாக்களால் ஆக்கப்பெற்றுள்ளது. 5452 சொற்களுக்குப் பொருள் கூறப்பட்டுள்ளது. இந்நூல் ஒரு சொற் பல்பொருள் உரைக்கும் நிகண்டு நூலாகும். இந்நிகண்டு நூலை திருநெல்வேலியைச் சார்ந்த கவிராயர் முத்துசுவாமிப்பிள்ளை என்பவர் எழுதியுள்ளார். இவர், திருநெல்வேலிக்கு வந்திருந்த "ஸார்ஜன்ஹ்' உள்ளிட்ட ஐரோப்பிய பாதிரிமார்களுக்கும், திருவாவடுதுறை மடத்தின் சந்நிதானமாக விளங்கிய ஸ்ரீசுப்பிரமணிய தேசிகருக்கும் தமிழ் கற்றுத் தந்தவர் என அறியப்படுகிறார். முத்துசுவாமிப்பிள்ளை தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, உருது முதலிய மொழிகளைக் கற்றறிந்துள்ளார் என்பது "நாநார்த்த தீபிகை'யின் வழி தெரியவருகிறது.
இந்நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்டிதராய் விளங்கிய சு.அனவரதவிநாயகம் பிள்ளையாவார். 1936-இல் இத்தீபிகை பதிப்பிக்கப்பட்டுள்ளது. ""இப்பதிப்பிற்கு, நூலாசிரியர் மகன் சோமசுந்தரம் பிள்ளையவர்கள் கையால் எழுதிய காகிதப் பிரதியே
ஆதாரமாகும்'' எனப் பதிப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ""அவர் இந்நூலை பூர்த்தி செய்யாது சிறிது குறையாய் விட்டிருந்தாரோ என்றூகித்தற்கு நியாயஞ்சிலவுண்டு. 149-வது செய்யுளிற் பொருட்பிறழ்ச்சியும், 229, 382-வது செய்யுள்கள் பொருள் தெளிவின்றியிருப்பதும் 159-வது செய்யுளில் ஒரு சொல் ஒரு பொருளோடிருத்தலும், அவரம், ஏட்டை, கடமை, காயல், கிரந்தம், சீவநீ, நேயம், பிரதேசம், மைதுனம் என்னும் சொற்கள் இரண்டு இடங்களில் பொருளுரைக்கப்பட்டிருந்தாலும், ஆசிரியருக்குத் தாமியற்றிய செய்யுள்களை மீண்டும் நோக்கித் திருத்துவதற்கு அவகாசமில்லாது போயிற்றோ என்றும், செய்யுள்களிற் சில ஆசிரியர் வைத்துப்போன குறிப்புகளைக் கொண்டு பிறர் இயற்றியனவோ என்றும் சங்கையுறச் செய்யும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பதிப்பில் 689 பக்கங்களைக் கொண்டிருக்கக்கூடிய இந்நூல் எப்பொழுது எழுதப்பெற்றது என்ற குறிப்பின்றி உள்ளது. பறந்தலை, பறம்பு, குறிஞ்சி, குறும்பு, குறும்பொறை ஆகிய சொற்களுக்குப் பொருள் கூறும் விருத்தப்பாடல் ஒன்று வருமாறு:

""பறந்தலை பிணஞ்சேர் காடு செம்புலமாம்
பறம்பென்ப பருப்பதங்கொங்கை
குறிஞ்சி செம்முள்ளி போர்மரமோர்பண்
குன்றுசார் நிலத்தொடோ ரிராகம்
குறும்பு பொல்லாங்கு கொடுஞ்சமம்
பாலை நிலத்தினூர் குறும்பரணிருக்கை
குறும்பொறை குறிஞ்சி நிலத்தொடந் நிலத்தூர்
குன்றுகா டென்னநாற் பெயரே'' (செய்.1041)

இச்செய்யுள் காட்டும் பொருள் வருமாறு:
பறந்தலை - பிணஞ்சேர்காடு, பொருகளம்.
பறம்பு - மலை, கொங்கை.
குறிஞ்சி - செம்முள்ளி, ஓர்மரம், ஓர்பண், குன்றுசார் நிலம், ஓர் இராகம்.
குறும்பு - பொல்லாங்கு, போர், பாலை நிலத்தூர், குறும்பர் அரணிருக்கை.
குறும்பொறை - குறிஞ்சி நிலம், குறிஞ்சி நிலத்தூர், குன்று, காடு.
இதுபோன்ற அரிய நூல்கள் மறுபதிப்பு செய்யப்பெறுவது இன்றைய இன்றியமையாத் தேவையாகும். அதுமட்டுமல்லாமல் தமிழ் மொழியின் சொல்லாராய்ச்சிக்கும், சொல்வளத்திற்கும் அப்பதிப்பு பெரிதும் பயன்தரும்

############################################################

பெரியபுராணம்-VII

பாடல் எண் :3798

சென்ற திசையிற் சிவனடியார் சிறப்பி னோடு மெதிர்கொள்ளக்
குன்றுங் கானு முடைக்குறும்ப ரிடங்க டோறுங் குறைவறுப்பத்
துன்று முரம்புங் கான்யாறுந் துறுகற் சுரமும் பலகடந்து
வென்றி விடையா ரிடம்பலவு மேவிப் பணிந்து செல்கின்றார்.51(இ-ள்)சென்ற....எதிர்கொள்ள - போயின திசையில் எங்கும் சிவனடியார்கள் வந்து எதிர்கொள்ள; குன்றும்....குறைவறுப்ப - குன்றுகளையும் காடுகளையும் தம் இடமாகக் கொண்டு ஆளும் குறுநில மன்னர்கள் அவ்வவரிடங்கள் தோறும் தமக்கு வேண்டும் குறைகளை யெல்லாம் நிரப்பி உபசரிக்க; துன்றும்...பல கடந்து - பரல்கள் நெருங்கிய பாலை நிலங்களும் காட்டாறுகளும் துன்பம் தரும் கற்கள் நிரம்பிய கல் அதர்களும் ஆகிய இவை பலவற்றையும் கடந்து சென்று; வென்றி...செல்கின்றார் - வெற்றி பொருந்திய இடபத்தையுடைய இறைவர் வெளிப்பட எழுந்தருளிய இடங்கள் பலவற்றையும் சென்று பணிந்து போகின்றாராய், 
(வி-ரை) சென்ற......எதிர் கொள்ள - சென்றதிசை - “புலியூர்ப் பொன்னம்பலம் இறைஞ்சி - வன்றொண்டரையும் காண்பன்Ó (3792) என்று விரும்பி அத்திசையினை நோக்கியே எழுந்தருளினாராதலின் சென்ற திசை என்று ஒருமையிற் கூறினார்.
சிவனடியார்......எதிர்கொள்ள - மன்னர் என்ற நிலையினன்றிப் பேரடியார் எனக் கண்டு சிவனடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ள என்க. 
குறும்பர் - குறு நில ஆட்சியுடைய சிறு மன்னர்கள். குறும்பு - ஆறலைத்தல் முதலியவை எனக்கொண்டு, வேடர்கள் என்பாருமுண்டு,
குன்றும் கானும் உடைக் குறும்பர் - குன்றுகளையும் கானங்களையும் தமக்கு உரிய வாழ்விடமாகக் கொண்டு அங்கங்கும் ஆட்சி புரியும் அவ்வத் தலைவர்கள்; பொத்தப்பி நாட்டில் உடுப்பூரில் வேடர் தலைவனான நாகனது தலைமையினை “உங்கள் வரையாட்சிÓ என்பதும், அவ்வாறு வரும் பிறவும் காண்க; உடை - இவ்விடங்களைத் தம் உடைமையாக் கொண்டவர்; வேறு அரசர் முதலிய எவருடைய ஆட்சியும் செயலும் இங்குச் செல்லா என்பது ; உருஷியா நாட்டு மலைகளும், தென் ஆப்பிரிக்கா நாட்டுக் காடுகளும், பிறவும் அங்கங்கு வாழும் தலைவர்க்கு ஒப்பற்ற அரண்களாய் விளங்குதல் இந்நாட் பெரும்போர்களிலும் கண்ட உண்மை; குறும்பர் - குறுநிலங்களாகிய தமது எல்லை யளவில் அமைவர்; குறும்பு - இவர்களது தொழில்களாகிய ஆறலைத்தல் அயற்புலங் கவர்தல் முதலிய சிறு குற்றங்கள் என்ற குறிப்பும் பெறக்கூரிய கவிநயம் கண்டுகொள்க. “ஆறலைத் துண்ணும் வேட ரயற்புலங் கவர்ந்து கொண்டÓ (655). 
இடங்கள் தோறும் - இத்தகைய இடங்கள் பற்பலவற்றையும் இடையிற் கடந்து சென்ற நிலை குறித்தது.
குறைவறுப்ப - பயண உதவிக்கு வேண்டிய பொருள்களாலும் செயல்களாலும் குறைவு நேராமற் செய்ய; “பாண்டிமா தேவி யார்மெய்க் குலச்சிறையார் குறைவறுத்துப் போற்றிச் செல்லÓ (2789). 
துன்று முரம்பு - துன்றுதல் - செறிதல்; இங்குப் பரல் செறிதல் குறித்தது; முரம்பு - பாலை நிலம்; மேட்டு நிலங்கள் என்றலுமாம்; துறு கற்சுரம் - துறு - செல்லுதற்கியலாதபடி வருத்தம் விளைக்கும்; கற்சுரம் - கற்கள் மிகுதியாக உடைய காடுகள். கல்லாங்காடு என்பர்; பல - இவை பற்பலவும் இடையிட்டிருந்தன என்பது.
வென்றி விடையார் இடம்பலவும் மேவி - இப்பதிகள் நாயனார் செல்லும் வழியில் இடையிட்டவை. இவை ஆளுடைய பிள்ளையார் - ஆளுடைய அரசுகள் - ஆளுடைய நம்பிகள் சரிதங்களால் அறியக் கிடத்தலின் இங்கு விரித்துக் கூறா தமைந்தார்; திருப்பைஞ்ஞீலியி னின்றும் ஆளுடைய பிள்ளையாரும், திருவீங்கோய் மலையினின்றும் ஆளுடைய நம்பிகளும் காவிரியைக் கடந்து அதன் தென்கரையால் கொங்கினிடை எழுந்தருளினர். இங்குக் கூறிய இடம்பல என்றவை பொன்னித்தென் கரையிற் சாரும் அளவும் கொங்கு நாட்டில் உள்ள திருக்கொடுமுடி - திருக் கருவூ ரானிலை - முதலாயின என்பது கருதப்படும். காவிரித் தென்கரை சேர்ந்து வடகரை ஏறிச் சென்ற நிலைகளை மேல்வரும் பாட்டிற் கூறுவார்.
பணிந்து செல்கின்றார் - தில்லையினைக் குறித்துச் சென்றாராயினும் இடைப்பட்ட பதிகளிலும் வணங்கிச் செல்லும் மரபு பற்றி வணங்கினர்; செல்கின்றார் - நிகழ்காலம், வழிச் செலவு ஆர்வமேலீட்டினால் இடையீடின்றி நிகழ்ந்து செல்லும் நிலை குறித்தது.

###################₹########

சேக்கிழார்

துறைமுகப் பட்டினங்கள். கொற்கை முத்துக்குப் பெயர் பெற்ற பண்டைத் துறைமுக நகரம். இந்நாட்டை நீண்ட காலமாக ஆண்டு வந்தவர் பாண்டியர் என்பவர். நடு நாடு. சோழ நாட்டிற்கு வடக்கே உள்ள தென் ஆர்க்காடு மாவட்டத்தின் பெரும் பகுதி நடு நாடு எனப் பெயர் பெற்றிருந்தது. அந்நாட்டில் பல சிற்றரசர் இருந்து, திருக்கோவலூர், திருநாவலூர் முதலிய ஊர்களைச் சூழவுள்ள நிலப்பகுதிகளை ஆண்டு வந்தனர். அந்நாடுகள் திருமுனைப்பாடி நாடு, மலையம்ானாடு எனப் பெயர்கள் பெற்றிருந்தன. தொண்டிை நாடு. இது செங்கற்பட்டு, வடஆர்க்காடு, சித்தூர் முதலிய் மாவட்டங்களையும் தென் ஆர்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியையும் தன் அகத்தே கொண்டது. இதில் சிறப்புற்று விளங்கிய தலைநகரம் காஞ்சிபுரம் என்பது. இதன் சிறந்த துறைமுகப் பட்டினம் மல்லை (மகாபலிபுரம்) என்பது இந்நாட்டிற் சிறப்புடைய பெரிய ஆறு பாலாறு என்பது இந்நாட்டில் மலைகள் மிகுதியாக உண்டு. வேங்கடம், காளத்தி, நகரி, நாகலாபுரம், இராமகிரி, வேலூர், செங்கற்பட்டு, சோழ சிங்கபுரம் முதலிய பல இடங்களிலும் மலைத் தொடர்கள், தனி மலைகள் குன்றுகள் இவற்றைக்காணலாம். இந்நாட்டின் பல பகுதிகளில் பெருங் காடுகளும் சிறிய காடுகளும் இருக்கின்றன. ஆங்காங்கு ஒன்றும் விளையாத பாலை நிலங்கள் காண்கின்றன. இவற்றுக்கு இடையே கண்ணுக்கு விருந்தளிக்கும் பசிய வயல்கள் காட்சி அளிக்கின்றன. சுருங்க கூறின் தொண்டை நாட்டில் நானிலத்து ஐந்திணை வளங்களையும் கண்டு களிக்கலாம். - - . . .” பெயர்க் கானங்கள்: 1.”தொண்டை நாடு முதலில் 'குறும்பர் நிலம் எனப் பெயர் பெற்றிருந்தது. குறும்பர்

########################


:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்


காப்புப் பருவம்


151 பூதலம் சூதம் முதலாக நின்ற பொதுப்பிற் சந்த பாதவம் போல்மிக்க வேளாளர் தங்கிய பான்மையினால் ஆதவம் சூழ்தரு பல்கோடி தேசம் அனைத்தினும் மாதவம் செய்ததன் ருேதமிழ் சேர்தொண்ட மண்டலமே என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது. தொண்டை நாட்டின் சிறப்பைச் சங்க நூலாம் பத்துப் பாட்டில் ஒரு பாடலாகிய பெரும்பாளுற்றும் படையில், அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக் கைப்பொருள் வெளவும் களவேர் வாழ்க்கைக் கொடியோர் இன்று' என்றும் ' உருமும் உரருது அரவும் தப்பா காட்டு மாவும் உறுகண் செய்யா' என்றும் கூறியதோடு இன்றி, அந்நாட்டின் ஐந்திணைகளில் வாழும் மக்கள், வழியே வருவார்க்குத் தக்க முறையில் உணவளித்து உவக்கும் நிலையினையும் கூறப்பட்டுள்ளது. தொண்டை நாடு குறும்பர் நாடு என்றும் கூறப்பட்டது. குறும்பர் ஆடு மாடுகளை மேய்த்து வாழ்ந்தவர். அவர்களே தொண்டை நாட்டை 24 கோட்டங்களாகப் பிரித்தவர்கள். இவர்களே ஆதொண்ட சக்கரவர்த்தி கைப்பற்றித் தன் பெயர் துலங்கத் தொண்டை நாடு எனப் பெயர் இட்டான். என்பாரும் உளர். கரிகால் சோழன் செய்த ஆக்க வேலைகள் பல. அவ்ற்றுள் சில, காடுகொன்று நாடாக்கிக் குளம்தொட்டு வளம்பெருக்கிப் கோயிலோடு குடி நிறீஇ என்பன,


Comments

Popular posts from this blog

குறும்பர் இன மக்கள் பற்றிய கட்டுரை

குறும்பர் இன பழங்குடி மக்கள் குலதெய்வமாக வணங்கும் நடுகல்

குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!